சொதப்பும் ரஷ்யன் நியூஸ் ரோபோட்! மனிதர்களுக்கு மாற்றே இல்லையா?

|

முன்னேற்றமடைந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் மீதுள்ள ஒரு தொடர் பயம், ரோபோக்கள் நமது அனைத்து வேலைகளையும் எடுத்துக்கொள்ளும் என்பதுதான். தொழிலாளி, ஆசிரியர், வாகன ஓட்டுநர், அல்லது மற்ற எந்த பணியாளர்களுக்கும் வேலைபாதுகாப்பு இல்லை.

சொதப்பும் ரஷ்யன் நியூஸ் ரோபோட்! மனிதர்களுக்கு மாற்றே இல்லையா?

ஆனால் இந்த ரோபோ செய்தி அறிவிப்பாளர் போல் மற்ற அனைத்து ரோபோட்களும் மோசமாக இருந்தால், நம் வேலைகளுக்கு நீண்ட கால பாதுகாப்பு இருப்பதாக நினைக்க தோன்றுகிறது.

இந்த வாரம் ரஷ்ய அரசு செய்தி சேனலான ரஷ்யா -24, செய்திகளை ஆட்டோமேட் செய்யும் தங்கள் முயற்சியை வெளிப்படுத்தியது. அவர்களது ரோபோ செய்தி வாசிப்பாளரை "ப்ரோமோபாட்" என்ற தொழில்நுட்ப நிறுவனம்

உருவாக்கியுள்ளது. ஆனால் அது அவ்வளவு சிறப்பாக செயல்படவில்லை!! நீங்களே பாருங்கள்.

இந்த நியூஸ் ரீடர் ரோபாட்டானது மனிதர்களை போலவே தோற்றம் கொண்ட ஒரு மெக்கானிக்கல் ரோபோட் ஆகும். துரதிருஷ்டவசமாக ப்ரோமோபாட் நிறுவனம், " uncanny valley " எனப்படும் முகபாவனைகளை முற்றிலும் தவிர்த்துவிட்டு, முகத்தை உணர முடியாக வகையில் எதிர்மறையாக வடிவமைக்கப்பட்டது தெரிகிறது.அன்கேனி ஃவேலி (Uncanny Valley) என்பது மனிதனின் முகத்தை போல தோற்றமளிக்கும் ரோபோ முகங்கள் விவரிக்க பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை. ஆனால் இங்கு போதுமான அளவில் இல்லாமல் சிறிதளவு மட்டுமே அப்படி தெரிகிறது.

மற்றும் தீவிரமாக, யார் அந்த முகத்தை பார்த்து முழு ஒளிபரப்பப்படும் உட்கார்ந்து போகிறோம்? ஒருவேளை அந்த புள்ளி என்றாலும், ஒருவேளை செய்தி அனுப்புவதை நிறுத்தி, uninformed இருக்கும் என்று ஒரு புதிய துணிச்சலான முயற்சி என்று இருக்கலாம்.

உண்மையில் யார் அந்த முகத்தை செய்தி ஒளிபரப்பின் போது முழுவதுமாக உட்கார்ந்து பார்க்கப்போகிறோம் போகிறோம்? ஒருவேளை அதுதான் அவர்களுக்கும் தேவையோ!? ஒருவேளை மக்கள் செய்தி பார்ப்பதை நிறுத்தி, எதுவும் தெரியாதவர்களாக இருக்க வைக்கும் ஒரு புதிய துணிச்சலான முயற்சியாகவும் இது இருக்கலாம்.

அலெக்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ, ப்ரோமோபாட் இணை நிறுவனர் அலெக்ஸி யுஷாக்கோவின் உருவத்தை முன்மாதிரியாக வைத்து உருவாக்கப்பட்டது. தற்போது அதன் முகத்தின் பாகங்களை மட்டுமே அசைக்கும் திறன் கொண்ட இந்த ரோபோ, விரைவில் வெளியாகவுள்ள மேம்படுத்தப்பட்ட பதிப்பில் உடல் பாகங்களை அசைக்கும் வகையில் உருவாக்கவுள்ளதாக பொறியாளர்கள் கூறுகின்றனர். மீண்டும் இது போன்ற சொதப்பும் ஒன்றை வடிவமைக்க மாட்டார்கள் என நம்புவோம்.

அலெக்ஸ் செய்திவாசிப்பாளர் ரோபோ-ஐ உருவாக்க இக்குழுவிற்கு சுமார் 10 லட்சம் செலவான நிலையில், ஏற்கனவே 12 ஆர்டர்களை பெற்றுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். யார் அவற்றை வாங்கினார்கள் அல்லது அவையனைத்தும் செய்தி சேனல்களுக்கு தான் வாங்கப்பட்டதா என்ற தகவல்கள் தெளிவாக தெரியவில்லை.

ஒருபுறம் மனித செய்தி வாசிப்பாளர்கள் தங்கள் பணியை ரோபோட்கள் அபகரித்துவிடுமோ என கவலைகொள்ள தேவையில்லை என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. மறுபுறம், சீனாவின் செயற்கை நுண்ணறிவு கொண்ட மெய்நிகர் செய்திவாசிப்பாளர்கள் சிறப்பான செயல்பட்டுவருகின்றன. மற்றும் இந்த ரோபோட்கள் பாலின பன்முகத்தன்மையுடன் வருகின்றன.

Most Read Articles
Best Mobiles in India

English summary
This Russian News Robot Is So Bad, It's Proof Some Human Jobs Won't Be Taken By Bots: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more