Home
Scitech

நீங்கள் ஒரு வானியலாளர் அல்ல: எனவே எப்படி நீங்கள் கருந்துளையை படம் எடுப்பதில் ஈடுபட்டீர்கள்?

நம் கண்ணுக்குப் புலப்படாது என்று எண்ணுகிற காரியங்களை நாம் எப்படிக் காணலாம் அல்லது அளவிடலாம் என்ற ஒரு ஆர்வம் என்ககு உண்டு.

கேத்தரின் பவ்மேன் தன்னிடத்தில் ஒரு இரகசியத்தை வைத்திருந்தார்: அது பலவற்றை ஒருங்கிணைத்து கருந்துளையின் புகைப்படத்தை உருவாக்க அவர் கண்டுபிடித்த ஒரு அல்காரிதம். இதுவரை தனது சக ஊழியர்களை தவிர வேறு யாரிடமும் இது குறித்து அவர் கூறவில்லை. அப்போதுதான் கேத்ரீன் உறுப்பினராக உள்ள ஈவின்ட் ஹாரிசன் டெலஸ்கோப் குழு, கருந்துளையின் முதல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

நீங்கள் ஒரு வானியலாளர் அல்ல:கருந்துளையை படம் எடுப்பதில் ஈடுபட்டீர்கள்?

ஹார்வர்ட்-ஸ்மித்சோனியன் சென்டர் ஃபார் ஆஸ்ட்ரோபிசிக்ஸ்-ல் முதுகலை முனைவர் ஆராய்ச்சியாளரான உள்ள 29 வயதான கேத்ரீன், எம்ஐடியில் பட்டப்படிப்பு மாணவியாக இருந்தது முதல் கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த அல்காரிதம் குறித்து பணியாற்றிவந்துள்ளார்.

வானியல் நிபுணர்கள், பொறியியலாளர்கள் மற்றும் கணிதவியலாளர்கள் ஆகியோரின் உலகளாவிய கூட்டமைப்பான, ஈவன்ட் ஹாரிசன் டெலஸ்கோப் ப்ராஜெக்ட் மூலம் சேகரிக்கப்பட்ட தரவைகளை அல்காரிதம் பயன்படுத்தி செயல்படுத்தும் மூன்று டஜன் கணினி அறிவியலாளர்களில் கேத்ரீனும் ஒருவர் ஆவார்.

54 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில்

54 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில்

54 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் மிகப்பெரிய கருந்துளையை கொண்ட பிரபஞ்சமான விசினிடி ஆப் மெஸியர் (vicinity of Messier 87 -M87)ல் இருந்து வரும்
மிக உயர்ந்த அதிர்வெண் கொண்ட ரேடியோ அலைகளை உலகெங்கிலும் உள்ள தொலைநோக்கிகள் சேகரித்தன.


ஆனால் வளிமண்டல இடையூறு மற்றும் சிதறிய அளவீடுகளின் உகந்த தன்மை, "முடிவில்லா சாத்தியமான புகைப்படங்கள்" தரவுகளை விளக்கலாம் என்கிறார் கேத்ரீன். நன்கு வடிவமைக்கப்பட்ட நெறிமுறைகள் அல்காரிதம் மூலம் குழப்பங்களுக்கு நெருக்கடி வழங்க வேண்டியிருந்தது.

கருந்துளையின் படம்

கருந்துளையின் படம்

பகிரப்பட்ட கருந்துளையின் படம், ஒரு உருகிய டோனட் அல்லது சௌரன் உடைய கண் அல்லது ரெம்ப்ராண்ட் போன்றவற்றுடன் ஒப்பிடப்பட்டதுடன், இதுபோன்ற பல்வேறு மறுகட்டமைப்புகளின் தொகுப்பாகவும் இருந்தது.


"நாங்கள் இரண்டு படங்களை மங்கலாகிவிட்டு பின்னர் அவற்றை மற்றொன்றுக்கு சராசரியாக்கி இன்று காட்டப்பட்ட படத்தைப் பெற்றோம்," என்று கேத்ரீன் கூறினார். M87 * ஐ சுற்றியுள்ள பொருட்களின் வளையம் 6.5 பில்லியன் சூரியன்களை கொண்டது."இதற்காகவே நாங்கள் நம்பமுடியாத நம்பிக்கையுடன் இருந்தோம்."

