நிலா, செவ்வாய் என விண்வெளி முழுவதும் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்த வேண்டும் – டொனால்டு டிரம்ப்.!

  அமெரிக்காவின் வணிக நோக்கிலான விண்வெளித் திட்டங்கள் மற்றும் ஆய்வுகளை அந்நாட்டு அதிபர் டொனல்டு டிரம்ப் வெகுவாகப் பாரட்டியுள்ளார். நிலா மற்றும் செவ்வாய் கிரகங்களைப் பற்றிய ஆய்வுகளை மேப்படுத்தி, விண்வெளி ஆய்வில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த வேண்டும் என விஞ்ஞானிகளை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

  நிலா, செவ்வாய் விண்வெளி முழுவதும் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்த வேண்டும்.

  “விண்வெளி ஆய்வில் அமெரிக்காதான் எப்பொழுதும் முன்னோடியாக இருக்க வேண்டும். சீனா, ரஷ்யா அல்லது உலகின் பிற நாடுகள் நம்மை வழி நடத்துவதை நான் விரும்பவில்லை. நாம்தான் அவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். விண்வெளி ஆய்வுத் துறையில் அமெரிக்காவின் ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும் அதனை மேம்படுத்தவும் என் தலைமையிலான அரசு நிர்வாகம் அனைத்து வகையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்” என அமெரிக்க அதிபர் டொனார்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  அமெரிக்க விண்வெளிப் படை (America "Space Force" )

  அமெரிக்க விண்வெளிப் படை (America "Space Force" ) என்னும் ஒரு புதிய அமைப்பினை உருவாக்குமாறு, அமெரிக்காவின் இராணுவத் தலைமையகமான பென்டகனை (Pentagon) அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அது அமெரிக்க இராணுவத்தின் ஆறாவது பிரிவாக அமைய வேண்டும் என்னும் தன்னுடைய விருப்பத்தினைத் தெரிவித்துள்ளார். எனினும் இத்திட்டத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  விவாதங்கள் தொடங்கிவிட்டன

  அதிபர் டிரம்பின் இக்கருத்து பெண்டகன் அலுவலக அதிகாரிகளுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே விவாதத்தைத் தோற்றுவித்துள்ளது.

  "நாம் ஏற்கனவே வான்படையை வைத்துள்ளோம். இனி விண்வெளிப் படையைப் புதியதாகத் தோற்றுவிப்போம். தனித்ததனியாக இருந்தாலும் இரண்டும் சம அதிகாரத்துடன் இருக்கும்" என டிரம்ப் கூறுகிறார்.

  "விமானப் படை, இராணுவம், கடற்படை ஆகியவற்றின் நுண்ணறிவுப் பிரிவோடு தொடா்புடைய இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான முயற்சிகளை எங்களுடைய அமைப்பின் உயர்மட்டக் குழு தொடங்கியுள்ளது" என பென்டகன் செய்தித் தொடர்பாளர் டானா வொய்ட் (Dana White) கூறுகிறார்.

  நாடாளுமன்றத்தின் (Congress) அனுமதி வேண்டும்

  இராணுவத்தில் ஒரு புதிய பிரிவை உருவாக்குவது என்பது ஒன்றிரண்டு நாட்களில் முடியக்கூடிய விசயம் இல்லை. அமெரிக்க நாடாளுமன்றத்தில் இதற்கான முறையான அனுமதியைப் பெற வேண்டும்.

  "இராணுவத்தில் இப்படியொரு மாற்றத்தைக் கொண்டு வரும் எண்ணம் அதிபருக்கு இருந்தால் அதனை முதலில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் விவாதிக்க வேண்டும்" எனக் கூறுகிறார் டெமாக்ரடிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஆடம் ஸ்மித்.

  அமெரிக்காவின் கொடிதான் பறக்க வேண்டும்

  மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பவும், அதனைத் தொடர்ந்த ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்புவதற்கான ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தவும் நாசா விஞ்ஞானிகளைத் தான் அதிபராகப் பொறுப்பேற்றது முதல் டிரம்ப் கேட்டுக் கொண்டு வருகிறார். "விண்வெளி ஆய்வுகளில் நாம் முன்னணியில் இருந்தால் மட்டும் போதாது. அங்கு அமெரிக்காவின் ஆதிக்கம்தான் கொடிகட்டிப் பறக்க வேண்டும்" என டிரம்ப் கூறுகிறார்.

  தனியார் அமைப்புகளும் மிக விரைவாகவும் எளிதாகவும் ராக்கெட் மற்றும் செயற்கைக் கோள்களை ஏவுவதற்கு வசதியாக சில விதிமுறைகள் உருவாக்கப்படும் எனவும் டிரம்ப் உறுதியளித்துள்ளார்.

