Just In
- 20 hrs ago
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.!
- 21 hrs ago
ஓபன் சேல் விற்பனைக்கு வந்தது அசத்தலான ரியல்மி 5எஸ்.!
- 22 hrs ago
விஞ்ஞானிகள் வடிவமைத்த ஃபிராக்ஃபோன்: இதில் இப்படி ஒரு அம்சம் இருக்கா?
- 22 hrs ago
பார்வையற்றோருக்கான ஸ்மார்ட் ஸ்டிக்! 8 வயது சிறுமியின் அசத்தல் கண்டுபிடிப்பு..
Don't Miss
- News
போர்க்களமாக மாறிய டெல்லி.. இரவு முழுக்க நடந்த போராட்டம்.. உச்சம் அடையும் குடியுரிமை சட்ட திருத்தம்!
- Lifestyle
இன்னைக்கு இந்த ராசிக்காரங்களோட காதல் வாழ்க்கை சூப்பரா இருக்கப்போகுதாம் என்ஜாய் பண்ணுங்க...!
- Sports
என்ன திட்டு திட்டுனீங்க? இப்ப பேசுங்க பார்ப்போம்.. செம பதிலடி கொடுத்த இளம் வீரர்!
- Movies
சாட்சிகளுடன் பல காட்சிகளில் கதை சொல்லும் மெரீனா புரட்சி
- Automobiles
திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி செய்த நல்ல காரியம்... ஊர் முழுக்க இதுதான் பேச்சா இருக்கு...
- Finance
50% விலையேறிய காய்கறிகளின் விலை.. அதிகளவு மழையும் ஒரு காரணமே..!
- Education
DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்! ஊதியம் ரூ.56 ஆயிரம்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மனதை தேற்றிக்கொள்ளுங்கள் : திகில் கிளப்பும் டைம் டிராவல் ஆதாரங்கள்.!
சர்ச்சைக்குரிய டைம் டிராவல் மற்றும் டைம் மெஷின் பற்றிய ஆயிரமாயிரம் கோட்பாடுகள் உள்ளன. அதில் பாதி ஆதரவையும், மீதி எதிர்ப்பையும் வெளிப்படுத்தும் நிலைப்பாட்டில் அவ்வப்போது டைம் சார்ந்த மிகவும் நம்பகமான சாட்சிகளும், ஆதாரங்களும், கதைகளும் வெளியாகி கொண்டே தன இருக்கின்றது.
அதாவது டைம் டிராவல் - அதாவது 'காலத்தை தாண்டி பயணிப்பது' - என்பதெல்லாம் வெறும் கட்டு கதைகள், பொழுது போகாதவனும் பிழைக்க தெரியாதவனும் கிளப்பிவிட்ட புரளிகள் என்று ஒருபக்கம் உலகம் இன்று வரை நம்பிக் கொண்டிருந்தாலும், மறுபக்கம் வரலாற்றை 'தோண்ட தோண்ட' அதிர்ச்சிகளும், சந்தேகங்களும் கூடிக் கொண்டே தான் போகின்றது.
அவ்வாறாக, டைம் மெஷின்கள் மற்றும் காலத்தை முன்னும் பின்னும் தாண்டி பயணித்தவர்கள் பற்றி மறைக்கப்பட்ட, மறைக்கப்படும் கருப்பு சரித்திரங்களில் சில உங்கள் பார்வைக்கு.!

என்னென்ன நடக்கப்போகிறது.?
ஜான் டிட்டார் (John Titor) - 2036 ஆம் ஆண்டில் இருந்து 1941-க்கு பின்னோக்கி பயணித்து வந்தவன் என்று தன்னை தானே கூறிக்கொண்டவர். அதாவது வரலாற்றில் என்னென்ன நடக்கப்போகிறது என்று இவர் பல விடயங்களை கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உருவாக்கும் முறை.!
அது மட்டுமின்றி டைம் மெஷினை உருவாக்கும் முறையையும் இவர் தெளிவாக சொல்லிக் கொடுத்தார் என்பதும், இதுவரை அதை யாரும் முயற்சி செய்து பார்க்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிடி.?
1919-ஆம் நூற்றாண்டை சேர்ந்த புகைப்படம் ஒன்றில் சிடி (CD) ஒன்று பதிவாகியுள்ளது, இதுவும் டைம் டிராவல் சார்ந்த சந்தேகங்களை கிளப்பும் ஒரு ஆதாரம் ஆகும்.
1935-ஆம் ஆண்டில் இருந்து, தான் முன்னோக்கி பயணித்து தன் எதிர்காலத்தில் பிரிட்டிஷ் விமானப்படை தளபதியாக ஆக போவதை முன்பே கண்டுபிடித்த சர் விக்டர் காட்டார்டு (Sir Victor Goddard).!

