Home
Scitech

டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை தோல்வி: ராக்கெட் ஏவுதளத்தை தூசு தட்டும் வடகொரியா.!

வடகொரியா அணுஆயுதங்களை முழுமையாக கைவிட்டு, கொரியா தீபகற்பத்தை அணுஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்துகிறது

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜொங்-உன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் சந்தித்து பேசினர். பின்பு சிங்கப்பூரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அணுஆயுதம் மற்றும் ஏவுகனை சோதணையை வடகொரியா
முழுமையாக நிறுத்தியது.

ராக்கெட் ஏவுதளத்தை தூசு தட்டும் வடகொரியா.!

மேலும் அமெரிக்காவின் கோரிக்கையை தெளிவாக ஏற்று வடகொரியா தனது அணு ஆயுத உலைகள், ஏவுகணை தளங்கள் உள்ளிட்டவற்றை சர்வதேச கண்காணிப்பாளர்களின் முன்னிலையில் இழுத்து மூடியது.

 அமெரிக்கா

அமெரிக்கா

வடகொரியா அணுஆயுதங்களை முழுமையாக கைவிட்டு, கொரியா தீபகற்பத்தை அணுஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்துகிறது. அதற்கு பிரதிபலனாக தங்கள் மீது விதித்துள்ள பொருளாதார தடைகளை முழுமையாக நீக்க வேண்டும் என வடகொரியா எதிர்பார்க்கிறது.

 2-வது உச்சி மாநாட்டில் சந்தித்து பேசினர்

2-வது உச்சி மாநாட்டில் சந்தித்து பேசினர்

அதன்பின்பு இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் கடந்த மாதம் இறுதியில் வியட்நாமில் நடந்த 2-வது உச்சி மாநாட்டில் சந்தித்து பேசினர். இந்த மாநாட்டில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் இரு தரப்பினர் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்த்த நிலையில் எந்த உடன்பாடும் எட்டப்படாமல் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது.

நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாது

நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாது

கடைசியில் சந்திப்பில் அதிருப்தி அடைந்த வடகொரியா இனி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும், அணு ஆயுத விவகாரத்தில் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாது என தெரிவித்தது. இருப்பினும் வடகொரியா அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடாத வரை அந்நாட்டுக்கு எதிர்காலம் கிடையாது என்று டிரம்ப் தற்சமயம் கூறியுள்ளார்.

டோங்சாங்-ரி-ராக்கெட்

டோங்சாங்-ரி-ராக்கெட்

அழிக்கப்படும் என வடகொரியா உறுதி அளித்திருந்த முக்கிய ஆயுத உலைகள், ராக்கெட் ஏவுதளங்களில் தற்சமயம் புனரமைப்பு பணிகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. வடகொரியாவின் தலைநகர் பியாங்காங்கில்
உள்ள டோங்சாங்-ரி-ராக்கெட் ஏவுதளத்தில் மறுகட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருவதை செயற்கைகோள் படங்கள் காட்டுகின்றன.

அணு ஆயுத சோதனை

அணு ஆயுத சோதனை

டோங்சாங்-ரி-ராக்கெட் ஏவுதளத்தில் மறைமுகமாக ஏவுகனை சோதனைகள் நடத்துவதாக சர்வதேச சமூகம் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும விரைவில் வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அன்மையில் வெளிவந்த மாரி 2 திரைப்படத்தில் " 'If you're Bad; I am your Dad' என்ற பஞ்ச் டயலாக் இடம்பெற்றிருக்கும், அந்த பஞ்ச் டயலாக் போல் அமெரிக்கா தனது தடைகளை முழுமையாக நீக்க முயற்சி செய்யவில்லை என்றால் தனது அணுஆயுத சோதனை நடைபெறும் என்று மறைமுகமாக கூறியுள்ளது வடகொரியா.

More from GizBot

Best Mobiles in India

English summary
Trump-warns-Kim-over-rebuilding-of-NKorea-rocket-site: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X