ஏப்பா சாமி.. ரஷ்யா பக்கமே போக கூடாது என அமெரிக்க அலற காரணம் இது தான்.!

|

ஸ்கூல் பசங்க சண்டப்போட்டு பார்த்து இருக்கீங்களா.?, "என் பென்சிலை ஏன்டா எடுத்த.?", "என்னை ஏன்டா மிஸ் கிட்ட மாட்டி விட்ட.?" போன்ற சப்ப மேட்டர்களுக்காக அடித்துக்கொள்வார்கள். "இண்டர்வெல் கேப்பு"களில் நடக்கும் இந்த மினி உலக யுத்தத்தை, ஒட்டுமொத்த வகுப்பே வேடிக்கை பார்க்கும். அதன் பின்னர், "மிஸ்.. மிஸ்.. இவங்க ரெண்டு பேரும் சண்டை போட்டாங்க மிஸ்னு" எவனாச்சும் போட்டுக்கொடுக்க, மீண்டுமொரு பிரளயத்திற்கான கலகம் வெடிக்கும். கிட்டத்தட்ட இதே மாதிரியானதொரு நிலைப்பாட்டில் தான் இருக்கின்றன ஆயுதசக்தி மிக்க உலக நாடுகள்.!

ஏப்பா சாமி.. ரஷ்யா பக்கமே போக கூடாது என அமெரிக்க அலற காரணம் இது தான்.!

அதற்கு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்ந்த வடகொரியாவின் சர்வாதிகாரியான கிம் ஜொங் உன், விக்ரமன் படத்தின் க்ளைமாக்ஸ் கட்சியில் வரும் வில்லனை போல, பொசுக்கென்று நல்லவனாக மாறி விட, வடகொரியாவை வைத்து இதுநாள் வரையிலாக ஆயுத அரசியல் நடத்திய நாடுகள் குழப்பத்தில் உள்ளன. இப்படியாக எந்தவொரு நிலைப்பாடும், எப்போது வேண்டுமானாலும் மாறிவிடலாம். ஆனால் சோவியத் யூனியனாக இருந்த காலத்தில் இருந்து மாறாத ஒரே பகை, ரஷ்ய -அமெரிக்க பகைதான்.!

ரஷ்யாவை தொட்டு பார்க்க எந்தவொரு நாடும் அஞ்சும்; ஏன் தெரியுமா.?

ரஷ்யாவை தொட்டு பார்க்க எந்தவொரு நாடும் அஞ்சும்; ஏன் தெரியுமா.?

ரஷ்யாவையும், அமெரிக்காவையும் பொறுத்தவரை ஸ்கூல் பசங்க எவ்வளவோ மேல். காரணம் கிடைத்தால் சண்டை போடுவதற்கும், சண்டை போடுவதற்காக காரணம் தேடுவதற்கும் வித்தியாசம் உண்டு. இருந்தாலும் கூட, ரஷ்யாவை தொட்டு பார்க்க எந்தவொரு நாடும் அஞ்சும், அமெரிக்க உட்பட, ஏன் தெரியுமா.? ஏனெனில், அமெரிக்கா படிச்ச ஸ்கூல்ல.. ரஷ்யா தான் ஹெட் மாஸ்டர். நம்பும் படி இல்லையா.? சரி.. அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கு யுத்தம் மூண்டு விட்டதென்றும், அமெரிக்கா ரஷ்யாவை ஆட்கொள்ள உள்நுழைவதாகவும் கற்பனை செய்து கொள்ளுங்கள். இந்த இடத்தில் ரஷ்ய என்ன செய்யும் தெரியுமா.?

நடவடிக்கை நம்பர் 01:

நடவடிக்கை நம்பர் 01:

எப்படியும் இந்த யுத்த நாடகம், கடலும் நிலமுமாக சூழ்ந்த, ரஷ்யாவின் சுகோட்கா தீபகற்பம் - அமெரிக்காவின் அலாஸ்காவில் தான் அரங்கேறும். யுத்த அறிவிப்பு வெளியானதும், முதல் வேலையாக, ரஷ்யா அதன் துறைமுகங்களை பரபரப்பாக்கும். அதன் சக்தி வாய்ந்த ஏவுகணைகள் ஆன 3M-54KE, 3M-54KE1 மற்றும் 3M-14KE போன்றவைகளை யுத்த நோக்கத்திற்காக வெளிக்கொண்டு வரும். இவ்வகை ஏவுகணைகள் ஆனது, எல்ஏசிஎம் (LACM) எனப்படும், அதாவது லேண்ட் அட்டாக் க்ரூஸ் மிஸைல் என்று அர்த்தம். இதனுடன் சேர்த்து, Zvezda Kh-35 எனப்படும் ரஷ்யன் டர்போஜெட் சப்சோனிக் கப்பல்-எதிர்ப்பு ஏவுகணைகளையும் களமிறக்கப்படும்.

நடவடிக்கை நம்பர் 02:

நடவடிக்கை நம்பர் 02:

ஏவுகணைகளோடு சேர்த்து, ஆளில்லா வான்வழி வாகனங்களும், அதனுடன் சேர்த்து, கண்காணிப்பு மற்றும் தாக்குதல் ஆணைகளை வழங்கும் நோக்கத்திலான டிடெக்ஷன் அண்ட் டார்கெட் டெஸ்டினேஷன் மாட்யூல் ஒன்றும் அமைக்கப்படும். பின்னர், உலக நாடுகளின் தூக்கத்தை கெடுக்கும் ரஷ்யாவின் அதிநவீன மிஸைல் சிஸ்டங்கள் கொண்டுவரப்படும். அது எஸ்-300 ஆக இருக்கலாம் அல்லது, எஸ்-400 அல்லது எஸ்-500 ஆக கூட இருக்காலாம். எதுவாக இருந்தாலும் எதிரிகளுக்கு கிலி கிளம்புவது மட்டும் உறுதி.

