உணவாக மாறிய டைட்டானிக் கப்பல்! என்ன நடந்தது தெரியுமா?

|

ஒரு நூற்றாண்டிற்கு முன்னால் கடலுக்குள் மூழ்கிய ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பல், அதன் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஒரு புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உணவாக மாறிய டைட்டானிக் கப்பல்! என்ன நடந்தது தெரியுமா?

கடலில் உள்ள உப்பு மற்றும் உலோகம் தின்னும் பாக்டீரியாக்களால் மிக விரைவாக இந்த டைட்டானிக் கப்பல் அழிந்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

1912 ஆம் ஆண்டு முதல் பயணத்தைத் துவங்கிய டைட்டானிக்

1912 ஆம் ஆண்டு முதல் பயணத்தைத் துவங்கிய டைட்டானிக்

நியூயார்க்கில் உள்ள சவுத்தாம்ப்டன் துறைமுகத்திலிருந்து ஏப்ரல் 10 ஆம் தேதி, 1912 ஆம் ஆண்டு டைட்டானிக் கப்பல் தனது முதல் பயணத்தைத் துவங்கியது. இந்தப் பயணத்தின் போது எதிர்பாராதவிதமாக டைட்டானிக் கப்பல் பனிப்பாறையில் மோதி அட்லாண்டிக் ஆழ்கடலில் சுமார் 2,224 பயணிகளுடன் மூழ்கியது. இந்த விபத்தில் சுமார் 1,500க்கும் மேற்பட்ட பயணிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

கருப்பு தினமாக பார்க்கப்படும் தினம்

கருப்பு தினமாக பார்க்கப்படும் தினம்

ஆழ்கடல் நீரில் மூழ்கி 1,500 பேர் உயிரிழந்த சம்பவம் உலக வரலாற்றில் ஒரு கருப்பு தினமாக பார்க்கப்படுகிறது. யாராலும் இந்த சம்பவத்தை மறந்திருக்க முடியாது, அதேபோல் யாராலும் டைட்டானிக் கப்பலையும் மறந்திருக்க முடியாது. தற்போது இந்த டைட்டானிக் கப்பல் கடலில் வெகு வேகமாக அழிந்து வருகிறது.

பட்ஜெட் விலையில் தெறிக்கவிடும் 55இன்ச் டாப்-5 ஸ்மார்ட் டிவிகள்.!

ஆழ்கடல் டைவர் குழு ஆய்வு

ஆழ்கடல் டைவர் குழு ஆய்வு

14 வருடங்களுக்கு முன்னால் அட்லாண்டிக் ஆழ்கடலுக்குச் சென்று, டைட்டானிக் கப்பல் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அதே ஆழ்கடல் டைவர் குழு, மீண்டும் டைட்டானிக் கப்பலை ஆய்வு செய்து சோதிப்பதற்காக இந்த மாதம் சென்றபோது இந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

உண்ணும் உணவாக மாறிய டைட்டானிக்

உண்ணும் உணவாக மாறிய டைட்டானிக்

அட்லாண்டிக் கடலின் 12,500 அடி ஆழத்தில் கிடக்கும் இந்த டைட்டானிக் கப்பலை, இந்தக் குழு ஆகஸ்ட் மாதம் மட்டும் சுமார் ஐந்து முறை சோதனை செய்துள்ளது. இந்த சோதனையின் போது டைட்டானிக் கப்பல் வெகு வேகமாக உப்பினாலும், உலோகம் உண்ணும் பாக்டீரியாக்களாலும் கடலில் உள்ள அழுத்தத்தினாலும் டைட்டானிக் கப்பல் மிக வேகமாக அழிந்து வருகிறது என்பதைக் கண்டறிந்துள்ளது.

போலிஏடிஎம் கார்டு: முதியவர்களிடம் பணம் அபேஸ்-கொள்ளையன் சிக்கியது எப்படி?

காணாமல் போன பாத் டப்

காணாமல் போன பாத் டப்

டைட்டானிக் கப்பலில் அழிந்துவரும் இடங்களில் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது கப்பலின் கேப்டன் இருந்த கேப்டன் அறைதான். இதற்கு முன்பு வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட கேப்டனின் பாத் டப் தற்பொழுது காணாமல் போய்விட்டது. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் உலோகம் உண்ணும் பாக்டீரியாக்கள் அதைத் தின்று அழித்துவிட்டது.

டைட்டானிக் வேகமாக அழிவதற்கு இதுவே காரணம்

டைட்டானிக் வேகமாக அழிவதற்கு இதுவே காரணம்

இந்த உலோகம் தின்னும் பாக்டீரியாக்கள் இயற்கையானது தான் என்று விஞ்ஞானி லோரி ஜான் தெரிவித்துள்ளார். ஆனால் டைட்டானிக் கப்பல் வெகு வேகமாக அழிந்து வருவதற்கு இந்த பாக்டீரியாக்கள் ஒரு குழுவாகச் செயல்படுவதே முக்கிய காரணம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

வைரல் செய்தி: அமிதாப்பச்சன் பதிவிட்ட இளம் பெண்ணின் ட்வீட்! ஹோலா ஹோலா!

நம் நெஞ்சங்களில் டைட்டானிக்

நம் நெஞ்சங்களில் டைட்டானிக்

ஆழ் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் இன்னும் சில காலங்களில் இல்லாமல் போய்விடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் நம் நெஞ்சங்களில் டைட்டானிக் கப்பல் மற்றும் அதன் காதல் கதை என்றும் நிலைத்திருக்கும் என்று சந்தேகமில்லாமல் கூறிக்கொள்ளலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Titanic Will Vanish In The Atlantic In A Few Years : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more