அட்டகாசமாய் அலற வைக்கும் சைலன்ட் கில்லர்.!!

Written By:

செல்திக் இடி முழக்க கடவுளின் குறிக்கும் வகையில் சூட்டப்பட்ட பெயர்  தான் தரானிஸ். ஐக்கிய ராஜ்ஜியத்தின் உச்சக்கட்ட பொறியியல் மற்றும் வானூர்தி வடிவமைப்பிற்கு சிறந்த எடுத்துக்காட்டாக தரானிஸ் விளங்குகின்றது.

ஐக்கிய ராஜ்ஜியத்தின் தலைசிறந்த ஆராய்ச்சியாளர்கள், வானூர்தியாளர்கள் மற்றும் பொறியாளர்கள் இணைந்து பணியாற்றியதன் விளைவு தான் தரானிஸ். இந்த பணியில் சுமார் 250க்கும் அதிகமான நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் ஈடுப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
அறிமுகம்

1

£185 மில்லியன் செலவில் ஐக்கிய ராஜ்ஜிய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ஐக்கிய ராஜ்ஜிய இன்டஸ்ட்ரி இணைந்து தயாரித்த தரானிஸ் போர் விமானம் 2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.

ஆளில்லா விமானம்

2

இந்த விமானம் ஆளில்லா விமான முறையை சார்ந்து மனிதர்களின் மூலம் கட்டுப்படுத்தக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

திறன்

3

ஐக்கிய ராஜ்ஜியத்தின் ஆளில்லா விமான துறையின் திறன்களை பரைசாற்றும் விதமாக நீடித்த கண்கானிப்பு, இலக்குகளை குறித்தல், உளவுத்துறை தகவல் சேகரித்தல் என பல திறன்களை தரானிஸ் கொண்டிருக்கின்றது.

தொழில்நுட்ப திறன்

4

யாராலும் கண்டுபிடிக்க முடியாத படி தொலைதூர தாக்குதல்களை மிகவும் கச்சிதமாக நிகழ்த்தும் திறன் பெற்றுள்ளது.

பாதுகாப்பு

5

ஐக்கிய ராஜ்ஜியத்தின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ராயல் ஏர் ஃபோர்ஸ் இணைந்து ஜெட் விமானம் மற்றும் ஆளில்லா போர் விமானங்களை கொண்டு பாதுகாப்பினை பலப்படுத்துகின்றன.

வேகம்

6

மணிக்கு சுமார் 700 மீட்டர் மற்றும் அதற்கும் அதிகமான வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட தரானிஸ் சோனிக் பூம் சத்தம் எழுப்பினாலும் யாராலும் அதனினை காண முடியாது.

தெரியாது

7

கிட்டத்தட்ட ரேடார் கண்ணுக்கு தெரியாதளவு தரானிஸ் வடிவமைக்கப்பட்டுள்ளதாக டேவிட் கோட்ஸ் தெரிவித்துள்ளார். இவர் இந்த விமானத்தை தயாரித்த பிஏஇ நிறுவனத்தின் செய்தி பிரிவை சேர்ந்தவர் ஆவார்.

சிறந்த தயாரிப்பு

8

மிகவும் அதிநவீன முறையில் பல்வேறு திறன் கொண்டிருப்பதால் ப்ரிட்டன் தயாரித்ததில் தலைசிறந்த ஒன்றாக தரானிஸ் கருதப்படுகின்றதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

9

அணு ஆயுத போர் : தயார் நிலையில் ரஷ்ய தொழில்நுட்பம்.!!

இரசாயன ஆயுதம் தயாரிக்கும் ஐஎஸ்ஐஎஸ் : சர்வதேச நிறுவனம் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்.!!

முகநூல்

10

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
This Drone is Most secret weapons in the world Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot