பாக்கிஸ்தான் உள்ளே வராத கழுகு.! காரணம் சொன்னா நீங்க நம்பமாட்டீங்க.!

கழுகுகள் பிரம்மாண்டமான உயிரினங்கள் என்று அனைவராலும் பாராட்டப்படுவதற்கு அதன் தோற்றம் மட்டும் காரணமல்ல, முக்கியமாய் கழுகுகளின் அறிவுத்திறன் மற்றும் வேட்டையாடும் திறன் தான் முக்கிய காரணம்.

|

கழுகுகள் பிரம்மாண்டமான உயிரினங்கள் என்று அனைவராலும் பாராட்டப்படுவதற்கு அதன் தோற்றம் மட்டும் காரணமல்ல, முக்கியமாய் கழுகுகளின் அறிவுத்திறன் மற்றும் வேட்டையாடும் திறன் தான் முக்கிய காரணம்.

அடையாள சின்னங்களாக கழுகுகள்

அடையாள சின்னங்களாக கழுகுகள்

பல உலக நாடுகளில் அடையாள சின்னங்களாகவும், தேசிய சின்னங்களாகவும் பயன்படுத்தப்பட்டு கழுகுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகின்றது. இன்னும் சில நாடுகளில் நாணயங்கள் மற்றும் கலைப் படைப்புகளில் கூட கழுகுகளின் உருவங்களையே பயன்படுத்தி வருகின்றனர்.

சனிகிரக சுற்றுப்பாதையில் ஏலியன்களின் விண்வெளி நிலையம்- கண்டறிந்த நாசா.!சனிகிரக சுற்றுப்பாதையில் ஏலியன்களின் விண்வெளி நிலையம்- கண்டறிந்த நாசா.!

ஆர்வத்தைத் தூண்டும் பல புதிய தகவல்

ஆர்வத்தைத் தூண்டும் பல புதிய தகவல்

இந்த பிரம்மாண்டமான பறவையின் பயணங்களைப் பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்தது உண்டா? அதில் என்ன சுவாரசியம் இருக்குமென்று எண்ணியதுண்டா? மனிதனின் எதிர்பாராத சில கண்டுபிடிப்புகள் பல வகை மக்களுக்கு ஆர்வத்தைத் தூண்டும் பல புதிய தகவல்களை வழங்கி வருகிறது.

உலகை திரும்பி பார்க்க வைத்த கழுகு

உலகை திரும்பி பார்க்க வைத்த கழுகு

கழுகின் வாழ்க்கைமுறை பற்றிப் பல சுவாரசியமான செய்திகள் இதுவரை வெளியாகி இருக்கிறது. அந்த வரிசையில் தற்பொழுது வெளியாகியுள்ள இந்த செய்தி உலகத்தில் உள்ள அனைவரையும் ஆசிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இறந்த கழுகின் சடலம்

இறந்த கழுகின் சடலம்

சவூதி அரேபியாவில் உள்ள ஜிசான் பகுதியில் வசிக்கும் ஃபாத் கஷ் என்ற ஒரு இளைஞர், தனது வீட்டின் அருகில் உள்ள துப்பி நிலத்தின் நடைபாதையில் எதிர்பாராத விதமாகக் கழுகு ஒன்றைப் பார்த்துள்ளார். அருகில் சென்று பார்த்தபோது அது இறந்த கழுகின் சடலம் என்பது தெரியவந்துள்ளது.

 டிராக்கிங் டிவைஸ்

டிராக்கிங் டிவைஸ்

அனாதையாய் கிடந்த கழுகை அடக்கம் செய்யத் தூக்கிய போது, அதன் கழுத்தில் டிராக்கிங் டிவைஸ் பொருத்தப்பட்டிருப்பதைக் கண்டறிந்துள்ளார் ஃபாத் கஷ். கழுகின் கழுத்திலிருந்த டிராக்கிங் டிவைஸில் அதைப் பொருத்திய உரிமையாளரின் ஈமெயில் ஐடியுடன் குறிப்பு ஒன்றும் எழுதப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

ஈமெயில் விலாசம்

ஈமெயில் விலாசம்

கஜகஸ்தான் பகுதில் உள்ள ஒருஆராய்ச்சியாளரின் டிரெக்கிங் டிவைஸ் அது என்பதும், இந்த டிரெக்கிங் டிவைஸை யாரும் எங்கேயும் கண்டுபிடித்தால் உடனே இந்த ஈமெயில் விலாசத்தைத் தொடர்பு கொள்ளுங்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விஞ்ஞானிகளின் பரிசோதனை

விஞ்ஞானிகளின் பரிசோதனை

ஒரு வருட காலமாகக் கழுகு சென்ற அணைத்து இடங்களும் டிராக்கிங் டிவைஸில் சேமித்து வைக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் 20 கழுகளின் கழுத்தில் டிராக்கிங் டிவைஸ்களை கட்டி விஞ்ஞானிகள் பரிசோதனை செய்துள்ளனர்.

பாகிஸ்தான் எல்லையை கடக்காத கழுகு

பாகிஸ்தான் எல்லையை கடக்காத கழுகு

ஒரு ஆண்டில் இந்த பறவைகள் பல நாடுகளைக் கடந்து பயணம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. ஆனால், சுவாரஸ்யம் என்னவென்றால் இந்த பறவைகள் எதுவும் கடலை கடந்து செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடல் இருக்கும் பகுதிகளில் இந்த பறவைகள் கரையோரமாய் பறந்து சென்றுள்ளதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக காற்றின் அழுத்தம் கடல் பரப்பில் அதிகமாய் உள்ளதுஎன்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதில் இன்னொரு சுவாரசியம் என்னவென்றால் அரேபிய நாடு கழுகுகள் எதுவும் பாகிஸ்தான் எல்லையை கடக்கவில்லை என்பது தான் அனைவரின் ஆச்சிரியம்.

தினமும் குறைந்தது 355 கிலோ மீட்டர் பயணம்

தினமும் குறைந்தது 355 கிலோ மீட்டர் பயணம்

இன்னும் கழுகுகளை பற்றி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள சுவாரசியமான விஷங்களை நீங்கள் கேட்டால் மெய் சிலிர்த்து போவீர்கள். கழுகுகள் தினமும் குறைந்தது 355 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கிறது என்ற தகவலை அவர்கள் வெளியிட்டுள்ளனர். நீங்கள் கனவிலும் நினைத்து பார்த்திடாத தூரத்தை கழுகுகள் அதன் வாழ்நாளில் கடக்கிறது என்பதே நம்பமுடியாத உண்மை.

Best Mobiles in India

English summary
This Map Shows All Of The Places Eagles Visited In One Year : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X