Home
Scitech

மூன்றாம் ஆர்பிட் ரைசிங் சக்ஸஸ்! நிலவில் எப்போ தரை இறங்க போகிறோம் தெரியுமா?

இரண்டாம் ஆர்பிட் ரைசிங் வெற்றிகரமாக நிறைவடைந்து, சந்திரயான் 2 தற்போது மூன்றாம் ஆர்பிட் ரைசிங்கிற்கு உயர்ந்துள்ளது. அடுத்தகட்ட ஆர்பிட் ரைசிங் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி நடைபெறும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

மூன்றாவது ஆர்பிட் ரைசிங்

மூன்றாவது ஆர்பிட் ரைசிங்

சந்திரயான் 2 விண்கலம், பூமியைச் சுற்றி ஐந்து ஆர்பிட் ரைசிங் செய்யுமென்று இஸ்ரோ தெரிவித்திருந்தது. அதேபோல் இதுவரை இரண்டு ஆர்பிட் ரைசிங் நிறைவடைந்து, மூன்றாவது ஆர்பிட் ரைசிங்கை சந்திரயான் 2, திங்கள்கிழமை பிற்பகல் வெற்றிகரமாகத் திட்டமிட்டபடி துவங்கியுள்ளது என்று இஸ்ரோ தனது ட்வீட்டில் உறுதிப்படுத்தியுள்ளது.

இறுதி சுற்றுப்பாதை

இறுதி சுற்றுப்பாதை

இஸ்ரோவின் கூற்றுப்படி, இரண்டாவது சுற்றுப்பாதை உயர்வு முடிந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, சந்திரயான் 2 விண்கலம் 251 x 54,829 கிமீ சுற்றுப்பாதையிலிருந்தது. இரண்டாவது சுற்றுப்பாதை ஆர்பிட் ரைசிங் உயர்த்திய பின்னர் சந்திரயான் 2 விண்கலத்தால் அடையப்பட்ட இறுதி சுற்றுப்பாதை 276 X 71,792 கி.மீ. என்று இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது.

நான்காவது ஆர்பிட் ரைசிங் நிகழும் தேதி

நான்காவது ஆர்பிட் ரைசிங் நிகழும் தேதி

சந்திரயான் 2 விண்கலத்தின் செயல்பாடுகள் அனைத்தும் இயல்பாகவும், சரியாகவும் இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அடுத்தகட்ட ஆர்பிட் ரைசிங், அதாவது நான்காவது ஆர்பிட் ரைசிங் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி, அதிகாலை 2 அல்லது 3 மணி அளவில் நடைபெறும் என்று இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

நிலவில் தரை இறங்கப்போகும் லேண்டர்

நிலவில் தரை இறங்கப்போகும் லேண்டர்

ஐந்து ஆர்பிட் ரைசிங்கை முடித்துவிட்டு நிலவு நோக்கி சந்திரயான் 2 செல்லும், அங்கு நிலவின் சுற்றுப்பாதையில் விக்ரம் லேண்டரை தனியாகப் பிரித்து அதன் சுற்றுப்பாதையில் நிறுத்தும். அதற்குப் பின் இஸ்ரோ திட்டமிட்டுள்ளபடி, விக்ரம் லேண்டர் செப்டம்பர் 7 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவில் 'பிரக்யன்' ரோவர்

நிலவில் 'பிரக்யன்' ரோவர்

செப்டம்பர் 7 ஆம் தேதி நிலவில் விக்ரம் லேண்டர் தரை இறங்கிய பின், நான்கு மணி நேரம் கழித்து 'பிரக்யன்' ரோவர் அதன் முதல் அடியை நிலவின் மேல் பரப்பில் வைக்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. முதல் சில கட்ட ரோல்களை பிரக்யன் ரோவர் நிலவின் மேல் பரப்பில், செப்டம்பர் 7 ஆம் தேதி நிகழ்த்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்தாம் மற்றும் இறுதிக்கட்ட ஆர்பிட் ரைசிங்

ஐந்தாம் மற்றும் இறுதிக்கட்ட ஆர்பிட் ரைசிங்

அதேபோல் சந்திராயன் 2 விண்கலத்தின், ஐந்தாம் மற்றும் இறுதிக்கட்ட ஆர்பிட் ரைசிங், இஸ்ரோ திட்டமிட்டபடி ஆகஸ்ட் 14 ஆம் தேதி நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.978 கோடி செலவில் உருவாகியுள்ள இந்தியாவின் இரண்டாம் நிலவு திட்டம் மற்றும் சந்திரயான் 2 பற்றிய தகவல்களுக்கு கிஸ்பாட் உடன் இணைந்திருங்கள்.

Best Mobiles in India

English summary
Third orbit-raising of Chandrayaan 2 completed successfully : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X