பசித்தவனுக்கு சோறு இல்லை; ஆனா பாகிஸ்தானை பயமுறுத்த 39,000 கோடி.!

|

சமீபத்தில் வெளியான 2018 பட்ஜெட் எனும் நெருப்பில் பெட்ரோல் ஊற்றுவது போல - ஒரு இந்திய ராணுவ நடவடிக்கை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ராணுவ பாதுகாப்பென்பது மிகவும் அவசியாமானது தான் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.!

பசித்தவனுக்கு சோறு இல்லை; ஆனா பாகிஸ்தானை பயமுறுத்த 39,000 கோடி.!

இருப்பினும், இந்தியாவின் ராணுவ பலத்துடன் ஒப்பிடும் அளவிற்கு திறனற்ற பாகிஸ்தானை அச்சுறுத்தும் நோக்கத்தின்கீழ் நிகழ்த்தப்படுமொரு ராணுவ பாதுகாப்பு நடவடிக்கையானது சாமானிய மக்களின் கடுப்பை கிளப்பும் என்பதிலும் சந்தேகமில்லை. ரஷ்யாவிடம் இருந்து சுமார் ரூ.39,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை வாங்கும் பேச்சுவார்த்தையானது நடக்கிறதாம்.

ஏவுகணை அமைப்புகளை இந்தியா வாங்க திட்டம்.?

ஏவுகணை அமைப்புகளை இந்தியா வாங்க திட்டம்.?

டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியானதொரு தகவலின்படி ஐந்து மேம்பட்ட எஸ்-400 ட்ரையூம் விமான பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை (Advanced S-400 Triumf air defence missile systems) ரஷ்யாவிடம் இருந்து ராணுவ பயன்பாட்டிற்காக இந்தியா வாங்க திட்டமிட்டுள்ளது

உலகின் சிறந்த விமான பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாகும்.!

உலகின் சிறந்த விமான பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாகும்.!

இந்தியா வாங்க திட்டமிடும் எஸ்-400 ஆனது "உலகின் சிறந்த விமான பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாகும்". இந்த ஏவுகணை அமைப்பானது எதிரிடையான மூலோபாய குண்டுவீச்சுகள், உளவு விமானங்கள். ட்ரோன்கள், வேகமான போர் விமானங்கள், ஏவுகணைகள் ஆகியவைகளை 400 கிமீ மற்றும் 30 கிமீ உயரத்தில் தாக்கும் வல்லமை கொண்டவைகள் ஆகும்.

ஒப்பந்தத்தின் கரு.!

ஒப்பந்தத்தின் கரு.!

இந்த எஸ்-400 ஆயுத அமைப்பானது, பாகிஸ்தானின் குறுகிய-தூர அணுசக்தி ஏவுகணையான நாசர் (Hatf-IX) போன்ற ஏவுகணைகளை தவடுபொடியாக்க முடியும். ஆக நாசர் ஏவுகணைகளை மையப்படுத்தியே பெரும்பாலான அச்சுறுத்தல்களை நிகழ்த்தி வந்த அண்டை நாடான பாகிஸ்தான் இனி சத்தம் போடாமல் இருக்கும் என்பதே இந்த ரூ.39,000 கோடி ஒப்பந்தத்தின் கருவாகும்.

சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா.!

சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா.!

இந்த ஒப்பந்தத்தில் சீனாவிற்கு அடுத்த இடத்தில இந்தியா உள்ளதென்பதும், கடந்த 2016-ஆம் ஆண்டில், இதே ஆயுத அமைப்பிற்காக நிகழ்த்த உடன்படிக்கையின்கீழ் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை சீனா செலவிட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் கூற்றின்படி, அடுத்த 54 மாதங்களில் ஐந்து எஸ்-400 அமைப்புகளும் இந்தியாவுக்கு அனுப்பப்படலாம்.

சூப்பர்சானிக் மற்றும் ஹைப்பர்சோனிக்.!

சூப்பர்சானிக் மற்றும் ஹைப்பர்சோனிக்.!

முன்பு ரஷ்ய பாதுகாப்பு படைகளுக்கு மட்டுமே கிடைத்த எஸ்-300 இன் மேம்பட்ட பதிப்பான எஸ்-400 ஆனது பல்வேறு ஏவுகணை அச்சுறுத்தல்களை இடைமறிக்கும் வல்லமை கொண்டது. மற்றும் பல்வேறு வகையான சூப்பர்சானிக் மற்றும் ஹைப்பர்சோனிக் வகை ஏவுகணைகளையும் கொண்டுள்ளது.

ஏறக்குறைய 17,000 கிலோ மீட்டர் வேகத்தில்சென்று தாக்கும்.!

ஏறக்குறைய 17,000 கிலோ மீட்டர் வேகத்தில்சென்று தாக்கும்.!

இதில் நீண்ட தூரம் (120-370 கிமீ) இடைமறிப்பு ஏவுகணைகளுக்கான பேச்சுவார்த்தையை தான் இந்தியா நிகழ்த்தி வருகிறது. மொபைல் ஏவுகணை தளத்தில் இருந்து பாயும் இவ்வகை ஏவுகணைகளானது 120 கிமீ, 200 கிமீ, 250 கிமீ மற்றும் 380 கிமீ ஆகிய தூரங்களில் உள்ள இலக்குகளை ஏறக்குறைய 17,000 கிலோ மீட்டர் வேகத்தில்சென்று தாக்கும்.

எந்தவொரு விமானத்தை விடவும் வேகமானது.!

எந்தவொரு விமானத்தை விடவும் வேகமானது.!

ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் எந்தவொரு விமானத்தை விடவும் வேகமான இந்த ஏவுகணை அமைப்பானது - மூலோபாய குண்டுவீச்சுகள், மின்னணு போர் விமானங்கள், உளவு விமானம், ஆரம்ப எச்சரிக்கை ரேடார் விமானங்கள், போர் விமானங்கள், மூலோபாய க்ரூஸ் ஏவுகணைகள் ஆகியவைகளை கூட இலக்காகக் கொள்ளும் திறன் வாய்ந்ததாகும்.

Best Mobiles in India

English summary
This Rs 39,000 crore India-Russia missile deal could help corner Pakistan. Read more about this Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X