இந்த 5 வயது சிறுவன் நாசாவிற்கு அனுப்பிய கடிதம் என்னவென்று கூறினால் நம்புவீர்களா.?

Written By:

சமீபத்தில் நாசாவின் கிரக பாதுகாப்பு அதிகாரி பணிக்கு 9 வயது சிறுவன் விண்ணப்பித்திருந்தான், ஞாபகம் இருக்கிறதா.?

5 வயது சிறுவன் நாசாவிற்கு எழுதிய கடிதம்; சொன்னால் நம்ப மாட்டீர்கள்.!

"ஏலியன்களிடம் இருந்து இந்த உலகத்தை என்னால காப்பாற்ற முடியும். நான் நிறைய ஏலியன் சார்ந்த திரைப்படங்கள் கண்டுள்ளேன். அவ்வளவு ஏன் நானே ஒரு ஏலியன் தான், என்னை ஏலியன் என்று தான் என் சகோதிரி அழைப்பாள்" என்று மிகவும் அப்பாவித்தனமான கடிதமொன்றை நாசாவிற்கு அனுப்பிவைத்தான் அல்லவா.!

5 வயது சிறுவன் நாசாவிற்கு எழுதிய கடிதம்; சொன்னால் நம்ப மாட்டீர்கள்.!

அந்த சம்பவம் நடந்து ஒருமாத காலம் கூட ஆகவில்லை. தற்போது 5 வயது சிறுவன் ஒருவன் நாசாவிற்கு நம்பமுடியாத கடிதமொன்றை அனுப்பியுள்ளான். அந்த கடிதத்தின் மிக முக்கியமான பகுதியே அந்த "ராக்கெட் டிசைன்" தான்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ப்ளூ பிரிண்ட் முன்மாதிரி

ப்ளூ பிரிண்ட் முன்மாதிரி

இட்ரிஸ் ஹில்டன் என்ற இச்சிறுவன் ராக்கெட் ஒன்றை உருவாக்குமாறு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவிற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளான். மேலும், அந்த கடித்ததோடு ராக்கெட் டிசைனின் "ப்ளூ பிரிண்ட் முன்மாதிரி"யையும் இணைத்துள்ளான்.

இந்த ராக்கெட் உங்களுக்கானது

இந்த ராக்கெட் உங்களுக்கானது

அதாவது அந்த கடிதத்தில் - நாசாவிற்கு, நான் உங்களுக்காக ஒரு கடிதம் எழுதியிருக்கிறேன். "இந்த ராக்கெட் உங்களுக்கானது. தயவுசெய்து இதை விண்வெளிக்கு விண்வெளி வீரருடன் அனுப்பி வைக்கவும், நான் எனது ராக்கெட்டை நாசாவிற்கு விண்வெளிக்கு அனுப்புவேன்" என்று எழுதியுள்ளான்.

பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்

பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்

தனது மகனின் வடிவமைப்பிற்க்கு விண்வெளி நிறுவனத்திடம் இருந்து பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், இட்ரிஸ் தந்தையான ஜமால், வாஷிங்டன் டி.சி-யில் உள்ள நாசாவின் தலைமையகத்திற்கு இக்கடிதத்த அனுப்பினார்.

"அஸ்ட்ரோனட் லைசன்ஸ்"

கடிதத்தை அனுப்பியது மட்டுமின்றி நாசாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிலும் அதை பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது "என் 5 வயது மகன், அவனது #ராக்கெட் வடிவமைப்பை #நாசாவிற்கு அனுப்பியுள்ளான். மேலும் அவன் "அஸ்ட்ரோனட் லைசன்ஸ்" கேட்கிறான் என்று பதிவிட்டுள்ளார்.

ஒரு நாள் நீ எங்களோடு இணைவாய்

ஒரு நாள் நீ எங்களோடு இணைவாய்

இதற்கு பதிலளித்துள்ள நாசா "ஒரு பெரிய எதிர்கால விண்வெளி வீரருக்கான சரியான தொடக்கம் இது. இச்சிறுவன் விண்வெளி நோக்கி பயணம் செய்ய நான் வாழ்த்துகிறேன். உங்களை போன்ற இளம் நபர்களை முழுமையாக ஊக்குவிக்கவும், எங்களின் 110 சதவிகிதத்தை கொடுக்கவும் விரும்புகிறோம், அப்போதுதான் ஒரு நாள் நீ எங்களோடு இணைவாய்" என்று உற்சாகப்படுத்தியுள்ளது.

புதிய பிரகாசமான யோசனை

புதிய பிரகாசமான யோசனை

மேலும் "நாசா புதிய பிரகாசமான யோசனைகளை கொண்ட அடுத்தகட்ட தலைமுறை மக்களையும், விண்வெளி ஆய்வு மீதான உங்களின் காதலையும் எதிர்நோக்குகிறது" என்றும் பதில் கடிதத்தில் தெரிவித்துள்ளது. நாசாவின் பதிலைப் பெற்ற இட்ரிஸ், "நான் விண்கலங்களில் பறக்க விரும்புகிறேன்" என்று பேட்டியளித்துள்ளான்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
This 5-year-old boy's rocket design with request for astronaut license to NASA gets a warming response. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்