செவ்வாய் கிரகத்தில் மனிதர்களின் எதிர்காலம் எப்படியிருக்கும்? ஆச்சர்யமூட்டும் குடியிருப்பு வடிவமைப்புகள்!

போட்டியில் பங்கு பெற்ற வடிவமைப்புகளில் பரிசுக்கு உரிய வடிவமைப்புகளைத் தேர்ந்து எடுப்பதற்கு பல விதிமுறைகள் வகுக்ககப்பட்டன.

|

கணிப்பொறி தொடர்பான வன்பொருள் மற்றும் மென் பொருள் தயாரிப்புத் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹெச்.பி. நிறுவனம் (ஹெவ்லட் பக்கார்டு – HP) சமீபத்தில், விண்வெளி ஆர்வலர்களுக்காக ஒரு போட்டியை நடத்தியது. செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ நேரிட்டால் அவர்களுக்கான குடியிருப்பு மற்றும் பிற வசதிகள் எவ்வாறு அமையும் என்பதைக் கற்பனையாக வடிவமைத்துக் காட்சிப்படுத்துவதுதான் இந்தப் போட்டியின் நோக்கம்.

செவ்வாய் கிரகத்தில் மனிதர்களின்  எதிர்காலம் எப்படியிருக்கும்?

“ஹெச்.பி. செவ்வாய் கிரகக் குடியிருப்பு வடிவமைப்புச் சவால் (HP Mars Home Planet Rendering Challenge)” எனப் பெயரிடப்பட்ட இந்தப் போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து 87,000 போட்டியாளர்கள் பங்கேற்றனர். போட்டியில் பங்கேற்றவர்கள் வடிவமைத்த குடியிருப்பு மற்றும் பிற வசதிகள் தொடர்பான கற்பனைப் படங்கள் பார்ப்பவா்களை ஆச்சர்யப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. கடந்த மே மாதத்தில் இந்தப் போட்டிக்கான அறிவிப்பை ஹெச்.பி. நிறுவனம் வெளியிட்டது. அப்போதிருந்தே போட்டியாளர்கள், செவ்வாய் கிரகத்தில் மக்கள் குடியேறினால் என்ன வகையான வசதிகள் தேவைப்படும் என்பதைப் பற்றிச் சிந்தித்து தங்களுடைய கற்பனைகளுக்கு வடிவம் கொடுக்கத் தொடங்கி விட்டனர். இப்போட்டிக்கான முடிவுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி வெளியிடப்பட்டன.

 பத்து லட்சம் பேர்

பத்து லட்சம் பேர்

பல சிறப்பு அம்சங்களுடன் கூடிய அழகான தோற்றத்துடன் செவ்வாய் கிரகக் குடியிருப்புகளை வடிவமைத்தால் மட்டும் போதாது. பத்து லட்சம் பேர் வசிக்கக் கூடிய வகையில் அந்தக் குடியிருப்புப் பகுதியின் மாதிரி வடிவமைப்பு அமைய வேண்டும். தாங்கள் வடிவமைக்கும் பகுதியில் பத்து இலட்சம் பேர் எவ்வாறு வசிக்க முடியும் என்பதையும் விளக்க வேண்டும். செவ்வாய் கிரகத்தில் உள்ள கடினமான மேற் பரப்பு, அடர்த்தி குறைந்த வளி மண்டலம், அதிகமான கதிர் வீச்சு, அடிக்கடி நிகழும் புழுதிப் புயல் ஆகிய சூழ்நிலைகளைத் தாங்கி மனிதர்கள் வாழக் கூடிய வகையில் குடியிருப்புப் பகுதிகளின் மாதிரிகள் அமைய வேண்டும். என்பன போன்ற பல நிபந்தனைகள் இந்த வடிவமைப்புச் சவாலுக்கு விதிக்கப்பட்டன.

