அண்டார்டிகாவின் அடியில் புதையுண்டு கிடப்பது பொருட்கள் அல்ல; திகில் கிளப்பும் ஆதாரங்கள்.!

  பூமியிலேயே மிகவும் குளிர்ச்சியானதொரு பிரதேசமான அண்டார்டிக்கா, பூமியின் தென்முனையில் அமைந்திருப்பதனால் இப்பிரதேசத்திற்கு சூரிய வெப்பம் மிக குறைந்த அளவே வந்துசேர்கிறது.

  அண்டார்டிகாவின் அடியில் புதையுண்டு கிடப்பது பொருட்கள் அல்ல.!

  இதன் அர்த்தம், அண்டார்டிக்காவில் ஒரு ஆண்டின் ஆறு மாதங்களுக்கு சூரிய வெளிச்சமே இருக்காது. இதன் காரணமாகவே இந்த கண்டம் முழுவதும் ஏறக்குறையப் பனிக்கட்டியினாலேயே மூடப்பட்டுள்ளது. இதன் விளைவாக அண்டார்டிக்காவில் மேலோட்டமான ஆய்வு நிகழ்த்துவது கூட மிகவும் கடினமாக ஒன்றாக இருக்கும்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  சமீபத்திய கான்ஸ்ப்பிரசி தியேற்றம்.!

  ஆய்வுகளுக்குள் அகப்படாத, அறியப்படாத காரணத்தினாலேயே அண்டார்டிக்காவானது உலகின் மிகவும் மர்மமான பகுதியாக சித்தரிக்கப்படுகிறது அல்லது பார்க்கப்படுகிறது. இதனாலேயே அந்த வெண்படர் பிரதேசத்தின் மீது ஆயிரக்கணக்கான சதியாலோசனை கோட்பாடுகள் கிளம்பியது. அதிலொரு சமீபத்திய கான்ஸ்ப்பிரசி தியேற்றத்தை யூட்யூப் சேனல் ஒன்று வெளியிட்டுள்ளது

  ஒரு மர்மமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.!

  பிரபல யூட்யூப் சேனல் (செக்யூர் டீம்10) ஒன்று, பனிப்பிரதேசமான அண்டார்டிக்காவிற்கு அருகிலுள்ள ஒரு தீவில் கைப்பற்றப்பட்ட ஒரு மர்மமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள கூகுள் எர்த் புகைப்படமானது வேற்றுலகவாசிகள் அல்லது ஏலியன் சார்ந்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

  கேள்விகளும், சந்தேகங்களும்.!

  அதாவது வெளியிடப்பட்டுள்ள புகைப்படமானது யூஎப்ஓ (பறக்கும் தட்டு) விபத்துக்குள் சிக்கியது போன்றெதொரு தளத்தை சித்தரிக்கிறது. செக்யூர் டீம்10 யூட்யூப் சேனல் வெளியிட்டுள்ள வீடியோவில், தெற்கு ஜியார்ஜியா தீவில் எடுக்கப்பட்டவொரு கூகுள் எர்த் மேப்ஸ் புகைப்படம் தான் பல கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பிய வண்ணம் உள்ளது.

  குழப்பமானதொரு கற்பனை.!

  அந்த புகைப்படத்தை பார்க்கும் எவருக்கும் குழப்பமானதொரு கற்பனை ஏற்படும். அதாவது ஒரு மிக வேகமான பறக்கும் பொருளானது விபத்துக்குள்ளாகி, அதன் பாகமொன்று பனிமலையின் உச்சியின் மீது விழுந்து, பல மீட்டர்கள் தூரம் தேய்த்துக்கொண்டு போய் தேங்கியது போன்று காட்சிப்படுகிறது.

  இயற்கையாக ஏற்பட்டிருக்க வாய்பில்லை.?

