Home
Scitech

விண்வெளியில் சுவர் இல்லாமல் சித்திரம் பேசுதடி.! அரிய புகைப்படங்களின் சங்கமம்

இந்த காட்சிகளை பார்க்கும் போது விண்வெளியில் இப்படி எல்லாமா நடக்கின்றது என்று திகைப்பூட்டுகின்றது. மேலும் விண்வெளியில் சுவர் இல்லாம் சித்திரம் வரைவது சாத்தியமாகியுள்ளது. மேலும் இந்த சித்திரங்கள் பேசுகி

விண்வெளியிலும், பால்வெளி வீதியிலும் சூரிய குடும்பத்திற்கு அப்பால் பல பில்லியன் கி.மீ மீட்டர் தொலைவில் தினசரி ஏராளமான அற்புதங்கள் நடக்கின்றன. அவைகளை நாம் வெறும் கண்களால் பார்க்க முடிவதில்லை.

விண்வெளியே உலகில் பெரிதாக இருக்கின்றது. அங்கு ஏராளமான மர்மமங்கள் நிறைந்து பொதைத்து கிடக்கின்றன. அவைகளை தோண்டி எடுக்க முடியாத அளவுக்கு இருக்கின்றது.

விண்வெளியில்  சுவர் இல்லாமல்  சித்திரம் பேசுதடி.! அரிய புகைப்படங்கள்

மேலும், விண்வெளியிலும் சோலார் குடும்பத்திலும் ஏராளமான வண்ண வயமான காட்சிகளும் அரங்கேறி கொண்டிருக்கின்றன. மேலும் கோடிக் கணக்கில் ஓவியர்கள் ஓரே நேரத்தில் சித்திரங்களை வரைந்து தள்ளுகின்றன. இவைகள் எந்த அருங்காட்சியத்திலும் விற்பனைக்கோ இல்லை. கண்காட்சிக்கோ வைக்கப்படுவது இல்லை. நாம்மில் ஒரு சிலர் தான் இந்த அற்புதங்களை காண முடியவில்லை என்று ஏங்கி தவிக்கின்றன.

ஒருசிலர் தான் இந்த மனித வாழ்வில் கற்பனை உலகத்தில் சிறகடித்து பறந்து அவகளை எட்டி பிடித்து கொண்டு வருகின்றனர். தற்போது வெளியாகியுள்ள இந்த ஆச்சரியமான 10 புகைப்படங்கள் டெலிஸ்கோப்பால் எடுக்கப்பட்டது. இந்த காட்சிகளை பார்க்கும் போது விண்வெளியில் இப்படி எல்லாமா நடக்கின்றது என்று திகைப்பூட்டுகின்றது. மேலும் விண்வெளியில் சுவர் இல்லாம் சித்திரம் வரைவது சாத்தியமாகியுள்ளது. மேலும் இந்த சித்திரங்கள் பேசுகின்றன.

பறக்கும் தட்டு :

பறக்கும் தட்டு :

பல மில்லியன் தொலைவில் விண்வெளியில் நடந்த அதிசியங்கள் இவைகள். அங்கு பறக்கும் தட்டில் ஏலியன்கள் செல்வது போல் இருக்கின்றது இந்த காட்சி. மேலும், நட்சத்திரங்களும் நமக்கு ஓவியனை போல வரைந்துள்ளன.

காதலிக்கு முத்தம்:

காதலிக்கு முத்தம்:

ஆங்கில படத்தில் வரும் ஹீரோ ஹீரோயினுக்கு முத்தம் கொடுப்பது போல் இருக்கின்றது. மேலும், கீழே உள்ள படம் ஒரு வெளிநாட்டு குழந்தையை போல காட்சி அளிக்கின்றது.

கருவறை:

கருவறை:

தாயின் கருவறைக்குள் குழந்தை இருப்பது போல் இருக்கின்றது. புயல் வந்து தாக்கும் முன் செயற்கை கோள்கள் காட்டும் புகைப்படம் போல் ஆச்சரியமூட்டுவதாக இருக்கின்றது.

விண் கற்கள் புறப்பாடு :

விண் கற்கள் புறப்பாடு :

விண்வெளியில் உள்ள கோள்களில் இருந்து வெளிப்படும் வெப்பத்தல் அதில் இருந்து வெளியயே செல்லும் விண் கற்களின் தொகுப்பு. பார்ப்பதற்கு பிரமிப்பூட்டுகின்றன.

குடை கம்பியின் தோற்றம்:

குடை கம்பியின் தோற்றம்:

விண்வெளியில் உள்ள வாயுகள் மற்றும் கோள்களின் நட்சத்திரங்கள் உள்ளிட்டவைகளால் ஏற்படும் ஒளியால் வண்ண மிகு குடை கம்பியின் தோற்றம் போல் உருவாகியுள்ளது.

கண்விழி:

கண்விழி:

இந்த காட்சி விண்வெளியில் நடந்தாக இருந்தாலும், இது முற்றியிலும் மனிதனின் கண்ணை போல காட்சி அளிக்கின்றது. அதில் உள்ள பிளாஸ்மா மற்றும் லென்ஸ் பொறுத்தி உள்ளது போல் செந்நிறத்தில் இருக்கின்றது.

நார்னியா திரைப்படம்:

நார்னியா திரைப்படம்:

இந்த காட்சி நார்னியா ஹாலிவுட் திரைப்படத்தில் வரும் காட்சியை போல் இருக்கின்றது. மேலும் இதில் ஓநாய்களும், நரிகளும் அதன் குட்டிகளும் ஊளையிடுவது போல் இருக்கின்றது. இது கிராப்பிக்ஸ் காட்சி போல தத்ரூபமாக விண்வெளியில் நிகழ்ந்துள்ளது அபூர்வம்.

மணல் ஆர்ட்:

மணல் ஆர்ட்:

இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் மணல் ஓவியம் (சாண்ட் ஆர்ட்) வரைவது போன்று தத்ரூபமாக விண்வெளியில் நடந்த அற்புத காட்சி.

கலைடாஸ் கோப் காட்சி:

கலைடாஸ் கோப் காட்சி:

நாம் எல்லாம் சின்ன வயதில், ஓரே அளவுள்ள மூன்று கண்காடிகளை முக்கோண வடிவில் ஓட்டி பிறகு உடைந்த வண்ண வளையல்களை போட்டு, கலைடாஸ் கோப் உருவாக்கி இருப்போம். அதில் தெரியும் வளையல் துண்டுகளின் காட்சிகளை போல இருக்கின்றது. இதுவும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Best Mobiles in India

English summary
Top 10 Images Taken by the Hubble Space Telescope : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X