கிலி கிளப்பும் ரஷ்யன் மிஸைல் சிஸ்டம்; ஏன்.?

கிலி கிளப்பும் ரஷ்யன் மிஸைல் சிஸ்டம்; ஏன்.?

எஸ்-500 என்பது ஒரு புதிய தலைமுறை சர்பேஸ் டூ ஏர் மிஸைல் சிஸ்டம் ஆகும். இது ஹைப்செனிசிக் குரூஸ் ஏவுகணைகள் உட்பட கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தக்க வரும் அத்துணை ஏவுகணைகளையும், தடுத்து தாக்கும் வல்லமை கொண்ட ஒரு பாதுகாப்பு அமைப்பாகும். விமான தாக்குதல் என்றால்மணிகி 400கிமீ வேகத்தில் பாய்ச்சலை கொடுக்கும் இந்த மிஸைல் சிஸ்டம் ஆனது எதிர்வரும் ஏவுகணையை தாக்க வேண்டும் என்கிற நேரத்தில் மணிக்கு 600 கிமீ வேகம் பாயும் என்பது குறிப்பிடத்தக்கது.

நடவடிக்கை நம்பர் 03:

நடவடிக்கை நம்பர் 03:

துறைமுகங்களுக்கு வந்து அடையும், மேற்கூறப்பட்ட அனைத்து ஆயுதங்களும், கண்காணிப்பு கருவிகளும், சரக்கு ரயில் வழியாக, தரைவழியாக, விமான வழியாக மற்றும் கப்பல் வழியாக, என அனைத்து வழிகளிலும் குறிப்பிட்ட தாக்குதல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அதாவது, நிலபகுதிகளில் மூன்று இடங்களிலும், கடல் பகுதிகளில் இரண்டு இடங்களிலும் என தாக்குதல் மையங்கள் நிலைநிறுத்தப்படும். இவைகள் ஒட்டுமொத்த சுகோட்கா தீபகற்பத்தையும் பாதுகாப்பு வட்டத்தின் கீழ் ஆட்கொள்ளும்.

நடவடிக்கை நம்பர் 04:

நடவடிக்கை நம்பர் 04:

குறிப்பிட்ட நிலப்பகுதியை அடைந்த கண்காணிப்பு கருவிகளும், கடல் வான்வெளி மார்கமாக கண்காணிப்பை நிகழ்த்தும் ஆளில்லா விமானங்களும் தங்களது வேலையை ஆரம்பிக்கும். இவைகள் அனைத்தும் கூட்டு சேர ஒரு மாபெரும் ரேடார் வட்டம் உருவாகும். அந்த வட்டத்திற்க்குள் எதிரி நாடுகளின் விமானமோ அல்லது கப்பலோ அல்லது ராணுவ டாங்கிகளோ நுழையும் நொடிக்காக காத்திருக்கும். புத்திசாலித்தனமாக, ஒரே நேரத்தில் கடல் வழியாகவும், நிலம் வழியாகவும் மற்றும் வான் வழியாகவும், அமெரிக்கா, ரஷ்யாவின் ரேடார் வட்டத்திற்குள் நுழையும்.

நடவடிக்கை நம்பர் 05:

நடவடிக்கை நம்பர் 05:

நுழைந்த அடுத்த நொடி, எல்லை பாதுகாப்பு கண்காணிப்புகளை நிகழ்த்தும் கருவிகளிடம் இருந்து தாக்குதல் மையங்களுக்கு தகவல்கள் அனுப்பப்படும். அடுத்த கணமே, ஏவுகணைகள் சீறிப்பாயும், தரை வழி, கடல் வழி மற்றும் வான்வழி இலக்குகளை நோக்கி பாயும். இந்த இடத்தில் தான் ரஷ்யா, அதனொரு போர் தந்திரத்தை வெளிக்கிடும். ரஷ்யாவை போன்றேஎதிரி நாடும் ரேடார் கண்காணிப்புகளை நிகழ்த்தும் அல்லவா.? அப்போது ரஷ்ய ஏவுகணைகளை இடைமறித்து தாக்க வாய்ப்புள்ளது அல்லவா.?

நடவடிக்கை நம்பர் 06:

நடவடிக்கை நம்பர் 06:

எதிரி நாட்டின் ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ள பகுதியை பாதுகாக்கும் முனைப்பில் கீழ், அதன் முன், ரேடார் கொண்டு பாதுகாப்பு வட்டம் ஒன்று உருவாக்கப்படும். ரஷ்யாவின் ஏவுகணைகள் ஆனது, அந்த பாதுகாப்பு வட்டத்திற்குள் நுழைந்து சிக்கி கொள்ளாமல், அந்த வட்டத்தின் அகலப்பாதையை தொடாத வண்ணம், இரண்டு பக்கங்களிலும் வளைந்து சென்று எதிரியின் தளங்களை தாக்கி அழிக்கும். இதே தாக்குதல் பாணியானது, தரைவழி மாற்றம் கடசல்வழியிலும் நிகழ்த்தப்படும். எதிரிநாடு நிலை குலைந்து பின்வாங்கும். இதே பாணியிலான தொடர்ச்சியான தாக்குதலின் விளைவாக, ஒன்று எதிரி படைககள் காணாமல் போகும் அல்லது சரண் அடையும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
This Russian Weapon system Can Destroy an Entire Army. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more