  அர்ஜென்டினாவின் தெற்கே பிரித்தானிய கட்டுப்பாட்டில் உள்ள தீவில் உள்ள 9,629 அடி உயரமுடைய (2,935 மீட்டர்) மவுண்ட் பஜட் அருகே உள்ள ஒரு பனிப்பாறையில் தான் இந்த புகைப்படம் பதிவாகியுள்ளது. துல்லியமான நேர்கோட்டில் அமைந்துள்ள இந்த நீண்ட "விபத்து" பாதையானது இயற்கையாக ஏற்பட்டிருக்க வாய்பில்லை என்பதே ஏலியன் நம்பிக்கையாளர்களின் முதல் மற்றும் தீர்க்கமான வாதம்.

  சாதாரண கண்கொண்டு பார்க்க வேண்டும்.!

  இங்கிலாந்தின் கீல் பல்கலைக்கழகத்தின் உடல் புவியியல் துறையின் மூத்த விரிவுரையாளரான ரிச்சர்ட் வாலரின் கருத்துப்படி " இது ஒருமிகப்பெரிய பனிப்பாறையின் பனிச்சறுக்காக கூட இருக்கலாம் என்றும், இதை ஒரு சாதாரண கண்கொண்டு பார்க்க வேண்டுமென்றும் கூறியுள்ளார்.

  அதிர்ச்சிகரமான ஒரு கண்டுப்பிடிப்பு.!

  இதுபோன்று அண்டார்டிக்காவின் மறைதிரையை அல்லது மர்மங்களை விளக்க முயற்சிக்கும் கோட்பாடுகள் எழுவது ஒன்றும் புதிதல்ல. கடந்த 1929-ஆம் ஆண்டு மிகவும் அதிர்ச்சிகரமான ஒரு கண்டுப்பிடிப்பு நிகழ்த்தப்பட்டது. அது தான் ப்ரி ரீஸ் மேப் (Piri Reis Map).!

  இதில் என்ன ஆச்சரியம்.?

  கண்டுபிடிக்கப்பட்ட ப்ரி ரீஸ் மேப் எனப்படும் வரைப்படமானது துருக்கிய கடற்படையின் மிகவும் மேம்பட்ட வழிசெலுத்தும் கருவியாக செயல்பட்டுள்ளதை தெள்ளத்தெளிவாக காட்சிப்படுத்துகிறது. கடல்வழி சார்ந்த வரைபடத்தில் அப்படி என்ன ஆச்சரியம் இருக்கிறதென்று நீங்கள் கேட்கலாம் - இருக்கிறது.!

  மிகவும் துல்லியமான வரைப்படம்.!

  சுமார் நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு தொலைக்கப்பட்டு இருக்கலாமென்று கருதப்படும் இந்த வரைபடமானது, சரியாக 1513-ஆம் ஆண்டு வரையப்பட்டுள்ளது. இதுவரை கிடைக்கப்பெற்ற பழம்பெரும் வரைப்படங்கள் சார்ந்த ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, மிகவும் துல்லியமான வரைப்படமாக இந்த மேப் திகழ்கிறது.

  300 ஆண்டுகளுக்கு முன்பே.!?

  மிகவும் மர்மமான விடயம் என்னவெனில் மிகவும் துல்லியமான முறையில் அண்டார்டிக்காவின் வடக்கு ரிட்ஜ் பகுதிகளின் விரிவான வரைபடங்களை கொண்டுள்ள இந்த மேப் ஆனது, அண்டார்டிக்கா கண்டம் அதிகாரப்பூர்வமாக கண்டுபிடிக்கப்படுவதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கம் பெற்றுள்ளது என்பது தான்.

  இந்த இடத்தில் தான் ஒரு சந்தேகம் கிளம்புகிறது.!?

  மேலுமொரு ஆச்சரியம் என்னவெனில், அதிநவீன செயற்கைகோள்களின் உதவியோடு வடிவமைக்கப்படும் தற்போதைய வரைப்படங்களை போன்ற துல்லியத்தை ப்ரி ரீஸ் மேப் கொண்டுள்ளது. இந்த இடத்தில் தான் ஒரு சந்தேகம் கிளம்புகிறது.

  பண்டைய நாகரிகங்கள் வாழ்ந்துள்ளன.!

