அப்பேலோ திட்டம் : யாரும் அறிந்திராத தகவல்கள்.!!

By Meganathan
|

'இன்னும் பத்தாண்டுகளில் மனிதர்களைப் பூமியில் இருந்து நிலவிற்கு அழைத்துச் சென்று மீண்டும் அவர்களைப் பூமிக்குக் கொண்டு வர வேண்டும். இந்தத் திட்டம் வெற்றி பெற அமெரிக்கா முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்' என அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடி 1961 ஆம் ஆண்டு மே 25 ஆம் தேதி தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நாசாவின் நீல் ஆம்ஸ்ட்ராங், புஸ் ஆல்ட்ரின் ஆகியோர் 1969 ஆம் ஆண்டு நிலவில் தரையிறங்கினர். பின் இவர்களைத் தொடர்ந்து பத்து விண்வெளி வீரர்கள் நிலவு பயணம் மேற்கொண்டனர். அதன் படி அப்போலோ திட்டம் 1972 ஆம் ஆண்டு நிறைவடைந்தது. மொத்தம் 24 பேர் நிலவு பயணத்தை மேற்கொண்டனர்.

அந்த வகையில் நாசாவின் அப்போலோ திட்டம் குறித்து யாரும் அறிந்திராத சில வியப்பூட்டும் தகவல்களைத் தான் இங்குத் தொகுத்திருக்கின்றோம்..

ஊழியர்கள்

ஊழியர்கள்

அமெரிக்க வரலாற்றில் அதிக ஊழியர்கள் கொண்ட திட்டமாக நாசாவின் அப்போலோ திட்டம் அமைந்தது. மொத்தம் 34,000 நாசா ஊழியர்களும், சுமார் 3,75,000 பணியாளர்கள் ஒப்பந்த முறையிலும் அப்போலோ நிலவு திட்டத்தில் பணியாற்றினர்.

இணைந்த திட்டம்

இணைந்த திட்டம்

அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன் இடையே நடைபெற்ற விண்வெளி போட்டியின் போது 1963 ஆம் ஆண்டு அதிபர் கென்னடி நிலவு திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்யப் பணி போரில் ஈடுபட்டிருக்கும் இரண்டு படைகள் இணைந்து பணியாற்றலாம் என ஐநா சபையில் தெரிவித்திருந்தார். இவரின் இந்த அறிவிப்பு பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

சோகம்

சோகம்

ஜனவரி 27, 1967 ஆம் ஆண்டுக் கஸ் கிரிஸ்ஸம், எட் வைட் மற்றும் ரோஜர் சஃப்பீ உள்ளிட்டோர் அப்போலோ 1 விண்கலத்தில் அமர்ந்தனர். சில நிமிடங்களில் தவறான வையரிங் காரணமாகச் சிறிய வெடிப்புச் சத்தம் கேட்டு உடனே தீ பிடித்தது, பின் விண்வெளி வீரர்கள் அமர்ந்த அறை திறக்கப்பட்டது. எனினும் விண்வெளி வீரர்களின் உயிரற்ற உடல் மட்டுமே உள் இருந்தது. இதன் காரணமாக அப்போலோ திட்டம் 18 மாதங்கள் பூமியிலேயே தடைப்பட்டது. இருந்தும் வடிவமைப்பில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.

விருது

விருது

அக்டோபர் 1968 ஆம் ஆண்டு மனிதன் பயணம் செய்த அப்போலோவின் முதல் திட்டமான அப்போலோ 7 பூமியின் சுற்றுப்பாதையில் நுழைந்தது. பயணத்தின் 11வது நாள் வேல்லி ஸ்கிரா, டான் எய்செல் மற்றும் வால்டர் கன்னிங்ஹாம் உள்ளிட்டோர் விண்கலத்தின் உள் இருந்து முதல் தொலைக்காட்சி நேரலையில் தோன்றினர். மூன்று விண்வெளி வீரர்களும் பூமிக்கு திரும்பியதும் அவர்களுக்கு எம்மி விருது வழங்கப்பட்டது.

நீல் ஆஸ்ட்ராங்

நீல் ஆஸ்ட்ராங்

அப்போலோ 11 விண்கலத்தின் கட்டளையிடும் அதிகாரியாக நான் தேர்வு செய்யப்பட்டேன். அதிர்ஷ்டவசமாக இந்த விண்கலம் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. காலமும் நேரமும் தான் என்னை இந்த இடத்திற்குக் கொண்டு சேர்த்திருக்கின்றது என நீல் ஆம்ஸ்ட்ராங் தெரிவித்தார்.

உடை

உடை

நிலவில் கால்பதிக்கும் போது நீல் ஆம்ஸ்ட்ராங் அணிந்திருந்த விண்வெளி உடை, பெண்களின் உள்ளாடைகளைத் தயாரிப்பதில் புகழ் பெற்ற பிளேடெக்ஸ் எனும் நிறுவனம் தயாரித்ததாகும். இதற்கான ஒப்பந்தத்தைப் பிளேடெக்ஸ் நிறுவனம் 1962 ஆம் ஆண்டு பெற்றது.

மின்னல்

மின்னல்

அப்போலோ 12 திட்டம் நவம்பர் 14, 1969 ஆம் ஆண்டு துவங்கியது. ஏவுதளத்தில் இருந்து விண்கலம் புறப்பட்ட சில நொடிகளில் மின்னல் தாக்கியதன் விளைவாகச் சில கோளாறுகள் ஏற்பட்டன. இதனால் நாசா திட்டத்தைக் கைவிட நினைத்தது, இருந்தும் விண்கலத்தில் இருந்த வீரர் எடுத்த திடீர் முடிவின் மூலம் அப்போலோ 12 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது.

ஆய்வு

ஆய்வு

அப்போலோ 14 திட்டத்தின் மூலம் விண்வெளி வீரர் எட்கர் மிட்செல் ரகசிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டார். இந்த ஆய்வு எக்ஸ்ட்ரா சென்சரி பெர்செப்ஷன் அதாவது புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட உணர்வு சார்ந்தது ஆகும். விண்வெளியில் இருந்து திரும்பியதும் இலாப நோக்கமற்ற நிறுவனம் ஒன்றைத் துவங்கி மேலும் ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளார்.

தனிமை

தனிமை

நிலவு குறித்து அதிகம் தெரியாத நாசா, அங்கு மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் கிருமிகள் ஏதும் இருக்கும் என்ற நோக்கத்தில் அப்போலோ 11, 12 மற்றும் 14 திட்டத்தில் பயணித்துத் திரும்பிய வீரர்களைத் தனிமைப்படுத்தி அவர்களைப் பலகட்ட சோதனைகளில் ஈடுபடுத்தியது. பின் 1971 ஆம் ஆண்டு நிலவில் ஆபத்தை விளைவிக்கும் நோய் ஏதும் இல்லை என்பதை உறுதி செய்து வீரர்களைத் தனிமைப்படுத்துவதை நிறுத்தி கொண்டது.

நிறைவு

நிறைவு

1972 ஆம் ஆண்டு அப்போலோ 17 திட்டம் நிறைவடைந்ததைக் குறிக்க அலுமினியம் மூலம் வடிவமைக்கப்பட்ட சிற்பம் ஒன்றை அங்கு வைத்தனர். இதோடு விண்வெளி வீரர் சார்லி டியூக் குடும்பப் புகைப்படம் மற்றும் அகற்றப்பட்ட விண்கல பாகங்களும் நிலவில் வைக்கப்பட்டுள்ளன.

Best Mobiles in India

English summary
Things You May Not Know About Apollo Program Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X