மான்டாக் தீவில் அரங்கேறிய ஆலோசனை
சதியாலோசனை கோட்பாடுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் பிரபலமான ஒன்று தான் - மான்டாக் ப்ராஜக்ட் சதியாலோசனை கோட்ப்பாடு (The Montauk Project Conspiracy Theory). அமெரிக்காவின் மான்டாக் தீவில் அரங்கேறிய இந்த ஆலோசனை கோட்ப்பாடின் ஒட்டு மொத்த வேலையும் காலத்தை கடந்து முன்னும் பின்னும் செல்லக்கூடிய டைம் மெஷின் உருவாக்கம் பற்றியது தானாம்.

டைம் டிராவல் வாட்ச்.!?
சீனாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் இது கண்டுபிடிக்கப்பட்டது. 400 வருடங்கள் பழைமை வாய்ந்த இந்த தங்க பொருளில், 100 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட 'கடிகாரம்' எப்படி வந்தது என்ற கேள்வி, 'டைம் டிராவல்' என்பதை உறுதி செய்கிறது.

"18 ஆம் நூற்றாண்டிற்க்கு பயணித்தோம்"
டைம் டிராவல் கருப்பு சரித்திரத்தில் விளக்கம் இல்லாத, புரியாத கதைகளில் மொபர்லே - ஜோர்டயன் சம்பவம் (The Moberly-Jourdain Incident) குறிப்பிடத்தக்கது. "1901-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி மாலை பொழுதில், 18 ஆம் நூற்றாண்டிற்க்கு பயணித்தோம்", "அங்கு உயிரற்ற மரங்களையும், வெள்ளை உடையில் உலாவும் பேய்களையும் கண்டோம்" போன்ற பல புதிரான அனுபவ கதைகளை உள்ளடக்கிய புத்தகம் தான் 'அன் அட்வென்சர்' (An Adventure).

பின்னோக்கி பயணம்.!
தவறுதலாக, காலத்தில் பின்னோக்கி பயணிக்கப்பட்ட இந்த ஜோடி, பயணம் முடிந்த பின் மீண்டும் தங்களின் அதே வாடகை குடியிருப்புக்கு திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது..!

அறிவியல்படி சாத்தியமே இல்லாத கப்பல்.!
1943-ஆம் ஆண்டு அக்டோபர் 28-ஆம் தேதி, அமெரிக்க கப்பல் படையால் நிகழ்த்தப்பட்ட - ஃபிலாடெல்ஃபியா பரிசோதனை (The Philadelphia Experiment). அதாவது எதிரிகளின் ரேடாரில் சிக்கி கொள்ளாத கப்பல், அறிவியல்படி சாத்தியமே இல்லாத இது, டைம் மெஷின் மூலம் நிகழ்த்தப்பட்டது என்று நம்பப்படுகிறது. ஆனால், இப்படி ஒரு பரிசோதனை நடக்கவே இல்லை. இது முழுக்க முழுக்க கற்பனை என்று இன்று வரை பதில் கூறிக் கொண்டிருக்கிறது அமெரிக்க கப்பல் படை.!

மொபைல் போன் பயன்படுத்துவது.?
1928-ஆம் ஆண்டு வெளியான ஒரு சீன திரைப்பட காட்சி ஒன்றில் பெண் ஒருவர் மொபைல் போன் பயன்படுத்துவது படமாகி உள்ளது. மொபைல் போன்கள் சமீபத்தில் தான் உருவாக்கம் பெற்று பிரபலம் அடைந்த ஒன்று என்பது நாம் எல்லோருக்குமே தெரியும். அப்படி இருக்க அந்த காட்சியில் யதார்த்தமாக நுழையும் பெண், டைம் டிராவல் செய்து வந்தவரா என்பது கேள்வி குறிதான்.!

லார்ஜ் ஹாட்ரான் கொல்லிடர்.!
உலகின் மிக பெரிய துகில் முடிக்கியான (particle collider) இந்த லார்ஜ் ஹாட்ரான் கொல்லிடர் (The Large Hadron Collider) கிட்டத்தட்ட ஒரு டைம் மெஷின் என்றே பலராலும் நம்பப்படுகிறது.!
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,591
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
22,160
-
18,200
-
18,270
-
22,300
-
32,990
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790