சூரியமண்டலத்தின் நம்பமுடியாத சுற்றுவட்டப்பாதை வரைபடம்!

|

விஞ்ஞான காட்சிப்படுத்தலுக்கான திறமையை என்னவென்று தெரிந்து கொள்ள விரும்பினால், எலினோர் லூட்ஸ்-ஐ தொடர்புகொள்ளலாம்(Eleanor Lutz) . வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் உயிரியல் பிரிவின் பிஹெச்டி மாணவரான அவரது வலைத்தளமான டேபிள்டாப் வேல்(Tabletop Whale)-ல், முழுமையான டிஸ்ப்ளேயில் அற்புதமான படைப்புகளை காண முடியும்.

18,000 க்கும் மேற்பட்ட விண்கற்கள்

18,000 க்கும் மேற்பட்ட விண்கற்கள்

அவரது சமீபத்திய படைப்பானது சூரிய மண்டலத்தில் உள் 18,000 க்கும் மேற்பட்ட விண்கற்கள் அனைத்தின் சுற்றுவட்டப்பாதையை காட்டும் வரைபடம்(Map) ஆகும். இதில் 10 கிமீ சுற்றளவு கொண்ட 10000 விண்கற்களும், அளவு தெரியாத 8,000 க்கும் மேற்பட்ட விண்கற்களும் அடங்கும்.

நட்சத்திரங்களின் காட்சி

நட்சத்திரங்களின் காட்சி

அவரது வலைத்தளத்தில் உள்ள டேக்லைன் கூறுவதுபோல, அவர் " அறிவியல் தொடர்பான அனைத்திற்கும் சார்ட்ஸ், இன்போகிராப்ஸ் மற்றும் அனிமேஷன் போன்றவற்றை உருவாக்குகிறார். "


ஒளிரும் உயிரினங்களின் காட்சி, பூமியிலிருந்து நீங்கள் பார்க்கக்கூடிய அனைத்து நட்சத்திரங்களின் காட்சி மற்றும் மெர்குரியின் அழகிய டோபோகிராபிக் வரைபடம் போன்றவற்றை அவர் உருவாக்கியுள்ளார்.

 அனிமேஷன் வரைபடம்

அனிமேஷன் வரைபடம்

ஆனால் அவரது இந்த புதிய ப்ராஜெக்ட், விண்வெளி சமுதாயத்தின் நிறைய கவனத்தை அவர் பக்கம் ஈர்த்ததுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விண்வெளியின் அட்லஸ்-ஐ உருவாக்குவதில் ஈடுபட்டுவருகிறார் லூட்ஸ். இது கிரகங்கள், நிலவுகள், வெளிப்புற விண்வெளி ஆகியவற்றின் பத்து காட்சிகளை உள்ளடக்கிய தொகுப்பு ஆகும்.


அவர் தனது வலைத்தளத்தில் கூறியதாவது " பூமியின் பருவங்கள் தொடர்பான ஒரு அனிமேஷன் வரைபடம், செவ்வாயின் புவியியல் வரைபடம், மற்றும் சூரிய மண்டலத்தில் 10 கி.மீ.-ஐ விட பெரிதாக உள்ள அனைத்தின் வரைபடம் ஆகியவற்றை உருவாக்கியுள்ளேன்" என்கிறார்.

கீழேயுள்ள 10கிமீ ஐ விட பெரிதாக உள்ள பொருட்களின் வரைபடம் ஒரு வித உற்சாகத்தை ஏற்படுத்துகிறது.

நிலவில் உள்ள நீர் பனிக்கட்டிகளை அறுவடை செய்யப்போகும் அமேசான்! எதற்கு என்று தெரியுமா?நிலவில் உள்ள நீர் பனிக்கட்டிகளை அறுவடை செய்யப்போகும் அமேசான்! எதற்கு என்று தெரியுமா?

