டைம்டிராவலரை படம் பிடித்த கேமரா! அதிர்ச்சி வீடியோ..!

அந்த மர்ம காணொளியில் பதிவான காட்சிகள் அதிர்ச்சியூட்டுவதாக அமைந்துள்ளது. டைம்டிராவலர்கள் பூமியில் இருப்பதற்கான வலுவான ஆதாரமாக இந்த கண்காணிப்பு கேமரா பதிவு அமைந்துள்ளதாக சிலர் கூறுகின்றனர்.

|

சமீபத்தில் ஏலியன் டாக்ஸ் எனும் இணையதளத்திற்கு மின்னஞ்சல் வாயிலாக சிசிடிவி எனப்படும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காணொளி ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மர்ம காணொளியில் பதிவான காட்சிகள் அதிர்ச்சியூட்டுவதாக அமைந்துள்ளது.

டைம்டிராவலரை படம் பிடித்த கேமரா! அதிர்ச்சி வீடியோ..!

டைம்டிராவலர்கள் பூமியில் இருப்பதற்கான வலுவான ஆதாரமாக இந்த கண்காணிப்பு கேமரா பதிவு அமைந்துள்ளதாக சிலர் கூறுகின்றனர்.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள கிடங்கு ஒன்றின் கண்காணிப்பு கேமராவில் இந்த காணொளி பதிவானதாக தெரிகிறது. அந்த காணொளியில், கிடங்கு உள்ள பகுதிக்கு வரும் மர்ம நபர் ஒருவர் அங்கு எதையோ தேடிக்கொண்டிருக்கிறார்.

டைம்டிராவலரை படம் பிடித்த கேமரா! அதிர்ச்சி வீடியோ..!

சிறிது நேர தேடலுக்கு பிறகு தரையில் இருந்து ஒரு விசித்திரமான பொருளை எடுக்கிறார். அந்த பொருள் சிறிது நேரம் விட்டு விட்டு ஒளிர்கிறது. திடீரென அந்த மர்ம மனிதர் மறைந்து விடுகிறார்.

டைம்டிராவலரை படம் பிடித்த கேமரா! அதிர்ச்சி வீடியோ..!

கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த நம்பமுடியாத வீடியோ உண்மையான டெலிபோர்டேசனா அல்லது ஏதேனும் அமானுஷ்ய நிகழ்வா என இந்த காணொளியை பார்த்தவர் அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் உள்ளனர். இதில் டெலிபோர்டேசன்(Teleportation) என்பது ஒரு பொருளையோ அல்லது ஆற்றலையோ ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு , அதன் உண்மையான இடத்தை கடக்காமல் வேறு ஏதேனும் ஒரு ஊடகத்தின் வாயிலாக கடக்கும் கோட்பாடு ஆகும்.

நீங்களும் இந்த மர்ம வீடியோவை பார்த்துவிட்டு, இது ஏதேனும் அமானுஷ்ய நிகழ்வா அல்லது டைம் டிராவலர்கள் நடமாட்டமா அல்லது ஏலியன்களின் சித்து விளையாட்டா என உங்களது கருத்துக்களை பதிவிடுங்கள்.

டைம் டிராவல் : யாரும் அறிந்திராத அரிய தகவல்கள்.!!

டைம் டிராவல் : யாரும் அறிந்திராத அரிய தகவல்கள்.!!

டைம் டிராவல் அதாவது காலப்பயணம் இன்று வரை கனவாகவே இருக்கின்றது. உண்மையில் இது எந்தளவு சாத்தியம் அல்லது காலப்பயணம் மேற்கொள்ள முடியுமா என பல்வேறு சந்தேகங்கள் மனதில் எழுகின்றன. ஆனால் இவை எதற்கும் இன்று வரை பதில் இல்லை.

கற்பனையில் காலப்பயணம் சுவார்ஸ்யமான விடயமாக தெரிந்தாலும், இதனை வெற்றிகரமாக மேற்கொள்வது என்பது இன்றைய தொழில்நுட்ப யுகத்திலும் மிகவும் கடினமான ஒன்றாகும். இதோடு இதில் பல்வேறு சிக்கல்களும் இருக்கின்றது.