கருந்துளையின் புகைப்படத்தை வெளியிட்ட பின்னர் அவருடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல் பின்வருமாறு.

கேள்வி : நீங்கள் ஒரு வானியலாளர் அல்ல. எனவே எப்படி நீங்கள் கருந்துளையை படம் எடுப்பதில் ஈடுபட்டீர்கள்?

கேள்வி : நீங்கள் ஒரு வானியலாளர் அல்ல. எனவே எப்படி நீங்கள் கருந்துளையை படம் எடுப்பதில் ஈடுபட்டீர்கள்?

பதில் :

நான் கணினி அறிவியல் மற்றும் மின் பொறியியல் பின்னணியில் இருந்து வருகிறேன். புகைப்படங்களை புரிந்துகொள்ளும் கம்ப்யூட்டர் விஷன் பிரிவில் நான் முனைவர் பட்டம் பெற்றுள்ளேன். கருந்துளையை புகைப்படம் எடுக்கும் இந்த ப்ராஜெக்ட் பற்றி நான் கேள்விபட்டேன். அப்போது கருந்துளை என்றால் என்ன என்பது மட்டுமே தெரியும். ஆனால் ஈவென்ட் ஹாரிசான் டெலஸ்கோப் ப்ராஜெக்ட் நடத்தும் ஹார்வர்டு பல்கலைகழக வானியல் ஆய்வாளர் ஷெப் டோலேமேனின் கருந்துளை பற்றிய கலந்துரையாடலில் பங்கேற்றேன். அவர் என்ன பேசினார் என்று எனக்கு தெரியாது, ஆனால் நான் அந்த கூட்டத்தை விட்டு போகும்போது இதுதான் நான் வேலை செய்ய வேண்டிய ஒன்று என எனக்கு தெரிந்தது.


நம் கண்ணுக்குப் புலப்படாது என்று எண்ணுகிற காரியங்களை நாம் எப்படிக் காணலாம் அல்லது அளவிடலாம் என்ற ஒரு ஆர்வம் என்ககு உண்டு. அப்படித்தான் நிலையான கருவிகள் கொண்டு அளவிட முடியாத விஷயங்களை அளவிடும் வகையிலான கருவி மற்றும் வழிமுறைகளை ஒன்றாக்க சிறப்பு வழிமுறைகளை கண்டறிந்தோம்.

கேள்வி : இந்த படத்தில் அல்காரிதத்தின் பங்கு என்ன? உலகெங்கும் உள்ள தொலைநோக்கிகளிலிருந்து வரும் தரவுகளை ஒன்றாக இணைப்பதா?

கேள்வி : இந்த படத்தில் அல்காரிதத்தின் பங்கு என்ன? உலகெங்கும் உள்ள தொலைநோக்கிகளிலிருந்து வரும் தரவுகளை ஒன்றாக இணைப்பதா?

பதில்:
எங்களுக்கு உலகம் முழுவதும் தொலைநோக்கிகள் பரந்துவிரிந்துள்ளன. தொலைநோக்கி வரிசையில் உள்ள ஒவ்வொரு இரண்டு தொலைநோக்கிகளுக்கும், நாங்கள் ஒரு தனித்த அதிர்வெணை அளவை அளவிடுகிறோம். எவ்வளவு விரைவாக விசயங்கள் மாறுகின்றன என்பதைப் பற்றி அது சொல்கிறது.


இதில் பகுதியான தகவலை மட்டுமே பெற்றோம். இது ஒரு படத்தில் ஒரு பிக்சலைப் பார்ப்பது போல தோன்றுகிறது (ஆனால் இது வேறு வகையான பிரிவு). உண்மையில் சிதறிய, இரைச்சலான தரவுகளை எடுத்து, அந்த அளவீடுகள் ஏற்படும் படத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்யும் வழிமுறைகள் நாங்கள் கண்டறிந்தோம். இந்த தரவுகளை நான்கு வெவ்வேறு முன்பின் தெரியாத குழுக்களில் உள்ள கம்ப்யூட்டர் இமேஜிங் வல்லுநர்கள் மூலம், வெவ்வேறு அல்காரிதங்களை உருவாக்கி பணியாற்றினர்.

More from GizBot

Best Mobiles in India

English summary
This 29-Year-Old Computer Scientist Helped Bring Us The First Image of a Black Hole: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X