Home
Scitech

பிளாஸ்டிக் கழிவிலிருந்து பெட்ரோல், டீசல்-அசத்திய விஞ்ஞானி.!

இதற்கு ஒரு கிலோவில் இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை பயனபடுத்தி ஒரு லிட்டர் பெட்ரோல் அல்லது டீசலை நாம் பெற முடியும் என்று அந்த விஞ்ஞானி கண்டுபிடித்துள்ள கருவியால் நாம் அறிய முடிகின்றது.

மக்கும் தன்மையற்றது என்பதற்காக பிளாஸ்டிக் எப்போதும் கேடு விளைவிக்கக்கூடியது என்பதை நாம் அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால் சமீபத்தில் தான் நம் சுற்றுசூழலில் பிளாஸ்டிக் ஏற்படுத்தும் குறிப்பிட்ட சில எதிர்மறை விளைவுகளை அடையாளம் காண முடிந்தது. எனவே இப்போது அதை எப்படி சமாளிக்க முடியுமென ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு வழிகளில் முயன்று வருகின்றனர்.

பிளாஸ்டிக் கழிவிலிருந்து பெட்ரோல், டீசல்-அசத்திய விஞ்ஞானி.!

இதன் முக்கிய நோக்கம் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது, ஏற்கனவே நாம் கடலில் வீசப்பட்டதை சுத்தம் செய்வதாகும். ஆனால் இரண்டாவது இலக்கை நாம் அடைந்தாலும், இன்னும் நம்மிடம் இருக்கும் டன் கணக்கிலான பிளாஸ்டிக்கை எப்படியாவது சமாளிக்க வேண்டும். தற்போது ​​தென் பிரான்சை சேர்ந்த கண்டுபிடிப்பாளர் ஒருவர் தன்னிடம் ஒரு வழி இருப்பதாக கூறுகிறார்.

பிளாஸ்டிக் கழிவில் இருந்து பெட்ரோல்:

பிளாஸ்டிக் கழிவில் இருந்து பெட்ரோல்:

இந்நிலையில் பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து பெட்ரோல், டீசல் தயாரிக்க முடியும் என்று பிரெஞ்ச் விஞ்ஞானி கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.

இதற்கு ஒரு கிலோவில் இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை பயனபடுத்தி ஒரு லிட்டர் பெட்ரோல் அல்லது டீசலை நாம் பெற முடியும் என்று அந்த விஞ்ஞானி கண்டுபிடித்துள்ள கருவியால் நாம் அறிய முடிகின்றது.

ஆராய்ச்சி செய்த விஞ்ஞானி:

ஆராய்ச்சி செய்த விஞ்ஞானி:

கிறிஸ்டோபர் காஸ்டஸ் எனும் அந்த ஆராய்ச்சியாளர், பிளாஸ்டிக்-ஐ உடைத்து திரவ எரிபொருளாக மாற்றும் ஒரு இயந்திரத்தை உருவாக்கியுள்ளதாக கூறியுள்ளார். 'க்ரேசாலிஸ்'(Chrysalis) என அழைக்கப்படும் அந்த இயந்திரத்தில் உள்ள 450 டிகிரி-செல்சியஸ் ரியாக்டரில் பிளாஸ்டிக் துகள்களை நிரப்பி, பைரோலிஸ் எனும் முறையில் அதீத வெப்பநிலையில் டீகாம்ப்போஸ் செய்யப்படும்.

டீசல், பெட்ரோல் உருவாக்கும் முறை:

டீசல், பெட்ரோல் உருவாக்கும் முறை:

அந்த இயந்திரத்தில் இச்செயல்முறையில் உருவாக்கப்படும் திரவத்தில், 65 சதவிகித டீசல் கிடைக்கும் எனவும், அதனை ஜெனரேட்டர்கள் அல்லது படகு மோட்டார்களுக்கு பயன்படுத்தலாம் என கிறிஸ்டோபர் கூறியுள்ளார். 18 சதவிகித அளவில் கிடைக்கும் பெட்ரோல் பயன்படுத்தி வெப்பப்படுத்துதல் மற்றும் விளக்குகளை எரியவைக்கலாம். 10 சதவிகித எரிவாயுவை வெப்பப்படுத்தவும், 7 சதவிகித கார்பனை கிரயான் மற்றும் நிறமூட்டிகளுக்கு பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

டீசல் பெட்ரோல் உருவாக்கியது:

டீசல் பெட்ரோல் உருவாக்கியது:

"இந்த பைரோலிஸ் முறையில் பிளாஸ்டிக் மூலக்கூறுகள் உடைக்கப்பட்டு, இலகுவான ஹைட்ரோகார்பன்களாக மாற்றப்படுகிறது. பின்னர் அவை வடிகட்டும் கோபுரத்திற்குள் அனுப்பப்பட்டு, டீசல் மற்றும் பெட்ரோலாக பிரிக்கப்படுகிறது. டவரின் மேல் பகுதியில் பிரிக்கப்படும் எரிவாயு சேமிப்புகலனில் சேமிக்கப்படும்" என்கிறார் கிறிஸ்டோபர்.

பிளாஸ்டிக்கை எரிபொருளாக மாற்றலாம்:

பிளாஸ்டிக்கை எரிபொருளாக மாற்றலாம்:

"எர்த் வேக்" எனும் சுற்றுச்சூழல் அமைப்புடன் இணைந்து கிறிஸ்டோபர் இந்த க்ரேசாலிஸ் இயந்திரத்தை வடிவமைத்த நிலையில், இந்த முன்மாதிரியை வணிகமயமாக்கப்பட்ட இயந்திரமாக வடிவமைக்கையில் சுமார் 50,000 யூரோக்கள் என்ற விலையில் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

10 டன் எரிபொருளாக மாற்றலாம்:

10 டன் எரிபொருளாக மாற்றலாம்:

இப்போதைக்கு இந்த இயந்திரம் மாதத்திற்கு 10 டன் பிளாஸ்டிக் வரை எரிபொருளாக மாற்றும் என கூறப்படுகிறது. ஒரு கிலோ பிளாஸ்டிக் ஒரு லிட்டர் திரவ எரிபொருளை வழங்கும் என்பதால், பிளாஸ்டிக் மற்றும் விலையுயர்ந்த எரிபொருள் பிரச்சனையில் சிக்கித்தவிக்கும் வளரும் நாடுகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இது இருக்கும்.

 ஒரு மணி நேரத்திற்கு 40 லிட்டர்:

ஒரு மணி நேரத்திற்கு 40 லிட்டர்:

ஒரு மணி நேரத்திற்கு 40 லிட்டர் எரிபொருளை உருவாக்கும் திறன் கொண்ட இது போன்ற மிகப்பெரிய இயந்திரத்தை 2019 மத்தியில் நிறுவுவோம் என இவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பொருளாதார ரீதியாக நிலைத்துநிற்க

பொருளாதார ரீதியாக நிலைத்துநிற்க

பொருளாதார ரீதியாக நிலைத்துநிற்கும் வகையில் இந்த மாதிரி அமைந்தால், இது சாத்தியமாக ஒன்றாக இருக்கும் மற்றும் இதுபோன்ற பலவற்றை காலத்திற்கு ஏற்ப உருவாக்கமுடியும்" என்கிறார் எர்த்வேக் அமைப்பை சேர்ந்த பிரான்கோயிஸ் டேனியல்.

Best Mobiles in India

English summary
this french inventor built a machine that turns 1 kg of plastic into 1 litre petrol diesel : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X