Home
Scitech

யூடியூப் பார்த்து 3D செயற்கை உறுப்புகளை தயாரித்த 24 வயது பொறியாளர்.! குவியும் பாரட்டுகள்.!

3D அச்சிடும் பற்றி அதிக ஆர்வம் கொண்ட கில்லர்மோ மார்டினெஸ்(24), தனது கலைத் திறனால் ஆதரவற்ற மனிதர்களுக்குச் செயற்கை 3D உறுப்புகளைத் தயாரித்து இலவசமாக வழங்கி வருகிறார்.

3D அச்சிடும் பற்றி அதிக ஆர்வம் கொண்ட கில்லர்மோ மார்டினெஸ்(24), தனது கலைத் திறனால் ஆதரவற்ற மனிதர்களுக்குச் செயற்கை 3D உறுப்புகளைத் தயாரித்து இலவசமாக வழங்கி வருகிறார்.

யூடியூப் வீடியோக்கள் மூலம் ரோபோடிக்ஸ் & 3D பிரிண்ட்டிங்

யூடியூப் வீடியோக்கள் மூலம் ரோபோடிக்ஸ் & 3D பிரிண்ட்டிங்

கில்லர்மோ மார்டினெஸ், கடந்த 2017 ஆம் ஆண்டில் சொந்தமாக 3D பிரிண்டரை வாங்கி இருக்கிறார். யூடியூப் வீடியோக்கள் மூலம் ரோபோடிக்ஸ் மற்றும் 3D பிரிண்ட்டிங் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு, ஏழை மக்களுக்காகப் பிரத்தியேக செயற்கை உறுப்பு மாதிரிகளை உருவாக்கியுள்ளார்.

3Dயில் அச்சிடப்பட்ட பயனுள்ள செயற்கை கைகள்

3Dயில் அச்சிடப்பட்ட பயனுள்ள செயற்கை கைகள்

இவரின் இந்த முயற்சிக்கான முதல் துவக்கம், யூடியூப் இல் தான் கண்ட 3D அச்சிடப்பட்ட செயற்கை கை மாதிரி தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பொழுதுபோக்கிற்காகத் தான் பார்க்கத் துவங்கி வீடியோகள், நாளடைவில் 3Dயில் அச்சிடப்பட்ட பயனுள்ள செயற்கை கைகளாக மாறிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆதரவற்ற மக்களுக்கு இலவச செயற்கை கை

ஆதரவற்ற மக்களுக்கு இலவச செயற்கை கை

கென்யாவிற்குப் பயணம் செய்த கில்லர்மோ மார்டினெஸ், அங்குள்ள மக்களைப் பார்த்தபின் அவரின் தயாரிப்புகள், இங்குள்ள ஆதரவற்ற மக்களுக்கு தான் அதிகம் தேவை என்பதை உணர்ந்துள்ளார். கென்யாவில் உள்ள பண்பா என்ற என்.ஜி.ஓ உதவியுடன் முதல் செயற்கை கைகளை மார்டினெஸ் அங்குள்ள நபருக்கு வழங்கியுள்ளார்.

இலவசமாக வழங்குவதில் சிக்கல்

இலவசமாக வழங்குவதில் சிக்கல்

கென்யாவில் செயற்கை கைகள் செய்வது எளிதான காரியம் இல்லை. 3D அச்சிடும் பொருட்கள் கென்யாவில் கிடைக்காத ஒன்று மற்றும் மின் தடை அனைத்து நேரம் உள்ளதினால் அங்குள்ள மக்களுக்குச் செயற்கை கைகள் தறிப்பதில் சிக்கல் உண்டாகியுள்ளது. 3D அச்சிடும் பொருட்களின் விலையும் அதிகம் என்பதனால் அனைவருக்கும் இலவசமாக வழங்குவதில் சிக்கல் உண்டாகியுள்ளது.

10 கிலோ எடையை தூக்கும் பிளாஸ்டிக் செயற்கை கை

10 கிலோ எடையை தூக்கும் பிளாஸ்டிக் செயற்கை கை

இதனைச் சரி செய்ய கில்லர்மோ மார்டினெஸ், வேறு வழியைக் கையாண்டு பிளாஸ்டிக், ரப்பர் பேண்டு மற்றும் டுவைன் நூல்களை வைத்து செயற்கை கைகளை உருவாக்கியுள்ளார். இந்த கைகள் சுமார் 10 கிலோ எடை வரை தூக்கும் வல்லமை கொண்டது மற்றும் இதன் தயாரிப்பு செலவு வெறும் 50 டாலர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 சிறுவர் மற்றும் இளைஞர்களுக்கு இலவசமாக 3D பிரிண்ட்டிங் பயிற்சி

சிறுவர் மற்றும் இளைஞர்களுக்கு இலவசமாக 3D பிரிண்ட்டிங் பயிற்சி

கென்யாவில் உள்ள மக்களுக்குச் செயற்கை கைகளை இலவசமாக வழங்கி வரும் இவர், அங்குள்ள சிறுவர் மற்றும் இளைஞர்களுக்கு இலவசமாக 3D பிரிண்ட்டிங் முறைகளைக் கற்பித்தும் வருகிறார். இவருக்கு வேர்ல்ட் யூத் ஃபோரம் விருதும் இந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
this 24 year old engineer builds free 3d printed prosthetics for orphans and poor in kenya : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X