Just In
- 3 min ago
iPhone: முழுக்க முழுக்க ஐபோனில் படமாக்கப்பட்ட இந்திய திரைப்படம்; யூட்யூப்பில் வெளியானது!
- 5 min ago
புதிய ஆடியோ தொழில்நுட்பத்துடன் அதிரடி காட்டும் Netflix: என்னென்ன அம்சங்கள்.!
- 2 hrs ago
Apple-க்கு தண்ணீ காட்டிய Samsung.! புது டிவைஸால் சூடுபிடிக்கப்போகும் ஆட்டம்.!
- 4 hrs ago
அட்டகாசமான வடிவமைப்புடன் இந்தியாவில் களமிறங்கும் கோகோ கோலா போன்: அறிமுக தேதி இதுதான்.!
Don't Miss
- News
பாஜக கூட்டணிக்கு அதிமுக இபிஎஸ் அணி குட்பை? அண்ணாமலை சந்திப்பு வேஸ்ட்? வெளுத்து கட்டிய பொன்னையன்!
- Automobiles
மைலேஜில் மாருதியை என்ன சேதினு கேக்க போகும் டாடா கார்கள்! இவ்ளோ சீக்கிரமா இது நடக்கும்னு யாருமே நெனைக்கல!
- Movies
Simbu Net worth: சிம்புவுக்கு 40 வயசாகிடுச்சு.. ஒட்டுமொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
- Finance
3 அதானி குழும பங்குகள் மீது கூடுதல் கண்காணிப்பு.. NSE அறிவிப்பு..!
- Sports
"இந்தியா அநியாயமாக நடந்துக்கொண்டது" ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்.. முன்னாள் வீரர் பரபரப்பு குற்றச்சாட்டு
- Lifestyle
Today Rasi Palan 03 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கவனக்குறைவே பெரும் சிக்கலை உண்டாக்கக்கூடும்...
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வானத்தில் இருந்து விழுந்து கிராம மக்களை பதறவைத்த மர்ம பெட்டி: அப்படி அதில் என்னதான் இருந்தது?
தற்போது சமூக வலைத் தளத்தில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. அதாவது ஹைதராபாத் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வானத்தில் இருந்து மர்ம பெட்டி விழுந்ததாகத் தகவல் வெளிவந்துள்ளது. தற்போது இந்த வீடியோதான் பல சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வானத்தில் வினோத பொருள்?
குறிப்பாக நேற்று ஹைதராபாத் நகரில் வானத்தில் வினோத பொருள் ஒன்றை பார்த்தாக பலர் இணைய தளங்களில் பதவிட்டு வந்தனர். பின்பு ஹைதராபாத் நகரில் இருந்து சரியாக 100 கிமீ தொரைவில் உள்ள விகாராபாத் மாவட்டத்தில் இருக்கும் மார்பல்லி மண்டலத்தின் மொகிலிகிடா கிராமத்தில் விவசாய பூமியில் மர்மப் பொருள் ஒன்று பாராசூட் துணையுடன் விழுந்ததாகத் தகவல்கள் வெளிவந்தன.

ராட்சத பெட்டி
இந்த மர்ம பொருள் பார்த்த அந்த கிரமாத்ததை சேர்ந்த மக்கள் முதலில் அதிர்ச்சியடைந்தனர். அதாவது பார்ப்பதற்கு ராட்சத பெட்டி போல இருந்த அந்த பொருளில் கேமராக்கள் இருந்ததைக் கிராம மக்கள் பார்த்துள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏலியன்கள் வேலையா?
அதேபோல் இது ஏலியன்கள் வேலையாக இருக்குமோ என்றெல்லாம் இணையத்தில் பலரும் பேசத் துவங்கினர். குறிப்பாக அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அந்த பொருளை வீடியோ எடுத்து சமூக வலைத் தளங்களில் பதிவிடத் துவங்கிவிட்டனர். சில மணி நேரங்களில் அந்த வீடியோவைரலாகி விட்டது.

TIFR அமைப்பின் ஆராய்ச்சி
இதைத்தொடர்ந்து டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் (TIFR) அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் அந்த மர்ம பொருள் விழுந்த இடத்திற்கு வந்துள்ளனர். பின்னர் அது TIFR அமைப்பின் ஆராய்ச்சி என்பது தெரியவந்துள்ளது.

ஸ்பேஸ் கேப்ஸ்யூல்
அதாவது வளிமண்டல அடுக்கு குறித்த ஆய்வுக்காக ஹீலியம் பலூன்களில் இந்த ஸ்பேஸ் கேப்ஸ்யூல் பொருத்தப்பட்டிருக்கிறது. பின்பு இந்த ஆராய்ச்சியில் நிபுணர்கள் ஈடுபட்ட போதுதான் அது தடம் மாறி மொகிலிகிடா கிராமத்தில் விழுந்திருக்கிறது. அதேபோல் இந்த விண்வெளி கேப்ஸ்யூல் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டிருக்கிறது எனத் தெரியவந்துள்ளது.

1000 கிலோ எடை
சுமார் 1000 கிலோ எடையுள்ள இந்த கேப்ஸ்யூல் ஹீலியம் பலூன் மூலம் பறக்க விடப்பட்டிருக்கிறது. பின்பு இதனை ரிமோட் கண்ட்ரோல் மூலம் கண்காணித்து வந்துள்ளனர் ஆய்வாளர்கள். குறிப்பாக ஹீலியம் பலூன் தரையிறங்கியதும் அங்கு விரைந்து வந்த TIFR நிபுணர்கள் அந்த கேப்ஸ்யூலை பாகம் பாகமாகப் பிரித்து அங்கிருந்து எடுத்துச் சென்றுள்ளனர்.

பரபரப்பினை ஏற்படுத்தியது
மேலும் இதுகுறித்து அப்பகுதி காவல்துறையினருக்கும் அந்த அமைப்பினர் தகவல் கொடுத்ததாகத் தகவல் வெளிவந்துள்ளது. அதேபோல் விவசாய பூமியில் இதுபோன்ற கேப்ஸ்யூல் வந்திறங்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470