டெஸ்லா காரை ஹேக் செய்து 2.6 கோடி வென்ற ஜோடி! உடன் பரிசாக டெஸ்லா காரும்...
பிரபலமான மின்னணு பொருட்கள், கேஜெட்டுகள் மற்றும் சேவைகளில் உள்ள பாதிப்புகள்/குறைபாடுகளை வெளிப்படுத்துவதற்கு எலைட் ஒயிட் ஹேக்கர்களால் Pwn2own என்ற உலகளாவிய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
நீங்கள் திருடனை போல ஒரு காரின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்ததற்காக, அந்த காரையே பரிசாக பெறுவதை கற்பனை செய்து பாருங்கள்!

உண்மையிலேயே ஒரு ஹேக்கர் ஜோடிக்கு இது தான் நடந்தது. அவர்கள் ஏதோ ஒரு காரை வெற்றிகரமாக ஹேக் செய்து அதை தங்களுக்கு சொந்தமாக்கி கொள்ளவில்லை. அது ஒரு டெஸ்லா!

பொருட்கள், கேஜெட்டுகள்
பிரபலமான மின்னணு பொருட்கள், கேஜெட்டுகள் மற்றும் சேவைகளில் உள்ள பாதிப்புகள்/குறைபாடுகளை வெளிப்படுத்துவதற்கு எலைட் ஒயிட் ஹேக்கர்களால் Pwn2own என்ற உலகளாவிய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
மிகப்பெரிய பரிசுடன் சிறப்பிக்கப்பட்டனர்
இந்த ஆண்டு நிகழ்வில், 2நபர்களை கொண்ட ஃப்ளூரோஅசிடேட் என்ற பெயர் கொண்ட குழு, டெஸ்லா மாடல் 3 காரை அதன் வெப் ப்ரவுசர் மூலம் ஹேக் செய்து உள்நுழைந்ததுடன்,அதற்காக மிகப்பெரிய பரிசுடன் சிறப்பிக்கப்பட்டனர்.

அமாட் காமா மற்றும் ரிச்சர்ட் ஷு
அமாட் காமா மற்றும் ரிச்சர்ட் ஷு என்ற இரு ப்ளோரோஅசிடேட் குழு உறுப்பினர்கள், டெஸ்லா மாடல் 3 காரை இணையத்தில்-இயங்கக்கூடிய அதன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் மூலம் தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்தனர்.

வெறும் நான்கு நிமிடங்களில்..
டெஸ்லா மாடல் 3 காரை ஹேக் செய்தது மட்டுமின்றி, இந்த ஹேக்கர் ஜோடி ஃசபாரி ப்ரவுசரை வெறும் நான்கு நிமிடங்களில் வெற்றிகரமாக ஹேக் செய்தனர்.மொத்த பரிசுத் தொகையாக ரூபாய் 3.8 கோடியில் இவர்கள் இருவரும் 2.6 கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுகளை தட்டிச்சென்றுள்ளனர்.

ஹேக்கிங்
யார் கூறினார்கள் ஹேக்கிங்-ல் பணம் சம்பாதிக்கமுடியாது என்று? ஒயிட் ஹேக்கர்கள் தாராளமாக வேட்டையாடலாம்!


Click it and Unblock the Notifications