  மாறிவரும் நாசாவின் செயற்பாடுகள்

  அமெரிக்காவின் வணிக நோக்கிலான விண்வெளித் துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, அப்போல்லோ திட்டம் (1961 - 1972), ஸ்பேஸ் ஷட்டில் திட்டம் (1981 - 2011 ) ஆகியவற்றுக்குப் பிறகு ராக்கெட்டை ஏவும் நிறுவனம் என்கின்ற நிலையிலிருந்து தன்னை மாற்றிக் கொண்டுள்ளது.

  2012 ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்குத் தேவையானவற்றை (International Space Station) வழங்குவதற்காக SpaceX , Orbital ATK ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

  2011 ஆம் ஆண்டிலிருந்து ரஷ்யாவின் சோயுஸ் (Soyuz) விண்கலத்தின் மூலமாகத்தான் அமெரிக்க வீரர்களை விண்வெளிக்கு நாசா அனுப்பி வருகிறது.


  SpaceX மற்றும் Boeing ஆகிய நிறுவனங்கள் அடுத்த ஆண்டு முதல் விண்வெளியின் சுற்றுவட்டப் பாதைக்கு அமெரிக்க வீரர்களை அழைத்துச் செல்லத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  சர்வதேச விண்வெளி அமைப்பு தனியாரிடம் செல்கிறது ...

  2025 ஆம் ஆண்டுக்குப் பிறகு சர்வதேச விண்வெளி நிறுவனத்தைக் (ISS) கவனிக்கும் பொறுப்பை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு டிரம்ப் விரும்புகிறார். அதன் மூலம் நாசாவின் ஆய்வுத் திட்டங்களுக்கும், நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்திற்கும் அதிக கவனம் செலுத்த முடியும் டின டிரம்ப் நம்புகிறார். "இந்த முறை விண்வெளியில் எங்களுடைய நீண்ட கால இருப்பை நாங்கள் உறுதி செய்வோம்" என டிரம்ப் கூறுகிறார்.

  மிகவும் சக்தி வாய்ந்த ராக்கெட்

  உலகம் இதுவரை கண்டிராத மிகவும் சக்தி வாய்ந்த ராக்கெட்டை உருவாக்கும் முயற்சியில் நாசா இறங்கியுள்ளது. இந்த ராக்கெட்டிற்கு விண்வெளி ஏவு அமைப்பு (Space Launch System - SLS ) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது அமெரிக்க விண்வெளி வீரர்கள் மற்றும் அவர்களுக்குத் தேவையான கருவிகளை நிலவுக்கும், செவ்வாய் கிரகத்துக்குத் எடுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது.

  தனியார் துறையினரின் பங்களிப்பு

  இத்திட்டப் பணிகளில் தனியார் விண்வெளி நிறுவனங்களின் பங்களிப்பும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலவின் மேற்பரப்புக்கு உபகரணங்களை அனுப்புவதற்காக நாசா ஏற்கனவே தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. "பெரும் செல்வம் படைத்தவர்கள் ராக்கெட்டைப் போன்றவர்கள். நம்மை முந்திச் செல்பவர்கள் இன்னொரு அமெரிக்க செல்வந்தனாக இருந்தால் அது நல்லது" என்கிறார் டிரம்ப்.

  முக்கியமான இரண்டு விதிமுறை மாற்றங்கள்

  டிரம்ப் இரண்டு விதிமுறை மாற்றங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார். தனியார் செயற்கைக் கோள்களை முறைப்படுத்துதல் உட்பட சில அதிகாரங்களை பென்டகனிடமிருந்து வணிகத் துறைக்கு மாற்றுவது அதில் ஒன்று. மற்றொன்று, விண்வெளியில் போக்குவரத்தை மேலாண்மை செய்வது தொடர்பானது. விண்வெளியின் சுற்று வட்டப் பாதையில் ஏற்படும் மோதல்களை தவிர்ப்பதற்காக இந்த ஏற்பாடு.

  சுற்றும் செயற்கைக் கோள்களும் தேங்கும் சிதைவுகளும்

  உலக நாடுகள், பொது நன்மையைக் கருதி விண்வெளியின் சுற்று வட்டப் பாதையில் தேங்கும் சிதைவுகளைக் குறைக்க முன் வரவேண்டும் என வெள்ளை மாளிகையின் செய்திக் குறிப்பு ஒன்றின் மூலமாகக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஏறக்குறைய 20,000 சிதைவுகள் விண்வெளியில் தேங்கிக் கிடக்கின்றன. 800 அமெரிக்கச் செயற்கைக் கோள்கள் பூமியைச் சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. இந்த எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டே இருக்கிறது.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  Trump Wants toc Space, Moon and Mars : Read more about this in Tamil GizBot
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more