இந்த வாரத்தின் இறுதியில் பூமியை நெருங்கும் பிரம்மாண்ட விண்கற்கள்!

2018 VR1 என பெயரிப்பட்டுள்ள இந்த மிகப்பெரிய விண்வெளி பாறைகள் சுமார் 100 அடி(30மீட்டர்) அகலத்தில், ஒரு நீல திமிங்கலத்தின் நீளத்தில் இருக்கும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

|

மூன்று பிரம்மாண்டமான விண்கற்கள் இந்த வாரத்தின் இறுதியில் பூமியை நெருங்கி கடந்து செல்லும் என நாசா எச்சரித்துள்ளது.


2018 VR1 என பெயரிப்பட்டுள்ள இந்த மிகப்பெரிய விண்வெளி பாறைகள் சுமார் 100 அடி(30மீட்டர்) அகலத்தில், ஒரு நீல திமிங்கலத்தின் நீளத்தில் இருக்கும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இந்த விண்கற்கள் இன்று(சனிக்கிழமை) பூமிக்கு மிகவும் நெருக்கமாக பயணிக்கும் நாசா எதிர்பார்க்கிறது. ஆனால் துருதிஷ்டவசமாக அவற்றை சிறிய அளவிலான கருவிகளை பார்க்கமுடியாது என்பதால், செயற்கைகோள் மூலமே காணமுடியும்.

கலிபோர்னியா

கலிபோர்னியா

கலிபோர்னியாவில் உள்ள நாசாவின் ஜெட் ப்ரோபல்சன் ஆய்வகத்தில் உள்ள விஞ்ஞானிகளின் கணிப்புபடி, 2018 VS1 விண்கல் முதலாவதாக பூமியை கடந்துசெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 10 சனிக்கிழமை அன்று, மதியம் 2:02 (GMT) மணியளவில் பூமியில் இருந்து வெறும் 8,61,700 மைல்(13,86,771 கிலோமீட்டர்) தொலைவில் இந்த விண்கல் பயணிக்கும். 42லிருந்து 92 அடி(13-28 மீட்டர்) அளவுள்ளது என கணிக்கப்பட்டுள்ள இந்த விண்கல், பூமியை தாக்காது என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

அடுத்த 16 நிமிடத்தில்

அடுத்த 16 நிமிடத்தில்

அடுத்த 16 நிமிடத்தில், அந்த மூன்று விண்கற்களில் பெரியதாக கருதப்படும் 2018 VR1 பூமியை நெருங்குகிறது. இதன் பயணப்பாதையானது பூமியிலிருந்து 3.12 மில்லியன் மைல் (5 மில்லியன் கிலோமீட்டர்) தொலைவிற்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், அதன் அளவிற்கு ஏற்ப தொலைவு மாற வாய்ப்புள்ளது.

டைசி மற்றும் நெருக்கமான விண்கல்

டைசி மற்றும் நெருக்கமான விண்கல்

இந்த வாரத்தின் கடைசி மற்றும் நெருக்கமான விண்கல்லான VX1 , சனிக்கிழமை மாலை 6:21 GMT மணிக்கு பூமியை கடக்கவுள்ளது. இது பூமியிலிருந்து நிலவு இருக்கும் தொலைவை விட நெருக்கமாக, வெறும் 2,37,037 மைல்(3,81,474கிலோமீட்டர்) தூரத்தில் பயணிக்கவுள்ளது.

நாசா

நாசா

இந்த தொலைவுகள் மிகப்பெரியதாக தெரிந்தாலும், இவற்றை 'மிக நெருக்கம்' என வகைபடுத்துகிறது நாசா. ஏனெனில் அவை சூரியனை சுற்றிவருவதால், பூமிக்கு அருகிலுள்ள பொருட்கள் எப்போதாவது பூமியை தாக்க வாய்ப்புள்ளது என விளக்குகிறது அந்த விண்வெளி மையம்.

10 மில்லியன் கிலோமீட்டர்

10 மில்லியன் கிலோமீட்டர்

மில்லியன் அல்லது 10 மில்லியன் கிலோமீட்டர் தொலைவு என்பது மனிதர்களுக்கு மிகப்பெரிய தூரமாக தெரிந்தாலும், வானியியல் ரீதியாக இந்த தொலைவு நெருக்கமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Three huge asteroids up to 100 feet wide will skim past Earth THIS WEEKEND, NASA warns: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X