அமெரிக்கன் மிஷைல் விருதை வென்ற இந்திய விஞ்ஞானி!

இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ-வின் தலைவர் சந்தோஷ் ரெட்டிக்கு அமெரிக்கன் மிஷைல் விருது வழங்குவதாக கடந்த மார்ச் 3 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது.{photo-feature}

|

அமெரிக்காவின் வெர்ஜினியாவில் செயல்படும் ஏரோஸ்பேஸ் டெக்னிக்கல் சொசைட்டியான அமெரிக்கன் இன்ஸ்ட்டியூட் ஆப் ஏரோனாட்டிக்ஸ் அண்ட் ஆஸ்ட்ரோனாடிக்ஸ் நிறுவனம் வழங்கும் "2019 மிஷைல் சிஸ்டம்ஸ் அவார்ட்" எனும் விருதை இந்தியாவை சேர்ந்த ஒருவர் வாங்கியுள்ளார்.

அமெரிக்கன் மிஷைல் விருதை வென்ற இந்திய விஞ்ஞானி!

இவர் இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ-வின் தலைவர் சந்தோஷ் ரெட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

தேச பங்களிப்பிற்காக விருது

தேச பங்களிப்பிற்காக விருது

"கடந்த 3 தசாப்தங்களாக இந்தியாவில் பல்வேறு பல்வகை மூலோபாய மற்றும் தந்திரோபாய ஏவுகணை அமைப்புகள், வழிநடத்தப்பட்ட ஆயுதங்கள், மேம்பட்ட ஏவியோனிக்ஸ் மற்றும் ஊடுருவல் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் செயல்படுத்துதல் ஆகியவற்றில் இவரது தேச பங்களிப்பிற்காக இந்த விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளார்" என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அக்னி-5 ஏவுகணை

அக்னி-5 ஏவுகணை

பாதுகாப்பு செயலராகவும் உள்ள சந்தோஷ், டி.ஆர்.டி.ஓ.யின் ஏரோஸ்பேஸ் பிரிவான "ஏரோனாட்டிகல் டெவலப்மெண்ட் ஏஜென்சி"யின் டைரக்டர்-ஜெனரலாகவும் உள்ளார். மேலும் இவர், 5,000 கி.மீ. தொலைவிற்கு மேற்பரப்பில் தாக்கும் நீண்ட தூர மூலோபாய ஏவுகணையான அக்னி-5க்கும் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார்.

ரோன்டெல் ஜே. வில்சன்

ரோன்டெல் ஜே. வில்சன்

இந்த ஏவுகணை விருதை வென்ற மற்றொருவரான ரோன்டெல் ஜே. வில்சன் , அரிசோனாவின் டக்சனில் உள்ள ரேதியான் மிஷைல் சிஸ்டம்-ன் ஓய்வுபெற்ற முதன்மை பொறியாளர் ஆவார்.

இவரது தொழில்நுட்ப தலைமை & புதுமை

இவரது தொழில்நுட்ப தலைமை & புதுமை

"உலகின் பிரதான ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளின் செயல்திறன் மற்றும் திறமைகளை மேம்படுத்தியதில் இவரது தொழில்நுட்ப தலைமை மற்றும் புதுமைகளுக்காக, வில்சன் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்" என்றும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

சொஸைட்டிஸ் டிபென்ஸ் ஃபோரமில்

சொஸைட்டிஸ் டிபென்ஸ் ஃபோரமில்

மேரிலாண்ட் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் மே 7-9 வரை நடைபெறவுள்ள சொஸைட்டிஸ் டிபென்ஸ் ஃபோரமில் இந்த விருது வழங்கப்பட்டாலும், சந்தோஷ் இந்தியாவில் தனது விருதை பெறுவார் என தெரிகிறது.

விருது அறிக்கை

விருது அறிக்கை

"ஏவுகணை அமைப்பு தொழில்நுட்பத்தை சிறப்பாக உருவாக்குதல் அல்லது ஏவுகணை அமைப்புகளின் ஈர்க்கப்பட்ட தலைமை பண்பையும் இந்த விருது அங்கீகரிக்கிறது "என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

85 நாடுகளில் இருந்து வந்த சுமார் 30,000 உறுப்பினர்கள்

85 நாடுகளில் இருந்து வந்த சுமார் 30,000 உறுப்பினர்கள்

85 நாடுகளில் இருந்து வந்த சுமார் 30,000 உறுப்பினர்கள் மற்றும் 95 பெருநிறுவன உறுப்பினர்களுடன் இந்த அமைப்பு, தொழில்துறை, கல்வித்துறை மற்றும் அரசாங்கத்தை ஒன்றிணைத்து, பொறியியல், விஞ்ஞானம், விண்வெளி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்த பாடுபட்டுவருகிறது.

டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஏவுகணை காம்ப்ளக்ஸ்

டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஏவுகணை காம்ப்ளக்ஸ்

ஏவுகணைகள் மற்றும் மூலோபாய அமைப்புகளின் இயக்குநர்-ஜெனரலான சந்தோஷ், டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஏவுகணை காம்ப்ளக்ஸ் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள மற்ற ஆய்வகங்களை தலைமை தாங்கி நடத்திவருகிறார்.

 சந்தோஷ் பங்களிப்பு

சந்தோஷ் பங்களிப்பு

மேம்பட்ட ஏவுகணை தொழில்நுட்பங்களின் தலைமை வடிவமைப்பாளரான சந்தோஷ், பல்வகை மூலோபாய மற்றும் தந்திரோபாய ஏவுகணை அமைப்புகள், வழிநடத்தப்பட்ட ஆயுதங்கள், ஏவியோனிக்ஸ் ஆகியவற்றின் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் செயல்படுத்துதல் ஆகியவற்றில் தனது பங்களிப்பை அளித்துள்ளார்.

1986 ஆம் ஆண்டு

1986 ஆம் ஆண்டு

1986 ஆம் ஆண்டில் ஹைதராபாத்தில் உள்ள அரசு நிறுவனமான பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகத்தில் சேர்ந்த சந்தோஷ் , பின்னர் முன்னாள் ஜனாதிபதி கலாமின் சிந்தனையில் உதித்த ஆராய்ச்சி மையமான இமாராட்-ல் இணைந்தார்.

பொறியாளர் சந்தோஷ்

பொறியாளர் சந்தோஷ்

ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூரில் உள்ள ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இருந்து பொறியியல் பட்டம் பெற்ற சந்தோஷ் , ஹைதராபாத் ஜேஎன்டியு-ல் எம்.எஸ் பட்டம் மற்றும் பி.ஹெச்டி பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Top Indian Defense Scientist Wins American Missile Award : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X