நிஜ டிரான்ஸ்பார்மர் : ஹெலிகாப்டர் போல மேலே எழுந்து விமானம் போல பறக்கும் வானூர்தி!

நகரங்களுக்கிடையேயான போக்குவரத்து முறைகளில், இது போன்ற மாற்றங்களும், கூடுதல் பயண முறைகளும் அவசியமான ஒன்று எனக் கூறுகிறார் டிரான்ஸ்சென்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சி.ஈ.ஓ கிரிக் ப்ரூல்.

|

டிரான்ஸ்சென்ட் ஏர் கார்பொரேசன் நிறுவனம் செங்குத்தாக டேக்ஆப் மற்றும் லேண்டிங் செய்யும் 6 இருக்கைகள் உடைய விமானத்தை வடிவமைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் அதன் வர்த்தகத்தில் புரட்சி ஏற்படும் எனவும் நம்புகிறது. வி.ஒய் 400என பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம் ஜனவரி 2024 முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதனால் மற்ற ஹெலிகாப்டர்களை விட 3 மடங்கு அதிக வேகத்தில், 405mphஎன்ற அளவில் பறக்கமுடியும். இதன்முக்கிய அம்சமே சாய்வான இறக்கை வடிவமைப்பு தான்.


தொழில்ரீதியாக பயணிக்கும் பயணிகளை இந்த விமானம் முக்கிய நகர மையங்களுக்கு நேரிடையாக கொண்டு சேர்க்கும் என கூறியுள்ள இந்நிறுவனம், விமானத்தின் முதல் பயணப்பாதை மற்றும் டிக்கெட் விலையையும் வெளியிட்டுள்ளது.

மணிக்கு 450 மைல் தொலைவு பயணிக்கும்

மணிக்கு 450 மைல் தொலைவு பயணிக்கும்

மணிக்கு 450 மைல் தொலைவு பயணிக்கும் என்பதால், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சான் பிரான்சிஸ்கோ நகரங்களுக்கிடையேயனா பயணநேரம் இந்த விமானத்தில் வெறும் 55 நிமிடங்கள் தான். நகரங்களுக்கிடையேயான போக்குவரத்து முறைகளில், இது போன்ற மாற்றங்களும், கூடுதல் பயண முறைகளும் அவசியமான ஒன்று எனக் கூறுகிறார் டிரான்ஸ்சென்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சி.ஈ.ஓ கிரிக் ப்ரூல்.

நேவிகேசன் சிஸ்டத்தை பயன்படுத்துகிறது

நேவிகேசன் சிஸ்டத்தை பயன்படுத்துகிறது

இந்த ஒரு விமானத்தினால் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கமுடியும். நெரிசல்மிகுந்த சாலைகளில் கார்களை தவிர்க்கலாம், விமானநிலையங்களை சுற்றி மாசுபாட்டை குறைக்கலாம்.பயண நேரம் குறைவதால் விமானத்தில் பயணக்கட்டணமும் குறையும். இந்த விமானம் 'ப்ளை பை ஒயர்' என்னும் நேவிகேசன் சிஸ்டத்தை பயன்படுத்துகிறது. அதனால் இந்த விமானத்தை மேனுவலாக கட்டுப்படுத்த முடியாது. எலக்ட்ரானிக் அல்லது ஆட்டோமேடேட் முறையில் தான் செய்ய முடியும். மேலும் இது கார்பன் பைபர் வடிவமைப்பு வசதியை பெற்றுள்ளதால், "முழு விமான ப்ராசூட்" ஆக செயல்படும்.

283 டாலர் கட்டணத்தில்

283 டாலர் கட்டணத்தில்

இதன் செயல்பாட்டிற்கு குறைந்த செலவே ஆகும் நிலையில் இரைச்சலும் குறைவாகவே இருக்கும். மேலும் இது ஜெட் போல பறப்பதற்கு மாற்றங்களை பெற்றிருப்பதால், இது மிக வேகமாக செல்லக்கூடியது. இந்த வி.டி.ஓ.எல் பல ஆண்டுகளாகவே பயன்பாட்டில் இருந்தாலும், புதிய தொழில்நுட்பங்களின் மூலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஆனாலும் வி.ஓய் மூலம் மேற்கொள்ளும் பயணங்கள் குறைவான கட்டணத்தில் கிடைக்காது.


பயணிகள் 283 டாலர் கட்டணத்தில் நியூயார்கிலிருந்து பாஸ்டனுக்கு வெறும் 36 நிமிடத்திலும், மான்ட்ரேலிருந்து டொரென்டோவிற்கு 325 டாலர் கட்டணத்தில் ஒரு மணி நேரத்திலும், லாஸ் ஏஞ்சல்ஸிருந்து சான்பிரான்சிஸ்கோவிற்கு 315 டாலர் கட்டணத்திலும் பயணிக்க முடியும்.

6க்கும் மேற்பட்ட சிட்டி சென்டர்

6க்கும் மேற்பட்ட சிட்டி சென்டர்

அமெரிக்கா முழுவதும் 46க்கும் மேற்பட்ட சிட்டி சென்டர் இணைகள் இருப்பதாக கூறியுள்ள ட்ரான்சென்ட், அதன் மூலம் தங்களது சேவை மலிவான விலையிலும், மற்ற விமான சேவைகளை காட்டிலும் வேகமாக இருக்கும் எனவும் கூறியுள்ளது.

இந்நிறுவனம் ஏற்கனவே நகரில் உள்ள ஹெலிபேட்களை பயன்படுத்துவதால், அதிக உட்கட்டமைப்பு வசதிகளை செய்ய வேண்டியதில்லை எனவும் கூறியுள்ளது. டிரான்சென்ட் நிறுவனம் நம்பிக்கை இருந்தால், நீங்களும் 2020ல் 3.5 மில்லியன் விலையில் சொந்தமாக வி.டி.ஓ.எல் வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
transformer-aircraft-405-mph-speed: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X