  அதாவது இந்த வரைப்படமானது துருக்கிய கடற்படையினால் மட்டுமே உருவாக்கம் பெறவில்லை; பெற்றிக்கவும் முடியாது. ஆக அண்டார்டிக்காவில் மிகவும் முன்னேறிய பண்டைய நாகரிகங்கள் வாழ்ந்துள்ளன என்கிற கோணத்தில் ஏகப்பட்ட சதியாலோசனை கோட்டபாடுகள் கிளம்பின. இப்படியாக கிளம்பிய அண்டார்டிக்கா மீதான சந்தேகங்கள் அடங்கும் முன்னர் மேலுமொரு மர்மமான வரைப்படம் சிக்கியது.

  தூக்கி சாப்பிடும் ஒரோன்சு ஃபைன்.!

  அது 1531-ஆம் ஆண்டில் உருவாக்கம் பெற்ற ஒரோன்சு ஃபைன் (Oronce Fine) என்கிற வரைப்படமாகும். இது ப்ரி ரீஸ் மேப் வரைப்படத்தை தூக்கி சாப்பிடும் அளவிலான சந்தேகங்களை கிளப்பியது. அதாவது அண்டார்டிக்காவின் பண்டைய செயல்பாடு குறித்த பல கேள்விகளை எழுப்பியது.

  அதே ஆறுகளும், ஏரிகளும்.!

  மிகவும் புதிரான இந்த அண்டார்டிக்கா வரைப்படத்தில் இருக்கும் ஆறுகள் மற்றும் ஏரிகளானது, தற்கால அதிநவீன செயற்கைகோள் இமேஜிங் ( satellite imaging) மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

  பள்ளிக்குழந்தைகள் கூட நம்பாது.!

  பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையிலாக அங்கு ஒரு மனித காலடி கூட பதியவில்லை என்கிற நிலையில், இந்த அளவிலான துல்லியத்தை வரைப்படத்தில் புகுத்தியது சாதாரண வரைப்படவல்லுனர்கள் தான் என்றால் பள்ளிக்குழந்தைகள் கூட நம்பாது.

  பண்டைய நாகரிகத்தின் வீடு.!

  இது சார்ந்த புரிதலில் "அண்டார்டிகா ஒரு பண்டைய நாகரிகத்தின் வீடு" என்று தனது கருத்தை முன்வைக்கிறார் பேராசிரியர் சார்லஸ் ஹாப்குட். அதாவது "அதன் (அண்டார்டிக்காவின்) குடிமக்கள், அந்த பிரதேசத்தை விட்டு தப்பி சென்றிருக்க வேண்டும் அல்லது இயற்கை பேரழிவுகளின் விளைவால் - 14 மில்லியன் சதுர கிமீ அளவிலான ஆபத்தான பனிக்கட்டி நிலப்பரப்பாய் மாற்றியதால் - அழிந்து போயிருக்க வேண்டும்" என்கிறார்.

  How To Increase the Speed of your Laptop (TAMIL)
  புதையுண்டு கிடக்கிறது.!

  புதையுண்டு கிடக்கிறது.!

  சார்லஸின் கருத்து உண்மையெனில், ஒருவேளை அங்கு வாழ்ந்த மனிதர்கள் அழிந்து போயிருந்தால், கடுமையான பனிக்கட்டிகளால் சூழப்பட்டு கிடக்கும் அண்டார்டிக்க கண்டத்தின் அடியில் இந்த பூமி கிரகத்தின் மிகவும் முன்னேறிய (ஏலியன்களாக கூட இருக்கலாம்) பண்டைய நாகரிகங்கள் புதையுண்டு கிடக்கிறது என்பது உறுதி. மேலும் இதுபோன்ற அறிவியல் கட்டுரைகளை படிக்க தமிழ் கிஸ்பாட் தளத்தின் அறிவியல் தமிழ் பக்கத்துடன் இணைந்திருக்கவும்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  This Weird Google Earth Picture Does Not Show a Crashed UFO. Read more about this in Tamil GizBot.
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more