ஏன் இன்னும் ஏலியன்ஸ் நம்மை நெருங்கவில்லை - உண்மையை போட்டுடைத்த விஞ்ஞானி!
நம்மில் பெரும்பாலானோர்களுக்கு ஏலியன்ஸ் என்பதற்கான விளக்கமோ, அறிமுகமோ தேவையே இல்லை.
நம்மில் பெரும்பாலானோர்களுக்கு ஏலியன்ஸ் என்பதற்கான விளக்கமோ, அறிமுகமோ தேவையே இல்லை. இருந்தாலும் அறியாதோர்களுக்காக மற்றும் அதிகம் அறிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வம் கொண்டவர்களுக்காக ஒரு சிறிய விளக்கம்!

"ஏலியன்" என்ற வார்த்தையை கேட்டதுமே - ஹாலிவுட் திரைப்படங்களில் காட்சிப்டுத்தப்பட்ட கொடூரமான முகம் மற்றும் விசித்திரமான உடல் அமைப்புகளை கொண்ட, மனிதர்களை கொன்று குவிக்கும் ஒரு உயிரினம் என்று நினைத்து விட வேண்டாம். ஏலியன் என்பதற்கான பிரதான மற்றும் உண்மையான அர்த்தம்: நாம் வாழும் இந்த பூமி கிரகிதனுள் இருந்து தோன்றாத ஒரு உயிரினம் என்று அர்த்தம். அது கொடூரமானதாக இருக்குமா? விசித்திரமாக இருக்குமா என்பதை பற்றி எல்லாம் யாருக்கும் தெரியாது.

ஹாலிவுட் திரைப்படங்களில் ஏலியன்ஸ்
அப்போது ஏன் ஹாலிவுட் திரைப்படங்களில் ஏலியன்ஸ் என்றாலே கொடூரமான ஒன்றாக காட்டுகிறார்கள் என்று நீங்கள் கேட்டால், அதை அழகான, அன்பான, நட்பான ஜீவராசிகளாய் காட்டி இருந்தால் நீங்கள் அந்த படங்களை எல்லாம் பார்த்து இருப்பீர்களா அல்லது வெறுமனே புறக்கணித்து இருப்பீர்களா? என்கிற பதில் கேள்வியை நான் கேட்பேன். கதாநாயகனை எளியவனாக காட்டி, வில்லனை வலிமையானவாக காட்டி, பின் அந்த எளியவன் எப்படி அந்த வலியவனை வீழ்த்துகிறான் என்பதை காட்டி முடிப்பதென்பது ஒரு சினிமா கோட்பாடு, அவர்களும் வியாபாரம் செய்ய வேண்டாமா? சரி அப்போது உண்மையான நிலைப்பாடு தான் என்ன?

பெர்மி பெராடெக்ஸ்
பெர்மி பெராடெக்ஸ் தான் உண்மையான நிலைப்பாடு! அதென்ன பெர்மி பெராடெக்ஸ்? அது ஒரு கதை! சரியாக 1950 ஆம் ஆண்டின் கோடை காலத்தில், இயற்பியல் வல்லுநர் ஆன என்ரிகோ ஃபெர், ஒரு மதிய உணவு இடைவேளையின் போது தனது சக ஊழியர்களிடம் ஒரு கேள்வி எழுப்பினார், "எல்லோரும் எங்கே இருக்கிறீர்கள் என்று நீங்கள் எப்போதாவது யோசித்தது உண்டா?" என்று.
இந்த இடத்தில் "எல்லோரும்" என்பதற்கு ஏலியன்ஸ் என்று பொருள். பெர்மியின் கருத்துப்படி, நாம் வாழும் இதே அண்டத்தில் உள்ள விண்மீன்களில் அறிவார்ந்த, தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட உயிரினம் நிச்சயமாக இருக்கிறது. ஆயினும்கூட, பல தசாப்தங்களாக நாம் அவர்களை தேடியும் கூட, அவர்கள் இருப்பதற்கான சரியான ஆதாரம் கிடைக்கவே இல்லை என்பதையும் அவர் நன்கு உணர்ந்திருந்தார். இந்த இடத்தில் பிறந்ததே - பெர்மி பெராடெக்ஸ், அதாவது பெர்மியின் முரண் என்று அர்த்தம். அது என்ன முரண்?

