ரூ.2 விலையில் "ஸ்மார்ட்போன் மைக்ரோஸ்கோபிக் லென்ஸ்" உருவாக்கிய ஐஐடி மாணவி சாதனை.!

ஐஐடியை சேர்ந்த மாணவி கள்ளநோட்டு, இரத்த அணுக்களின் எண்ணிக்கை மற்றும் விந்தணு எண்ணிக்கை போன்ற மிகத் துல்லியமான விஷயங்களைக் கண்டறியும் மைக்ரோஸ்கோபிக் லென்ஸை உருவாக்கியுள்ளார்.

|

ஐஐடியை சேர்ந்த மாணவி கள்ளநோட்டு, இரத்த அணுக்களின் எண்ணிக்கை மற்றும் விந்தணு எண்ணிக்கை போன்ற மிகத் துல்லியமான விஷயங்களைக் கண்டறியும் மைக்ரோஸ்கோபிக் லென்ஸை உருவாக்கியுள்ளார்.

ரூ.2 விலையில் ஸ்மார்ட்போன் மைக்ரோஸ்கோபிக் லென்ஸ் உருவாக்கிய ஐஐடி மாணவி

இதன் சிறப்பு என்னவென்றால் இதை ஸ்மார்ட்போனில் இனைத்து பயணப்படுத்திக்கொள்ளலாம்.

மைக்ரோஸ்கோபிக் லென்ஸ்களின் விலை அதிகம்

மைக்ரோஸ்கோபிக் லென்ஸ்களின் விலை அதிகம்

பல நுணுக்க முறையின் படி இந்த மைக்ரோஸ்கோபிக் லென்ஸ்கள் உருவாக்கப்படுகிறது. தற்போது பயன்பாட்டில் உள்ள மைக்ரோஸ்கோபிக் லென்ஸ்களின் விலை மிகவும் அதிகமானவை. இந்த நிலையைச் சரி செய்ய ஐஐடி மாணவி ஸ்மார்ட்போன் மைக்ரோஸ்கோபிக் லென்ஸை உருவாக்கியுள்ளார்.

பிஎச்.டி. பயிலும் புவனேஸ்வரி கருணாகரன்

பிஎச்.டி. பயிலும் புவனேஸ்வரி கருணாகரன்

மும்பை ஐஐடியில் பிஎச்.டி. பயிலும் புவனேஸ்வரி கருணாகரன், சிலிகான் மீள் பொருளைக் கொண்டு பொலிடிமெத்தில்சிலோக்சென் (polydimethylsiloxane) என்ற அழைக்கப்படும் மூலக்கூற்றைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மைக்ரோஸ்கோபிக் லென்ஸை உருவாக்கியுள்ளார்.

ஸ்மார்ட்போன் மைக்ரோஸ்கோபிக் லென்ஸ்

ஸ்மார்ட்போன் மைக்ரோஸ்கோபிக் லென்ஸ்

தண்ணீருடன், பொலிடிமெத்தில்சிலோக்சென் திரவத்தை டெஸ்ட் டியூபில் சேர்க்கும் பொழுது ஒன்றுடன் ஒன்று கலக்காமல் பிறை போன்ற வடிவம் உருவாகிறது. இதனை ஹீட்டிங் செய்து லென்ஸாக திடப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மைக்ரோஸ்கோபிக் லென்ஸை பயன்படுத்தி 1.5 மைக்ரான் அளவிலான நுணுக்கங்களைக் காண முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெறும் ரூ.2 இல் ஸ்மார்ட்போன் மைக்ரோஸ்கோபிக் லென்ஸ்

வெறும் ரூ.2 இல் ஸ்மார்ட்போன் மைக்ரோஸ்கோபிக் லென்ஸ்

இந்த ஸ்மார்ட்போன் மைக்ரோஸ்கோபிக் லென்ஸை பயன்படுத்தி போலி ரூபாய் நோட்டுகள், மலேரியா, எண்டோஸ்கோப்பி மற்றும் டென்டல் சோதனை போன்ற பல இடங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம். ஐஐடி மாணவி உருவாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன் மைக்ரோஸ்கோபிக் லென்ஸ் தயாரிக்க வெறும் ரூ.2 தான் செலவாகும் என்பது ஆச்சரியம் அளிக்கும் ஒரு முக்கியச் செய்தி.

Best Mobiles in India

English summary
this iitian developed phone lens detects fake notes malaria : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X