விண்கல் மீது குட்டி டின் வடிவிலான ரோபோட்கள் தரை இறக்கியது ஜப்பான் விண்வெளி ஏஜென்ஸி.!

இதற்காக இரண்டு கிலோ காப்பர் பொருளை அடித்து நொறுக்கி விண்கல்லின் மேற்பகுதியை அடைந்தது. இதில் ஏற்பட்ட பள்ளத்தில் இருந்து.

|

சூரிய குடும்பத்தின் உருவாக்கம் குறித்த ஆராய்ச்சியில், ஜப்பானை சேர்ந்த விண்வெளி ஏஜென்ஸி ஈடுபட்டு வருகிறது. இந்த ஜப்பான் விண்வெளி ஏஜென்ஸி, ஒரு விண்கல்லின் மீது இரு ரோபோட் ரோவர்களை தரையிறக்கி, ஆய்வை துவக்கி உள்ளதாக தெரிவித்துள்ளது. முன்னதாக, சூரிய குடும்பத்தின் உருவாக்கம் குறித்த ஆராய்ச்சியில், இந்நிறுவனம் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

விண்கல் மீது குட்டி டின் வடிவிலான ரோபோட்கள் தரை இறக்கியது ஜப்பான்.!

நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு விண்கல்லை ஆய்வு செய்யும் வகையில், அதன் மீது ரோபோட்டிக் ரோவர் தரையிறக்கப்படுவது இது முதல் முறை என்று ஜப்பான் ஏரோஸ்பேஸ் எக்ஸ்ப்ளோரேஷன் ஏஜென்ஸி தெரிவித்துள்ளது. அந்த ஏஜென்ஸி மேலும் கூறுகையில், ஹாயாபூசா2 விண்கலம் ஏவப்பட்ட ஒரு நாளுக்கு பிறகு, அது ரூகு என்ற விண்கல் மீது குக்கீ டின் வடிவிலான ரோபோட்கள் தரை இறக்கியது.

குறைந்த ஈர்ப்பு விசை

குறைந்த ஈர்ப்பு விசை

JAXA வெளியிட்ட அறிக்கையில், "ரூகு விண்கல் மீது தரையிறக்கப்பட்ட இரு ரோவர்களும் சாதாரணமாக செயல்பட்டு, ஆராய்ச்சியை துவக்கி உள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்கல்லில் குறைந்த ஈர்ப்பு விசை இருப்பதால், ரோவர்களால் 15 மீட்டர் (49 அடி) வரை குதித்து சுற்றி வர முடிகிறது. மேலும் ஒரு இடத்தில் தங்கியிருக்கும் வரை, விண்கல்லின் இயற்கை அம்சங்களை 15 நிமிடங்கள் வரை ஆய்வு செய்ய முடிகிறது. JAXA திட்ட மேலாளரான யூச்சி சூடா கூறுகையில், "சிறிய வளி மண்டல பொருட்களின் மீதான ஒரு புதிய அணுக முறையை நாங்கள் துவங்கி உள்ளதை எண்ணி, நாங்கள் பெருமைப்படுகிறேன்" என்றார்.

ஹாயாபூசா2

ஹாயாபூசா2

இது போன்ற ஒத்த விண்வெளி பயணத்தில், மற்றொரு விண்கல் மீது ரோவரை தரையிறக்க செய்யப்பட்ட முயற்சியில் இந்த ஏஜென்ஸி தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. ஹாயாபூசா2 விண்கலமும் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு, விண்கல்லின் மேற்பகுதியை ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளது.

இதற்காக இரண்டு கிலோ காப்பர் பொருளை அடித்து நொறுக்கி விண்கல்லின் மேற்பகுதியை அடைந்தது. இதில் ஏற்பட்ட பள்ளத்தில் இருந்து, பல்வேறு நூற்றாண்டுகளாக புயல் மற்றும் கதிரியக்கத்தில் மறைக்கப்பட்டதாக இருந்த பசுமையான பொருட்களை ஆய்விற்காக சேகரிக்கப்பட்டது. இதன்மூலம் பூமியில் உள்ள உயிரினம் மற்றும் பிரபஞ்சத்தின் உருவாக்கம் குறித்து கண்டறிய முடியும். இந்த விண்கலன் மூலம் விண்கல் மேற்புறத்தை ஆய்வு செய்வதற்காக, மொபைல் ஆஸ்டிராய்டு சர்பேஸ் ஸ்காட் (MASCOT) என்ற பிரஞ்சு-ஜெர்மன் தரையிறங்கு வாகனத்தை பயன்படுத்தி உள்ளது.

சர்பேஸ் ஸ்காட்

சர்பேஸ் ஸ்காட்

இந்த விண்கலன் மூலம் விண்கல் மேற்புறத்தை ஆய்வு செய்வதற்காக, மொபைல் ஆஸ்டிராய்டு சர்பேஸ் ஸ்காட் (MASCOT) என்ற பிரஞ்சு-ஜெர்மன் தரையிறங்கு வாகனத்தை பயன்படுத்தி உள்ளது.

 நாசா

நாசா

இதுதவிர நாசாவின் கோள் கண்டறியும் விண்கலமான TESS, தனது முதல் ஆராய்ச்சி படங்களை முன்னார் அனுப்பி இருந்தது. இதன்மூலம் எடுக்கப்பட்ட படத்தில் தென்பக்க வானத்தில் ஒரு நட்சத்திரத்தின் செழிப்பு மற்றும் மற்ற அண்ட பொருட்களை காண முடிந்தது. கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி 30 நிமிட கால அளவில், இந்த விண்கலத்தின் நான் விரிந்த கள கேமராக்களின் மூலம் இந்த படங்கள் எடுக்கப்பட்டன.

டிரான்ஸிட்டிங் எக்ஸோபிளேனட் சர்வே சாட்டிலைட்

டிரான்ஸிட்டிங் எக்ஸோபிளேனட் சர்வே சாட்டிலைட்

தற்போது, இந்த புதிய கோளின் சாத்தியமான இடமாற்றத்திற்கான வாய்ப்பை குறித்து ஆராய்ந்து வருகின்றனர். டிரான்ஸிட்டிங் எக்ஸோபிளேனட் சர்வே சாட்டிலைட் (TESS) மூலம் தென்பக்க மற்றும் வடபக்கத்தில் உள்ள வானத்தை இரண்டு வருடத்தில் ஆய்வு செய்ய உள்ளனர். அப்போது வானத்தில் இன்னும் கண்டறியப்படாத 85 சதவீத பகுதிகளை இந்த விண்கலம் ஆய்வு செய்ய உள்ளது. இந்த நிறுவனத்தின் கேப்லர் பயணத்தை விட, இது 350 தடவை அதிகம் ஆகும்

Best Mobiles in India

English summary
Touchdown Japan space probe lands new robot on asteroid: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X