கலிபோர்னியாவில் தோன்றிய மர்மமான மூன்றாவது மோனோலித் உருவம்.! ஏலியன் செயலா? அல்லது ரசிகர்களின் செயலா?

|

உட்டா மற்றும் ருமேனியாவில் இதற்கு முன்பு தோன்றிய மர்மமான மோனோலித் கட்டமைப்புகள் மறைந்த பிறகு தற்பொழுது மூன்றாவது மோனோலித் கலிபோர்னியாவில் தோன்றியுள்ளது. 2020 இனிமேல் வீரியமடைய முடியாது என்று அனைவரும் நினைக்கத் துவங்கும் போது, மோனோலித்தின் தோற்றம் தொடங்கியது. சில நாட்களுக்கு முன்பு, உட்டாவிலும், பின்னர் ருமேனியாவிலும் மோனோலித்கள் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மோனோலித் என்றால் என்ன தெரியுமா?

மோனோலித் என்றால் என்ன தெரியுமா?

மோனோலித் என்பது ஒற்றைக்கல் என்று அர்த்தம். இந்த மோனோலித் உருவங்கள் எப்படி வந்தது? எங்கிருந்து வந்தது என்பது யாருக்கும் இன்னும் தெரியவில்லை. இந்நிலையில், இப்போது மீண்டும் ஒரு புதிய மோனோலித் உருவம் கலிபோர்னியாவில் உள்ள பைன் மவுண்டைனில் காணப்பட்டுள்ளது. இந்த புதிய மோனோலித் தோற்றம், அளவு மற்றும் கட்டமைப்பில் முந்தைய இரண்டு மோனோலித்துடன் அப்படியே ஒத்து போகிறது.

சில நூறு பவுண்டு எடை கொண்ட மோனோலித் எப்படி மலை உச்சிக்கு வந்தது?

சில நூறு பவுண்டு எடை கொண்ட மோனோலித் எப்படி மலை உச்சிக்கு வந்தது?

இருப்பினும், மற்ற இரண்டு மோனோலித் போலல்லாமல், இந்த மோனோலித் தரையில் சரியாக பொருத்தப்படவில்லை, யாராவது அதைத் தள்ளினால் கட்டமைப்பு அப்படியே தரையில் வீழ்ச்சியடையும் என்று கூறப்பட்டுள்ளது. மோனோலித்தின் மதிப்பிடப்பட்ட எடை சில நூறு பவுண்டுகள் ஆகும். இது மூன்று பக்க கட்டமைப்பாகும். இது பிரதிபலிப்பு இரும்பினால் தயாரிக்கப்பட்டுள்ளது. உட்டா மற்றும் ருமேனியா மோனோலித் போன்று மென்மையானது.

Whatsapp அதிரடி அறிவிப்பு: புதிய விதிகளை 2021ல் கட்டாயம் ஏற்க வேண்டும் அல்லது அக்கௌன்ட் டெலீட் செய்யலாம்..Whatsapp அதிரடி அறிவிப்பு: புதிய விதிகளை 2021ல் கட்டாயம் ஏற்க வேண்டும் அல்லது அக்கௌன்ட் டெலீட் செய்யலாம்..

மூன்றாவது மோனோலித்

மூன்றாவது மோனோலித்

மற்ற இரண்டு மோனோலித் போலவே, இதுவும் யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. ஆனால், செவ்வாயன்று மோனோலித் இந்த வழியில் இல்லை என்று ஹைக்கர் ரே ஜான்சன் கூறியுள்ளார். மலையின் உச்சியில் நிற்கும் மாபெரும் அமைப்பை ஹைக்கர் படம்பிடித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பின்னரே அனைவருக்கும் மூன்றாவது மோனோலித் பற்றித் தெரியவந்துள்ளது என்று கூறப்படுகிறது.

மர்மமான முறையில் காணாமல் போகும் மோனோலித்துகள்

மர்மமான முறையில் காணாமல் போகும் மோனோலித்துகள்

உட்டாவில் ஒரு பாலைவனத்தில் முதல் மோனோலித் தோன்றியது. சில நாட்களுக்குப் பிறகு, ருமேனியாவில் இதே போன்ற ஒரு அமைப்புடன் இரண்டாவது மோனோலித் தோன்றியது. இது பியாட்ரா நியாம் நகரில் உள்ள பட்கா டோம்னி மலையில் காணப்பட்டது. சுவாரஸ்யம் என்னவென்றால், இந்த இரண்டு மோனோலித்களும் பின்னர் மர்மமான முறையில் அகற்றப்பட்டன. இந்த கட்டமைப்பை அகற்றியது யார் என்று தெரியவில்லை.

ஒரே நேரத்தில் வீட்டுக்கு வந்த 40 டெலிவரி பாய்ஸ்: 7 வயது சிறுமியின் ஒரு தவறு!ஒரே நேரத்தில் வீட்டுக்கு வந்த 40 டெலிவரி பாய்ஸ்: 7 வயது சிறுமியின் ஒரு தவறு!

2001: A Space Odyssey என்ற திரைப்படத்தில் வரும் மோனோலித்

2001: A Space Odyssey என்ற திரைப்படத்தில் வரும் மோனோலித்

இருப்பினும், இந்த மோனோலித்கள் 2001: A Space Odyssey என்ற திரைப்படம் மற்றும் புத்தகத்தின் ரசிகர்களை நினைவூட்டுகின்றது. புத்தகத்திலும் படத்திலும் இதேபோன்ற கட்டமைப்பை நம்மால் பார்க்கமுடியும். இந்த திரைப்படத்தை பார்த்தவர்களுக்கு இந்த மோனோலித் பற்றி தெரிந்திருக்கும்.

ஏலியனின் வேலையா? அல்லது ரசிகர்களின் வேலையா?

ஏலியனின் வேலையா? அல்லது ரசிகர்களின் வேலையா?

திடீரென்று எந்த விளக்கமும் இல்லாமல் தோன்றிய இந்த மோனோலித்களின் பின்னணியில் மக்களை ஏமாற்ற முயற்சிக்கும் சில ரசிகர்களின் வேலையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இருப்பினும், சதி கோட்பாட்டாளர்கள் இது ஒரு ஏலியனின் வேலை என்று நம்புகின்றனர்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Third Monolith Spotted At Pine Mountain In Atascadero, California : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X