காலப்பயணம் சாத்தியமா, அல்லது சாத்தியமற்றதா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். காலப்பயணம் குறித்து யாரும் அறிந்திராத சில அரிய தகவல்களை தான் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!

ஸ்டீபன் ஹாக்கிங்

ஸ்டீபன் ஹாக்கிங்

காலப்பயணம் குறித்து கேட்ட போது உண்மையில் காலப்பயணம் மேற்கொள்வது என்பது சாத்தியமற்றது என பிரபல கோட்பாட்டு இயற்பியலாளரான ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் தெரிவித்திருந்தார்.

டைம் டிராவல் குறித்த பல்வேறு கோட்பாடுகளில் டைம் டிராவல் மூலம் ஏர்படும் பிரச்சனைகளில் இருந்து இந்த பிரபஞ்சம் தன்னை தானே காத்து கொள்ளும் என்பதை தெரிவிக்கின்றன.

அழிவு

அழிவு

காலப்பயணம் மேற்கொள்ள செய்யும் இயந்திரங்கள் குறிப்பிட்ட நேரம் குறித்த பயணிக்க ஆரம்பிக்கும் போதே அழிந்து விடும் என பிரபல இயற்பியலாளரான கிப் த்ரோன் தெரிவித்துள்ளார்.

சட்டம்

சட்டம்

இயற்பியில் மூலம் முற்றிலும் காலப்பயணம் இயந்திரங்கள் தயாரிப்பது சாத்தியமற்றது என்பதை உணர்ந்த ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் டைம் டிராவல் குறித்த ஆய்வுகளுக்கு தடை செய்ய சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

டைம் டிராவல் வழிமுறைக்கு தடை கோரும் வகையில் 'க்ரோனோலாஜி ப்ரோடெக்ஷன் கான்ஜெச்சர்' என்ற பெயரில் சட்டம் இயற்ற வேண்டும் என கூறி வந்த ஸ்டீபன் ஹாக்கிங் கோரிக்கை விடுத்த போதும் இன்று வரை இச்சட்டம் இயற்றப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாற்றம்

மாற்றம்

சட்டம் இயற்றப்படாததை தொடர்ந்து ஹாக்கிங் 'காலப்பயணம் மேற்கொள்வது சாத்தியமாகலாம், ஆனால் இது நடைமுறை இல்லை' என தெரிவித்தார்.

எதுவும் மாறாது

எதுவும் மாறாது

காலப்பயணம் மேற்கொள்ளும் போது பிரபஞ்சம் மாறாது, இதனால் காலப்பயணத்தினை உண்மையில் உணரவே முடியாது.

வியப்பு

வியப்பு

டைம் டிராவல் மேற்கொள்வதில் பல்வேறு முரண்பாடுகள் இருக்கின்றது, இதனால் ஹாக்கிங் டைம் டிராவல் மேற்கொள்ள முடியாது என கூறியதில் வியப்பு ஏதேும் இல்லை.

ஒப்புதல்

ஒப்புதல்

இதனை அமோதிக்கும் வகையில் தி கிராண்ட்பாதர் பாரடாக்ஸ் (தாத்தா முரண்பாடு) அமைந்துள்ளது. இதில் ஒரு வேலை காலப்பயணம் மேற்கொண்டு உங்களது தாத்தவை கொல்வீர்களானால், நீங்களும் மரணித்து விடுவீர்கள்.

குழப்பம்

குழப்பம்

தி கிராண்ட்பாதர் கோட்பாட்டின் விளக்கம் பல்வேறு முயற்சிகளை கடந்தும், தொடர்ந்து குழப்பம் நிறைந்ததாகவே இருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

விளக்கம்

விளக்கம்

தி கிராண்ட்பாதர் கோட்பாட்டிற்கு சிறந்த விளக்கம்தனை அமெரிக்க இயற்பியளாலரான ஹக் எவரெட் III என்பவர் மெனி-வேல்டுஸ் இன்டர்பிரடேஷன் many-worlds interpretation (MWI) என்ற கோட்பாட்டை முன்வைத்து விளக்கினார்.