செவ்வாய் கிரக இயற்பியல் தன்மை

செவ்வாய் கிரக இயற்பியல் தன்மை

போட்டியில் பங்கு பெற்ற வடிவமைப்புகளில் பரிசுக்கு உரிய வடிவமைப்புகளைத் தேர்ந்து எடுப்பதற்கு பல விதிமுறைகள் வகுக்ககப்பட்டன. வேறு எங்கிருந்தும் காப்பி அடிக்காத ஒரிஜினாலிடி இருக்க வேண்டும். படைப்பாக்கத் திறனோடு தரமான வடிவமைப்பாக இருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக செவ்வாய் கிரக இயற்பியல் தன்மைக்கு (Mars physics) ஏற்ற வகையில் வடிவமைப்பு இருக்க வேண்டும். அதாவது போட்டியாளர்களின் குடியிருப்பு வடிவமைப்பு, செவ்வாய் கிரக நிலப் பரப்பின் தன்மைகளுக்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும். செவ்வாய் கிரக வளிமண்டலம், ஈா்ப்பு விசை, மண்ணின் தன்மை, கதிர்வீச்சு நிலை, குடி தண்ணீர், காற்று ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ற வகையில் குடியிருப்புப் பகுதியின் வடிவமைப்பு அமைந்திருக்க வேண்டும் என போட்டிக்கான அறிவிப்பில் ஹெச்.பி. நிறுவனம் குறிப்பிட்டு இருந்தது.

முப்பரிமாண மாதிரி

முப்பரிமாண மாதிரி

"ஹெச்.பி. செவ்வாய் கிரக குடியிருப்பு வடிவமைப்புச் சவால் (HP Mars Home Planet Rendering Challenge)" மூன்று வகையான போட்டிகளை உள்ளடக்கியது. கருத்துரு, முப்பரிமாண மாதிரி (3D Modeling), மாதிரி வடிவமைப்பு ஆகிய மூன்று பகுதிகளை இந்தச் சவால் உள்ளடக்கியுள்ளது. மூன்று பகுதிகளை உள்ளடக்கிய இந்தச் சவால் ஐந்து பிரிவுகளில் நடத்தப்பட்டது. பங்கேற்பாளர்கள் ஐந்து வகையான பிரிவுகளில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதில் தங்கள் வடிவமைப்பை அனுப்பி வைக்கலாம்.

மெய்நிகர்

மெய்நிகர்

கட்டட வடிவமைப்புப் பெறியியல் அல்லது வாகனம் மற்றும் இயந்திரவியல் பொறியியல் சார்ந்து அந்த ஐந்து பிரிவுகள் அமைந்திருந்தன. அசையா வடிவமைப்பு ( கிராபிக்ஸ் செயல்முறையுடன் கூடிய வடிவமைப்பு), அசையா வடிவமைப்பு (மையச் செயல்பாட்டு முறை வடிவமைப்பு), அனிமேசன் வடிவமைப்பு ( கிராபிக்ஸ் செயல்முறையுடன் கூடிய வடிவமைப்பு), அனிமேசன் வடிவமைப்பு (மையச் செயல்பாட்டு முறை வடிவமைப்பு), மெய்நிகர் செயலாக்க வடிவமைப்பு ஆகிய ஐந்து பிரிவுகளில் போட்டியாளர்கள் தங்களுக்கு ஏற்ற ஒரு பிரிவைத் தேர்ந்து எடுத்துப் போட்டியில் பங்கு கொள்ளலாம்.

 செவ்வாய் கிரகக் குடியிருப்பு

செவ்வாய் கிரகக் குடியிருப்பு

இத்தகைய விதிமுறைகளுடன் சவாலில் பங்கேற்ற போட்டியாளர்களின் வடிவமைப்புகளுள் பரிசுக்கு உரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட செவ்வாய் கிரகக் குடியிருப்பு மற்றும் பிற வசதி சார்ந்த வடிவங்களை இங்குக் காண்போம்.

Best Mobiles in India

English summary
These Stunning Designs Show What Our Future on Mars Might Look Like: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X