பிரம்மாண்ட விண்கல்லின் சிறு பகுதியே 2017ல் ஜப்பானை தாக்கியது! பயணித்ததை நாம் அறிவோம்.!

|

ஏப்ரல் 28, 2017 அன்று அதிகாலை நேரத்தில், ஜப்பானின் கியோட்டோ நகரின் வான்பரப்பை கிழித்துக்கொண்டு ஒரு சிறிய நெருப்புபந்து பயணித்தது. இப்போது அதுதொடர்பாக ​​சோனோட்டாக்கோ விண்கல் சர்வே நிறுவனத்தால் சேகரிக்கப்பட்ட தரவுகளுக்கு நன்றி கூறியே ஆகவேண்டும். இத்தரவுகளின் மூலம் ஆராய்ச்சியாளர்கள் அந்த நெருப்புபந்து பூமிக்கு அச்சுறத்துதலாக இருக்கும் மிகப்பெரிய விண்கல்லின் ஒரு துண்டு தான் என்று தீர்மானித்துள்ளனர்.

 அந்த விண்கல் மிகவும் சிறியது

அந்த விண்கல் மிகவும் சிறியது

ஜப்பானின் மீது எரிந்த நிலையில் பயணித்த அந்த விண்கல் மிகவும் சிறியது. சோனோட்டாக்கோ தரவுகளை ஆராய்ந்தபோது, ஆராய்ச்சியாளர்கள் இந்த பொருள் வளிமண்டலத்தில் சுமார் 1 அவுன்ஸ் (29 கிராம்) நிறை கொண்டுள்ளதாகவும், 1 அங்குலம் (2.7 சென்டிமீட்டர்) அகலமுடையதாகவும் இருப்பதாக தீர்மானித்தனர். ஆகையால் இது யாருக்கும் அச்சுறுத்தலாக இல்லை. ஆனால் இது போன்ற சிறிய விண்கற்கள் சுவாரஸ்யமானவை. ஏனென்றால் அவற்றை உருவாக்கிய பெரிய பொருள்களின் தரவுகளை வழங்க முடியும். இந்த விஷயத்தில், ஆராய்ச்சியாளர்கள் சிறிய பாறையை வைத்து அதன் விண்கல்லை கண்டுபிடித்துள்ளனர். அது 2003 YT1 என்ற பெயரில் அறியப்படுகிறது .

 பைனரி விண்கல்

பைனரி விண்கல்

சுமார் 1.2 மைல் (2 கிலோமீட்டர்) அகலமுள்ள உள்ள ஒரு பெரிய பாறையால் ஆன பைனரி விண்கல்லான இந்த 2003 YT1-ஐ, 690 அடி (210 மீட்டர்) நீளமுள்ள ஒரு சிறிய சிறுகோள் சுற்றுப்பாதையில் சுற்றுவருகிறது . 2003 இல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பைனரி விண்கல், அடுத்த 10 மில்லியன் ஆண்டுகளில் பூமியை ஒரு கட்டத்தில் தாக்குவதற்கு 6% வாய்ப்பு உள்ளது. இது நமது வாழ்நாளில் யாரையும் தாக்குவதற்கு வாய்ப்பில்லை என்றாலும், ஆராய்ச்சியாளர்கள் இதை "தீவிர அபாயகரமான பொருள்" என்று வகைபடுத்தியுள்ளனர்.

திடீரென உயர்நிலைப் பள்ளிக்கு விசிட் அடித்த அமேசான் நிறுவனர்.! வைரலாகும் வீடியோ:காரணம் என்ன தெரியுமா?திடீரென உயர்நிலைப் பள்ளிக்கு விசிட் அடித்த அமேசான் நிறுவனர்.! வைரலாகும் வீடியோ:காரணம் என்ன தெரியுமா?

பூமியைக் கடந்து செல்லவில்லை

பூமியைக் கடந்து செல்லவில்லை

பைனரி 2017 இல் பூமியைக் கடந்து செல்லவில்லை என்பதால் அந்த நெருப்புபந்து மற்றும் அதன் விண்கல் இடையே உடனடியான வெளிப்படையான இணைப்பு இல்லை. ஆனால் அந்த நெருப்புபந்து வானில் எவ்வாறு பயணித்தது என்பதை ஆராய்ந்த விஞ்ஞானிகள், விண்வெளி வழியாக அப்பொருளின் சுற்றுப்பாதையை பின்னோக்கி ஆய்வு செய்தனர். இதன் மூலம் 2003 YT1 உடன் அந்த நெருப்புகோளை அதிக அளவு உறுதியாக பிணைத்துள்ளனர்.