கோட்பாடு

கோட்பாடு

இந்த கோட்பாடானது பல்வேறு பிரபஞ்சங்கள் இருப்பதால் ஒரு குறிப்பிட்ட நிகழ்வில் இருந்து ஒருவர் வெளியேறிவிட முடியும் என்பதை கோருகின்றது.

சாத்தியம்

சாத்தியம்

ஒரு வேலை பழைய பிரபஞ்சத்தில் இருந்து பயணித்து உங்களது தாத்தாவை கொன்றால், நீங்கள் கடந்து வந்த பிரபஞ்சமானது மாறாமல் அப்படியே இருக்கும். இதனால் நீங்கள் மீண்டும் அந்த பிரபஞ்சத்திற்கு செல்ல முடியும்.

குவாண்டம் மெக்கானிக்ஸ்

குவாண்டம் மெக்கானிக்ஸ்

MWI கோட்பாடானது சக்திச் சொட்டுப் பொறியியல் சார்ந்து எழுத்துறுவில் ஒரு வகையில் சாத்தியம் என்பதை பரைசாற்றினாலும் இதற்கான சந்தேககங்களும் அதிகளவு எழத்தான் செய்கின்றது.

கோட்பாடு

கோட்பாடு

இயற்பியளாலர்களான கிரீன்பெர்கர் மற்றும் கால் சுவோசில் கோட்பாடானது தி கிராண்ட்பாதர் பாராடக்ஸ் கோட்பாடுகளை கடந்து குவாண்டம் ஒற்றை டைம்லைன் மூலம் மெக்கானிக்கல் டைம் டிராவல்தனை அனுமதிக்கின்றது.

கோட்பாடு

கோட்பாடு

கிரீன்பெர்கர் மற்றும் சுவோசில் கோட்பாட்டின் படி குவாண்டம் பொருட்களை பல கூறு அலைகளாக இருக்கும் என்றும் கால நேரத்தில் இவை ஒருமித்த பாதையை பின்பற்றும் என்றும் கூறுகின்றது. காலப்பயணம் ஏற்கனவே நடைபெற்றிருக்கலாம் என்பதால் இதற்கான இயந்திரங்கள் தேவையில்லை.

அலை

அலை

இந்த அலைகள் மீண்டும் காலப்பயணம் மேற்கொள்ளும் என்றும் இந்த பயணத்தின் போது ஏற்கனவே அரங்கேறியவைகளை பாதிக்காது என 2005 ஆம் ஆண்டு கிரீன்பெர்கர் மற்றும் சுவோசில் கண்டுபிடித்தனர்.

தற்காலம்

தற்காலம்

இதனால் உங்களுக்கு நிகழ்காலம் தெரிந்தால், கடந்த காலம் சென்று உங்களது தாத்தாவை கொலை செய்ய முடியும், ஆனால் திரும்பி வரும் போது அவர் அறையை விட்டு வெளியேறிய பின் நீங்கள் வருவீர்கள் என கிரீன்பெர்கர் தெரிவித்துள்ளார்.

காலப்பயணி

காலப்பயணி

நாம் ஏற்கனவே காலப்பயணி ஒருவரால் பார்க்கப்பட்டுள்ளோம். 2000 ஆண்டு வாக்கில் அறிவியல் சார்ந்த இணைய விவாதங்களில் தான் ஒரு காலப்பயணி என கூறிக்கொண்டு தான் 2036 ஆம் ஆண்டில் இருந்து வருவதாக கூறினார்.

மிலிட்டரி டைம் டிராவலர்

மிலிட்டரி டைம் டிராவலர்

2036 ஆம் ஆண்டில் இருந்து வருவதாக கூறிய ஜான் டைட்டர் தான் ஒரு மிலிட்டரி டைம் டிராவலர் என தெரிவித்ததோடு, தடையமே இல்லாமல் அடிக்கடி மறைந்து விட்டதோடு சில கணிப்புகளை தெரிவித்து இணைய வாசிகளை மகிழ்வித்து வந்ததாக கூறப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Time Traveler Caught on Tape Real Teleportation: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X