 புரியக்கூடியதாக இல்லை

புரியக்கூடியதாக இல்லை

லூட்ஸ்-ன் அட்லஸ் ஆஃப் ஸ்பேஸ்-க்கான எல்லா தரவுகழும் பொதுவெளியில் இலவசமாக கிடைக்கும். நாசா மற்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு போன்ற மூலங்களிலிருந்து அவர் இவற்றை பெற்றுள்ளார்.


லூட்ஸ் இவ்வாறான வரைபடங்களை உருவாக்க காரணம் என்னவென்றால், தரவுகள் பொதுவெளியில் இலவசமாக கிடைத்தாலும், அது எளிதில் புரியக்கூடியதாக இல்லை. அந்த மூல தரவை எடுத்து அதை பயனுள்ள மற்றும் அழகானதாக காட்சிப்படுத்தல் ஆக மாற்றுவதற்கு நிறைய ஆற்றல் தேவைப்படுகிறது.

அற்புதமான அறிவியல்

அற்புதமான அறிவியல்

இதுகுறித்து ஒரு கலந்துரையாடலில் அவர் கூறுகையில், "இந்தத் தரவுகள் அனைத்தையும் எளிதல் அணுக முடியும். ஆனால் அது புரிந்துகொள்ள மிகவும் கடினமாக உள்ளது. இது மிகவும் அற்புதமான அறிவியல் மற்றும் இதை அனைவருக்கும் பார்த்து புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்பினேன்" என்றார்.


பூமியின் பருவங்கள் தொடர்பான அனிமேஷன் உள்ளிட்ட இன்னும் பொதுவெளியில் வெளியாகாத தனது படைப்புகளை இங்கு பகிர்ந்துகொண்டார்.

போலி செய்திகனை பரப்புவது யார்? கண்டறிய வாட்ஸ்ஆப்-ல் புதிய திட்டம்?போலி செய்திகனை பரப்புவது யார்? கண்டறிய வாட்ஸ்ஆப்-ல் புதிய திட்டம்?

 படைப்புகளை மிகவும் கலைநயத்துடன் உருவாக்குகிறார்

படைப்புகளை மிகவும் கலைநயத்துடன் உருவாக்குகிறார்

லூட்ஸ்-ன் பணி தரவுகளை காட்சிபடுத்துவதை விட மேலான. அவர் ஒரு வடிவமைப்பாளரின் கண்களுடன் தனது படைப்புகளை மிகவும் கலைநயத்துடன் உருவாக்குகிறார்.


ஆனால் ஒரு விஞ்ஞானியாக இருப்பதால், அவர்
உருவாக்கும் படைப்புகளில் பயன்படுத்தப்படும் தரவுகள் மற்றும் முறைகளை பகிர்ந்துகொள்ள விரும்புகிறார். அவரது ஒவ்வொரு படைப்புகளுக்கும் திறந்த மூல குறியீடு( open source code) மற்றும் அவற்றை எவ்வாறு உருவாக்குவது என்பதற்கான பயிற்சிகளை வெளியிட திட்டமிட்டுள்ளார்.

அறிவு தடை உள்ளது

அறிவு தடை உள்ளது

ஆனால் அறிவியல் என்பது முழுதும் தரவுகளை பற்றியது மற்றும் அடர்த்தியான தரவுகள் அனைவருக்கும் கிடைப்பதில்லை. இதை புரிந்துகொள்ள அதிக நேரம் மற்றும் பணம் தேவைப்படும்.


தற்போது அதை எளிதாக்கியுள்ள லூட்ஸ், விஞ்ஞானம் பற்றி சில சுவாரஸ்யமான, அற்புதமான விஷயங்களை அணுக அறிவு தடை உள்ளது. பல உண்மைகள் மற்றும் சமன்பாடுகள் உள்ளன மற்றும் அந்த அற்புத கருத்துக்களை அணுகக்கூடியதாக மாற்ற நான் விரும்புகிறேன் என்கிறார்.

Best Mobiles in India

English summary
This Incredible Orbit Map of Our Solar System Makes Our Brains Ache : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X