Home
Scitech

நிலவில் மனிதர்கள் ஓட்டப்போகும் நாசா ரோவர் இதுதான்! இஸ்ரோ-ககன்யான் திட்டத்தில் இதுபோன்ற ரோவர் உண்டா?

நிலவில் மனிதர்கள் பயணம் செய்யப் பயன்படுத்திய முதல் லூனார் ரோவர் வாகனம், அப்பல்லோ 15 நிலவு திட்டத்தில் பயன்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டு முறை அப்பல்லோ 16 மற்றும் 17 ஆகின நிலவு திட்டத்திலும், இந்த ரோவர் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டது. இந்த வாகனம் 'மூன் பஃக்கி(Moon Buggy)' அல்லது 'மூன் லூனார்' ரோவர் என்று அழைக்கப்பட்டது.

மனிதர்களுக்கான மாற்றுக் கிரகம் தேடி அலையும் நாசா

மனிதர்களுக்கான மாற்றுக் கிரகம் தேடி அலையும் நாசா

நாசா விண்வெளி மையம், விண்வெளி ஆராய்ச்சியில் பெரிய நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. நிலவு மற்றும் செவ்வாய்க் கிரகத்தை மட்டும் ஆராயாமல், மொத்த பால் கண்டத்தையும் ஆராய்ச்சி செய்து, அதில் மனிதர்கள் வாழ்வதற்கான மாற்றுக் கிரகத்தைத் தேடி வருகிறது. அண்மையில் புதிதாக பல எக்ஸோபிளானட்களையும் கண்டுபிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வரும் நாசா

புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வரும் நாசா

நாசாவின் இந்த நோக்கத்தை வெற்றிகரமாக செயல்படுத்த, நாசா பல புதிய சாதனங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகிறது. முக்கியமாக நிலவு மற்றும் செவ்வாய்க் கிரகத்தில் உள்ள நிலையை முழுமையாக ஆய்வு செய்து ஆராய்ச்சி செய்வதற்கும் அதிநவீன ரோவர் வாகனங்களை உருவாக்கி வருகிறது.

லூனார் எலக்ட்ரிக் ரோவர்

லூனார் எலக்ட்ரிக் ரோவர்

மைக் ஜெர்ன்ஹார்ட் என்ற நாசாவின் ரோவர் கட்டுப்பாட்டு மேலாளர், லூனார் எலக்ட்ரிக் ரோவரை கடந்த 2010 ஆம் ஆண்டு உருவாக்கினார். இந்த லூனார் எலக்ட்ரிக் ரோவரில் நான்கு விண்வெளி வீரர்கள் இரண்டு வாரத்திற்கு அதில் தங்கி அவர்களுடைய ஆராய்ச்சியை மேற்கொள்ளும் விதத்தில் வடிவமைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

கடினமான கண்ணாடி கவசம்

கடினமான கண்ணாடி கவசம்

இதில் ஆறு பிரஷரைஸ்ட் சக்கரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் முன்பக்கம் முற்றிலுமாக கடினமான கண்ணாடியில் உருவாக்கப்பட்டுள்ளது. மேல் தளம், வானத்தில் நிகழும் மாற்றங்களைக் கண்காணிக்கவும் மற்றும் கீழ் தளம், பாறை மற்றும் கிரகத்தின் தரை பரப்பைக் கண்காணிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஹெல்மெட் பப்பில்

ஹெல்மெட் பப்பில்

இத்துடன் இதன் கீழ் தளத்தில் 'ஹெல்மெட் பப்பில் (Helmet Bubble)' ஷீல்டும் கொடுக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் வாகனத்தின் உள் இருந்தே, தரை பரப்பில் உள்ள மாதிரிகளை ஆய்வு செய்யலாம். இந்த லூனார் எலெக்ரிக் ரோவர் 90 டிகிரிக்கு குறைவான எந்த ஆங்கிளிலும் திரும்பக்கூடிய வல்லமை கொண்டது.

அதிக வேகம்

அதிக வேகம்

முன்பு நாசாவால் உருவாக்கப்பட்ட ஆய்வு ரோவர்கள், ஒரு நாளுக்கு 40 மீட்டர் மட்டுமே நகர்ந்து ஆய்வுகளைச் செய்து முடிக்கும். ஆனால் தற்பொழுது உருவாக்கப்பட்டுள்ள இந்த லூனார் எலக்ட்ரிக் ரோவர்கள் மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. அப்படியானால் ஒரு நாளுக்கு எத்தனைக் கிலோ மீட்டர் தூரத்தை இதில் பயணிக்கலாம் என்று கணித்துக்கொள்ளுங்கள்.

விண்வெளி வீரர்களுக்கான பாதுகாப்பு சூட்

விண்வெளி வீரர்களுக்கான பாதுகாப்பு சூட்

அதிநவீன ரோவர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த லூனார் எலக்ட்ரிக் ரோவர் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பின்பக்கத்தில் இரண்டு விண்வெளி வீரர்களுக்கான விண்வெளி உடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. ரோவேரின் உள்பக்கத்திலிருந்து உடைகளை மாட்டிக்கொண்டு வீரர்கள் நிலவின் மேற்பரப்பில் தாராளமாக ஆராய்ச்சிகளைச் பாதுகாப்பாக செய்து முடிக்கலாம்.

விண்வெளி வீரர்களைப் பாதுகாப்பிற்காக

விண்வெளி வீரர்களைப் பாதுகாப்பிற்காக

குறைந்த நேரத்தில் அதிகப்படியான பகுதிகளை ஆய்வு செய்ய இந்த ரோவர்கள் பெரிதும் உதவும் என்று தெளிவாகத் தெரிகிறது. அதேபோல் விண்வெளியில் உள்ள ஆபத்துகளிலிருந்து விண்வெளி வீரர்களைப் பாதுகாக்க தான் இந்த ரோவ்ர்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

சோதனை ஓட்டம் வெற்றி

சோதனை ஓட்டம் வெற்றி

நாசாவின் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தின் போது இந்த ரோவரும் அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் நடைபெற்ற இதன் சோதனை ஓட்டமும் வெற்றி பெற்றுள்ளது.

இஸ்ரோவின் ககன்யான் திட்டம்

இஸ்ரோவின் ககன்யான் திட்டம்

இஸ்ரோ, நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் 2022ம் ஆண்டில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாசா இப்பொழுதே நிலவிற்கு மனிதர்களைப் பாதுகாப்பாக அனுப்பி ஆராய்ச்சியைத் துவங்கத் திட்டவட்டமாகச் செயல்பட்டு வருகிறது.

இஸ்ரோவும் ரோவர் உருவாக்கலாம்

இஸ்ரோவும் ரோவர் உருவாக்கலாம்

இதேபோல் புதிய ரோவரை இஸ்ரோவும் உருவாக்கினால் அட்டகாசமாக இருக்கும் தானே. இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தில் இப்படி ஒரு எலக்ட்ரிக் ரோவர் இருக்கிறதா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
This is the NASA Rover that humans will drive on the moon Did ISRO also having One Like This : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X