வேற்று கிரக நாகரிகங்ள்
ஒருபக்கம் ஏலியன்ஸ் இருப்பதற்கான சரியான சான்றுகள் இல்லை, மறுபக்கம் வேற்று கிரக நாகரிகங்ள் இருப்பதற்கான அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கிறது. இந்த இரண்டிற்கும் இடையே உள்ள வெளிப்படையான முரண்பாடு தான் - பெர்மி பெராடெக்ஸ். இப்படியாக ஏலியன்ஸ் பற்றி பல விஞ்ஞானிகள் பல தசாப்தங்களாக பல கோட்பாடுகளை முன்வைத்துள்ளனர், ஆனால் கிரக விஞ்ஞானி ஆன ஆலன் ஸ்டெர்ன் மூலம் சமீபத்தில் முன் வைக்கப்பட்ட யோசனை ஆனது, நம்மை சற்று கூடுதலாகவே யோசிக்க வைக்கிறது, பின் வருவது அவர் வெளியிட்ட வீடியோவின் டிரான்ஸ்கிரிப்ட் ஆகும்.

சூரிய மண்டலத்திலேயே பெரும்பாலான கடல் உலகங்கள்
ஆலன் ஸ்டெர்ன்: நமது சொந்த சூரிய மண்டலத்திலேயே பெரும்பாலான கடல் உலகங்கள் (அதாவது நீர் ஆதாரங்கள் கொண்ட அல்லது கொண்டு இருந்த கிரகங்களை கூறுகிறார்) உள்ளன. இந்நிலைப்பாட்டில், நாம் எட்ட முடியாத எல்லைகளுக்கு அப்பால் இன்னும் எத்தனையோ கடல் உலகங்கள் இருக்கலாம். உயிர்களின் வளர்ச்சிக்கு முக்கியமான காரணங்களாக திகழ்வது கடல்களும் தண்ணீரும் தான் என்பதை நாம் நன்கு அறிவோம்.

கடலின் உட்புறத்தில்
அது உண்மையாகும் பட்சத்தில், இந்த அண்டத்தின் பல எல்லைகளில் உள்ள பல கிரங்களில் உள்ள கடல்களின் கீழே தான் (கடலின் உட்புறத்தில்) உயிரனங்களும், அவைகளின் தொழில்நுட்ப நாகரீகங்களும் வளர்ந்து கொண்டிருக்கலாம் அல்லது வளர்ந்து இருக்கலாம் (யாருக்கு தெரியும், அந்த குறிப்பிட்ட கிரகத்தின் சூழ்நிலை மற்றும் பரிணாம வளர்ச்சி ஆனது நீருக்குள் வாழும் மக்களாக கூட உருவாக்கி இருக்கலாம்).
அவர்கள் இயற்கையாகவே நம்மிடமிருந்து துண்டிக்கப்படுவார்கள், ஏனென்றால்அவர்கள் தங்கள் கடலுக்கு மேலே பாறைகளையும் மற்றும் திடமான பனிக்கட்டிளையும் மேலோடு போல் கொண்டு இருக்கலாம்.

பிரபஞ்சம்
அதன் விளைவாக நாம் அவர்களின் நகர விளக்குகளை பார்க்க முடியாது. அவர்களுடைய தொடர்புகளை கேட்க முடியாது. அல்லது தொடர்புகொள்வதற்கு ஒரு பிரபஞ்சம் இங்கு இருப்பது கூட அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். அல்லது அவர்களால் ஒருபோதும் விண்வெளி பயணத்தை தொடங்கும் அளவிற்கான வளர்ச்சியை அடையாமல் இருந்திருக்கலாம்.

கடல் உலகங்கள்
கடல் உலகங்கள், குறிப்பாக கடலுக்குள் இருக்கும் உலகங்கள் ஆனது இந்த கேலக்ஸி முழுவதும் பொதுவாகவே இருக்கும் ஒன்று தான் என்பதை, பலரும் தர்க்க ரீதியாக ஏற்றுக் கொள்கின்றனர். அதே சமயம், இதற்கான துல்லியமான ஆதாரமும் கிடையாது என்பதும் வெளிப்படை. ஆனால் பெர்மி முரண்பாட்டின் படி, இதற்கான சில நேரடியான சான்றுகள் மற்றும் சாத்தியமான விளக்கங்கள் உள்ளன. சரியான பதில் என்னவென்று யாருக்கும் தெரியாது.

நீண்ட காலம்
ஆனால் சில எடுத்துக்காட்டுகளை கூறலாம்: ஒருவேளை ஏலியன்கள் பிற நாகரிகங்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கான ஆர்வத்தினை கொண்டிருக்காமல் இருந்து இருக்கலாம் அல்லது ஒருவேளை அவர்கள் நீண்ட காலம் நீடிக்ககாமல் போய் இருக்கலாம். ஆனால், மேலே கூறியது போலவே - சரியான பதில் என்னவென்று யாருக்கும் தெரியாது!


Click it and Unblock the Notifications