பெரிய தூசி படலத்தின் ஒரு பகுதி

பெரிய தூசி படலத்தின் ஒரு பகுதி

2003 YT1 இலிருந்து இந்த சிறிய பாறை எவ்வாறு பிரிந்தது என்று தங்களுக்குத் தெரியவில்லை என்று கூறிய ஆராய்ச்சியாளர்கள் , ஆனால் இது அந்த விண்கல்லிருந்து பிரிந்த ஒரு பெரிய தூசி படலத்தின் ஒரு பகுதி என்று நம்புகிறார்கள். அந்த படலம் எவ்வாறு உருவானது என்பதற்கான சில சாத்தியமான விளக்கங்களை அவர்கள் வழங்கியுள்ளனர். ஒருவேளை சிறிய விண்கற்கள் பைனரியில் உள்ள பெரிய சிறுகோளைத் தாக்கி, அதாவது ஒரு பாறைச் சுவரைத் தாக்கும் தோட்டாக்களைப் போல துண்டு துண்டாக்கியிருக்கலாம் அல்லது வெப்பத்தில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக சிறுகோளின் மேற்பரப்பை உடைத்து, சிறிய துண்டுகளாக மாற்றியிருக்கலாம் என்கின்றனர்.

மோட்டோ ஜி8 பிளே மற்றும் மோட்டோ ஜி6 பிளே சாதனங்கள் அறிமுகம்: விலை மற்றும் விபரங்கள்.!மோட்டோ ஜி8 பிளே மற்றும் மோட்டோ ஜி6 பிளே சாதனங்கள் அறிமுகம்: விலை மற்றும் விபரங்கள்.!

பூமியில் காணப்படும் கற்களின் பெரிய உருவம்

பூமியில் காணப்படும் கற்களின் பெரிய உருவம்

ஆராய்ச்சியாளர்கள் விளக்கிய மற்றொரு வாய்ப்பு என்னவென்றால், 2003 YT1 அமைப்பை முதன்முதலில் உருவாக்கிய செயல்முறையின் விளைவாகவே இந்த சிறுபாறை துண்டுகள் உருவாகியிருக்கலாம்.

பெரும்பாலான மக்கள் இந்த விண்கற்கறை மிகப்பெரிய பாறைகள் என்றும், பூமியில் காணப்படும் கற்களின் பெரிய உருவம் என்றும் கற்பனை செய்கிறார்கள். ஆனால் 2003 YT1ஆய்வாளர்கள் இதுகுறித்து கூறுகையில்,இது கடந்த 10,000 ஆண்டுகளில் ஒரு கட்டத்தில் இரண்டு சுற்றுப்பாதை கிரகங்களின் ஒன்றிணைந்த ஈர்ப்பு விசையால் தளர்வாக பிணைக்கப்பட்டுள்ள ஒரு "இடிந்த குவியல்" என்கின்றனர். தனித்தனி சிறுகோள்களை ஒன்றாக வைத்திருக்கும் சக்திகள் பலவீனமாக இருக்கலாம். மேலும் இரண்டு குவியல்களும் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு முறை ஒன்றுக்கொன்று குழப்பமாக சுழலும்போது, ​​அவை தங்களின் பகுதிகளை அதிகமாக விண்வெளியில் பறக்க விடக்கூடும்.

திகிலூட்டுகிறது

திகிலூட்டுகிறது

இவற்றை காட்டிலும் மிகவும் கவர்ச்சியான சாத்தியக்கூறுகள் உள்ளன என இதன் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். திரவ பனிகட்டியால் உருவான சிறுகோளின் மேற்பரப்பில் இருந்து பதங்கமாதல் நிகழ்ந்து (திடத்திலிருந்து வாயுவாக மாறுதல்) திறந்தவெளியில் சிறிய பனிக்கட்டிகளாக மாறலாம். ஆனால் இதுவும் பிற மாதிரிகளும் வேறுபட்டவை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இப்போதைக்கு பூமிக்கு ஒரு பெரிய விண்கல்லின் சிறுபகுதி பயணித்ததை நாம் அறிவோம். அந்த சிறிய விண்கல் சார்ந்துள்ள நீரோட்டத்தின் மற்ற சிறு விண்கற்கள் சில நேரங்களில் பூமியின் வளிமண்டலத்தில் கவனிக்கப்படாமல் நுழைகின்றன. ஒரு கட்டத்தில் அவற்றின் பெரிய விண்கற்களும் அதன் சிறு துண்டுகளை பின்தொடர்ந்து பூமியை தாக்கக்கூடும். ஆனால் அந்த நெருப்புபந்து மிகவும் பெரியதாக இருக்கும் என்று திகிலூட்டுகிறது அந்த ஆய்வுக்கட்டுரை.

Best Mobiles in India

English summary
Tiny Piece of Giant Asteroid which flew over Japan might One Day Threaten Earth: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X