இரத்த போக்கை உடனே நிறுத்தும் "பயோ சிந்தெடிக் க்ளூ".! விஞ்ஞானிகள் சாதனை.!

|

விபத்து அல்லது பெரிதும் காயம் அடைந்த நபர்களின் உயிரிழப்பிற்குக் காரணமாக இரத்த போக்கு இருக்கிறது. அதிகப்படியான இரத்தம் வீணாவதினால் பல உயிர்கள் இறக்கிறது என்பதே உண்மை. இதனைச் சரிப்படுத்தச் சீனா விஞ்ஞானிகள் சேர்ந்து புதிய பயோ சிந்தெடிக் க்ளூவை உருவாக்கியுள்ளனர்.

பயோ சிந்தெடிக் க்ளூ

பயோ சிந்தெடிக் க்ளூ

காயம் அல்லது உடலில் எந்த பகுதியில் கிழித்தல் ஏற்பட்டாலும், இரத்த போக்கு உள்ள பகுதியில் இந்த பயோ சிந்தெடிக் க்ளூவை தடவினால் வெறும் 20 வினாடிகளில் இரத்த போக்கை உடனே தடுத்து நிறுத்திவிட முடியும் என்ற விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 ஈரமான இடங்கள் மற்றும் உயர் இரத்த அழுத்த இடங்களில் க்ளூ

ஈரமான இடங்கள் மற்றும் உயர் இரத்த அழுத்த இடங்களில் க்ளூ

இதற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட க்ளூகளால், உங்கள் உடலில் உள்ள தமனிகள் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் இரத்த போக்கை மட்டுமே தடுக்க முடியும். ஆனால் இதயம் மற்றும் பெருநாடி போன்ற ஈரமான பகுதிகளில், முன்பு கண்டுபிடிக்கப்பட்ட க்ளூக்கள் வேலை செய்யாது. ஆனால் இந்த பயோ சிந்தெடிக் க்ளூ இதயம் போன்ற ஈரமான இடங்கள் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ள இடங்களிலும் சிறப்பாகச் செயல்படுகிறது.

க்ளூ மூலக்கூறுகள்

க்ளூ மூலக்கூறுகள்

உங்கள் மூட்டுகளில், உங்கள் தசைகள், உங்கள் பற்கள் மற்றும் உங்கள் ஈறுகளுடன் பற்களை இணைக்க பெரும்பாலும் காணப்படும் இந்த திசுக்களின் மூலக்கூறுகளைக் கொண்டு இந்த பயோ சிந்தெடிக் க்ளூ உருவாக்கப்பட்டுள்ளது.

மனிதர்கள் மேல் பயோ சிந்தெடிக் க்ளூ

மனிதர்கள் மேல் பயோ சிந்தெடிக் க்ளூ

துடிக்கும் இதயத்தில் ஏற்பட்ட 6 மில்லிமீட்டர் விட்டம் கொண்ட உயர் அழுத்த இரத்த போக்கைத் தையல் எதுவும் இன்றி வெறும் 20 வினாடிகளில் பயோ சிந்தெடிக் க்ளூ மூலம் உடனே நிறுத்தப்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை பன்றிகள், மற்றும் விலங்குகள் மீது வெற்றிகரமாகச் இந்த பயோ சிந்தெடிக் க்ளூ சோதனை செய்யப்பட்டுள்ளது. மனிதர்கள் மேல் இன்னும் இந்த பயோ சிந்தெடிக் க்ளூ சோதனை செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
this bio glue can stop bleeding in a wound in just 20 seconds without leaving any mark behind : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X