பறக்கும் போதே வடிவத்தை மாற்றும் டிராகன் ட்ரோன்.!

இந்த வகை ட்ரோன்களின் முக்கிய நோக்கமே, சிறிய இடத்தில் கூட செல்வதுதான் என்றாலும், இந்த ட்ரோனுக்கு பின்னால் உள்ள குழு இதை விட பெரிய பலன்களை எதிர்பார்க்கிறது.

|

டோக்கியா பல்கலைகழத்தின் ஜே.எஸ்.கே லேப்பில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ள 'டிராகன் ட்ரோன்', பல சிறிய ட்ரோன்கள் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அது ஆகாயத்தில் பறக்கும் போதே தனது வடிவமைப்பை மாற்றிக்கொள்ளும் திறன் படைத்தது எனவும் ஐ.இ.இ.இ கூறியுள்ளது. இந்த ட்ரோன் சதுரம், வளைந்த கோடு போன்று பல்வேறு வடிவங்களுக்கு மாறுவது மட்டுமில்லாமல், கடந்து செல்வதற்கு தேவையான இடவசதியை பொறுத்து எந்த வடிவத்தில் மாற வேண்டும் என்பதை தானாகவே முடிவெடுக்கவல்லது.

பறக்கும் போதே வடிவத்தை மாற்றும் டிராகன் ட்ரோன்.!

இந்த ட்ரோனின் பெயர், டூயல் ரோட்டர் எம்பட்டேட் மல்டிலிங்க் ரோபோட் வித் தி எபிலிடி ஆப் மல்டி-டிகிரி-ஆப்-ப்ரீடம் ஏரியல் டிரான்ஸ்பர்மேபன்' (Dual-rotor embedded multilink Robot with the Ability of multi-deGree-of-freedom aerial transformatiON-DRAGON) என்பதன் சுருக்கமே ஆகும். பட்டங்களின் வால் பகுதி சிறிய சிறிய பட்டங்களை இணைத்து ஒரு தொடராக செய்வது போல இந்த ட்ரோனின் வடிவமைப்பு டிராகன் பட்டங்களை போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

 பேட்டரி அமைப்பு

பேட்டரி அமைப்பு

ஒவ்வொரு சிறிய ட்ரோனிலும் பொருத்தப்பட்டுள்ள ஜோடி குழாய்வடிவ ஃபேன்கள், கிட்டத்தட்ட அனைத்து திசைகளிலும் திரும்புவதற்கு வழிவகுக்கிறது. இந்த ஒட்டுமொத்த அமைப்பும் இன்டெல் எக்லிட் டெவ் கிட்-ஆல் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் இதிலுள்ள பேட்டரி அமைப்பு ட்ரோன் மூன்று நிமிடங்கள் பறப்பதற்கான ஆற்றலை வழங்குகிறது.

 டிராகன் ட்ரோன்

டிராகன் ட்ரோன்

இந்த குறிப்பிட்ட வகை டிராகன் ட்ரோன் 4 பகுதிகளை கொண்டிருப்பதும், தானாகவே சதுர வடிவில் மாறுவதும், சிறு துளை வழியாக மேல்நோக்கி நகர்வதும் வீடியோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.

 12 பகுதிகள் வரை வைத்துக்கொள்ளலாம்

12 பகுதிகள் வரை வைத்துக்கொள்ளலாம்

இந்த வகை ட்ரோன்களின் முக்கிய நோக்கமே, சிறிய இடத்தில் கூட செல்வதுதான் என்றாலும், இந்த ட்ரோனுக்கு பின்னால் உள்ள குழு இதை விட பெரிய பலன்களை எதிர்பார்க்கிறது. அதற்கேற்றாற்போல இந்த டிராகன் ட்ரோனில் 12 பகுதிகள் வரை வைத்துக்கொள்ளலாம் எனவும், ஒரு பறக்கும் கை போல செயல்படும் இதனால் ஊடாடவும், நகரவும், பொருட்களை கையாளவும், கடைசி நேரத்தில் இரு ட்ரோன்களை கொண்டு பொருட்களை தூக்கக்கூட முடியும் எனவும் ஜே.எஸ்.கே குழு கூறுகிறது.

குழாய்களை நகர்த்துதல்

குழாய்களை நகர்த்துதல்

இந்த வகை ட்ரோன்களுக்கான பயன்பாடுகள் தெளிவற்றவையாக இருந்தாலும், இதன் தொழில்நுட்பம் ஆச்சர்யமளிக்கக்கூடியது. குழாய்களை நகர்த்துதல் போன்ற தொழிற்சாலை பயன்பாட்டிற்கும், தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்கும் பயன்படுத்தலாம்.

மோஜோ ஜாயோ

மோஜோ ஜாயோ

டோக்கியா பல்கலைகழகத்தில் துணை பேராசிரியராக பணியாற்றும் மோஜோ ஜாயோ கூறுகையில், "இது இத்துடன் முடிந்துவிடவில்லை. இந்த இணைப்புகளை அடிப்படையாக வைத்து நாங்கள் அடுத்ததாக ' பல கால்' (multi legged) அமைப்பை வடிவமைக்கவுள்ளவோம். அதன் பிறகு இந்த ரோபோட் பறப்பது மட்டுமில்லாமல், தரையில் நடக்கவும் முடியும். இதன் பலனாக ஆற்றல் சேமிக்கப்படும்"என்கிறார்.

பறக்கும் ஹியூமனாய்டு

சூழ்நிலையை பொறுத்து எப்படி நகரவேண்டும் என்பதை தானாகவே முடிவெடுக்கும் இது நிச்சயம் மிக ஆச்சர்யமாக ஆராய்ச்சி. எங்களுடைய ஒற்றை கனவு ஆளில்லாத அயர்ன்மேனை போல பறக்கும் ஹியூமனாய்டு" என கூறுகிறார் மோஜோ.

Best Mobiles in India

English summary
This flying ‘dragon’ drone can change shape in midair: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X