Home
Scitech

சீனா அமைக்கும் விண்வெளி மின்நிலையம்: வாயை பிளக்கும் அமெரிக்கா!

இந்நிலையில் விண்வெளியில் தனது முதல் மின்நிலையத்தை அமைத்து மின்சாரம் தயாரிக்கும் முடிவையும் அறித்துள்ளது. மேலும், இந்த திட்டத்தை செயல்படுத்தவும் ஆயத்தமாகி வருகின்றது.

எந்த ஒரு நாடும் இன்று வரை செய்யாத முயற்சியை சீனா தற்போது முன்னெடுத்து வருகின்றது. செயற்கை சூரியன் நிலவுதல், செயற்கை சந்திரனை நிலவுதல் இதன் மூலம் பொது மக்களுக்கு வெளிச்சம் கொடுத்தல் என்று திட்டங்களை அமைக்க முனைப்பு காட்டி வருகின்றது.

சீனா அமைக்கும் விண்வெளி மின்நிலையம்: வாயை பிளக்கும் அமெரிக்கா!

செயற்கை நிலவு, செயற்கை சூரியன் திட்டங்கள் மூலம் உலக வெப்ப மயமாதலை தடுக்க முடியும் என்றும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் விண்வெளியில் தனது முதல் மின்நிலையத்தை அமைத்து மின்சாரம் தயாரிக்கும் முடிவையும் அறித்துள்ளது. மேலும், இந்த திட்டத்தை செயல்படுத்தவும் ஆயத்தமாகி வருகின்றது.

 உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடு:

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடு:

சீனா தற்போது உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடு பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது. இந்த நிலையில் 8 பில்லியன் டாலர்கள் வருடாந்திர செலவு கணக்குப்படி விண்வெளியில், மின்நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளது. அங்கு கிடைக்கும் கிரீன் மின்சாரத்தை பயன்படுத்தவும் இதற்கான பணிகளும் அரங்கேறி வருகின்றது.

அமெரிக்காவுக்கு சவால் விடும் சீனா:

அமெரிக்காவுக்கு சவால் விடும் சீனா:

மேலும், அமெரிக்கா பொருளதாரம், ராணுவம், தொழில்நுட்பம் என துறைகளில் முதல் இடத்தில் இருந்தாலும், இந்த திட்டத்தை பின்தங்கியுள்ள சீனா அமைக்க இருப்பது பெரும் வியக்கதக்க வகையில் இருக்கின்றது. இது அமெரிக்காவுக்கு சாவல் விடும் திட்டமாகவும் இருகின்றது. நேர் எதிர் போட்டியாளராகவும் சீனா இருக்கின்றது.

சோதனை தளம் உருவாக்கம்:

சோதனை தளம் உருவாக்கம்:

சீனா விஞ்ஞானிகள் ஏற்கனவே சோங்சிங்கில் நகரில் மின் நிலைய சோதனை தளத்தை உருவாக்கியுள்ளனர். இந்தி மின் நிலையம் சோலார் அமைப்பு சாரந்தாக இருக்கும். மேலும், 2021, 2025ம் ஆண்டுகளுக்கு இடையில் ஒரு சிறிய மின் நிலையத்தை உருவாக்கி 2030ம் ஆண்டுக்குள் ஒரு மெகாவாட் அளவிலான சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்க முடிவு செய்துள்ளனர்.

மேலும், பெரிய ஜெனரோட்டர்கள் உருவாக்கியும் இயற்கையாக கிடைக்கும் மின்வசதியை பெறும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இதுகுறித்து சீனா அரசு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பு தெரிவித்து உள்ளது.

சேஞ்ச்-4 விண்கலன்:

சேஞ்ச்-4 விண்கலன்:

சீனா கடந்த ஜனவரி 3ம் தேதி நிலவில் சேஞ்ச்-4 என்ற விண்கலனை நிலவில் தரையிறங்கியுள்ளது. இது பல்வே ஆய்வுகளையும் செய்து வருகின்றது. ஆரம்பால நட்சத்திரங்கள் எரிந்து விட்டது. பிரபஞ்சம் வெடிப்புக்கு பிறகு இருளில் இருந்து எவ்வாறு உருவானது என்பதை புரிந்து கொள்ள சேஞ்ச்-4 விண்கலம் உதவியுள்ளது. மேலும், அங்கு நிலவும் தட்பவெப்ப நிலைகளையும் கொண்டுடே மின் நிலையம் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றது சீனா.

 பருத்தி விதைகள் முளைத்தன:

பருத்தி விதைகள் முளைத்தன:

சீனா விண்வெளி நிலையம் அனுப்பிய சேஞ்ச்-4 விண்கலன் மூலம் நிலவில் பருத்தி விதைகளை நடவு செய்யப்பட்டது. மேலும், அங்கு பருத்தி விதைகள் முளைக்க தொடங்கி விட்டது. மேலும், அந்த விண்கலன் மூலம் உருளைக்கிழங்கு, கனோலா, பட்டாம் பூச்சிமுட்டை உள்ளிட்டவைகளையும் வைத்து சோதனை செய்து வருகின்றது.

 சந்திரனின் தென் துருவம்:

சந்திரனின் தென் துருவம்:

விண்கலனை சந்திரனின் தென்துருவப்பகுதியிலும் தரையிறக்க திட்டமிட்டுள்ளது. அங்கு நிலவும் காலச் சூழல்கள் குறித்து பல்வேறு ஆய்வுகளை சீனா மேற்கொண்டு வருகின்றது. இது வரலாற்று சுவடுகளாவும் இருக்கும். அங்கு மனிதர்களா வாழ சூழ்நிலைகள் இருக்குமா என்றும் ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றது.

அணு உலைகளுக்கு குட்பாய்:

அணு உலைகளுக்கு குட்பாய்:

விண்வெளியில் சோலார் மின் நிலையம் அமைப்பதன் மூலம் உலகில் அபாயகரமான விளங்கும் அணு உலைகளுக்கு நாம் குட்பாய் சொல்லி விட வேண்டியதுதான். இந்த சீனாவின் பெரும் முயற்சியை நாம் வரவேற்றே ஆகவேண்டும். இதை கண்டு அமெரிக்காவும் வாயை பிளந்துள்ளது.

உலகை மிரட்டும் சீனா:

உலகை மிரட்டும் சீனா:

எதிர்காலத்திற்கு தேவையான அனைத்து வசதிகளிலும் சீனா தற்போது இறங்கி வருகின்றது. சீனாவின் இந்த நடவடிக்கை பல்வேறு நாடுகளையும் கவர்ந்து இருக்கின்றது. எதிர் காலத்தில் சோலார் என்படும் கிரீன் எனர்ஜி மூலம் தான் நாம் மின்சாரம் பெற முடியும் என்பது நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
to infinity and beyond china wants to build the first power station in space: Read more at this tamil.gizbot.com
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X