600 அடி பள்ளத்தில் உள்ள ஆபத்தை கண்டறியும் நவீன ரோபோக்கள்.!

|

நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நிமிடத்திலும் ரோபோக்கள் ரோபோக்கள் நமக்கு பெரும் பயன்களை கொடுத்து வருகின்றன.

நாம் வளர்க்கும் செடிகொடிகள், புல்வெளிகளை கவனிப்பது, ஜன்னல்களை சுத்தம் செய்வது, மற்றும் விண்வெளி வீரர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது என பலவிதமான சிறிய வகை ரோபோபோக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறிய வகை ரோபோக்கள் மூலம் ஆபத்தாக இருக்கும் உயிர்களைக் காப்பாற்ற முடியும்.

ஸ்க்விஷ் ரோபோக்கள்

ஸ்க்விஷ் ரோபோக்கள்

ஸ்க்விஷ் ரோபோக்கள் என்று சொல்லப்படும் நவீன ரக ரோபோக்கள் சுமார் இரண்டு அடி அகலம் மட்டுமே கொண்டவை. இதில் வீடியோ கேமராக்கள் மற்றும் எலக்ட்ரானிக் சென்சார்கள், கேபிள்கள் ஆகியவை பொருத்தப்பட்டிருக்கும். உயரமான இடங்களில் இருந்து தரையில் விழுவது உள்பட எந்தவொரு ரிஸ்க்கான பணிகளையும் இந்த ரோபோக்கள் செய்யும்.

பேரழிவில் சிக்கியுள்ளவர்களை எளிதில் காப்பாற்றலாம்

பேரழிவில் சிக்கியுள்ளவர்களை எளிதில் காப்பாற்றலாம்

குறிப்பாக பூகம்பங்கள், அபாயகரமான இரசாயனங்கள் கசிவு, காட்டுத்தீ போன்ற பேரழிவுகள் ஏற்படும்போது பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இந்த ரோபோக்கள் சென்று மேலே பறந்து கொண்டே பேரழிவான இடத்தில் இருக்கும் நிலையை நமக்கு தெரிவிக்கும். இந்த தகவல்கள் மூலம் பேரழிவில் சிக்கியுள்ளவர்களை எளிதில் காப்பாற்றலாம்.

ஜீலை 30: அட்டகாசமான சியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!ஜீலை 30: அட்டகாசமான சியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

 2017ஆம் ஆண்டு நிறுவினார்.

2017ஆம் ஆண்டு நிறுவினார்.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அலைஸ் அகோஜினோ என்பவர் இந்த நவீன வகை ரோபோக்கள் குறித்து கூறியபோது, இந்த வகை ரோபோக்கள் மூலம் ஆபத்தாக இருக்கும் உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்று உறுதியாக கூறுகின்றார். வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் மூலம் வணிகமயமாக்கலுக்காக இந்த ரோபோ நிறுவனத்தை அலைஸ் கடந்த 2017ஆம் ஆண்டு நிறுவினார். அகோஜினோவின் கூற்றுப்படி, இரண்டு பவுண்டுகள் எடையுள்ள இந்த நவீன ரோபோக்கள் 600 அடி உயரத்தில் இருந்து பள்ளத்தில் இறக்கி சோதனைக்கு உட்படுத்தப்பட்டு எந்த சேதமும் ஏற்படாமல் தப்பித்தன. இந்த சோதனையின் வெற்றியே அலைஸ் அவர்களின் வெற்றி ஆகும்.

மின்சார மோட்டார்கள்

மின்சார மோட்டார்கள்

ஸ்க்விஷ் ரோபாட்டிக்ஸ் தற்போது மொபைல் பதிப்பையும் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட வகை ரோபோக்களால் தரையில் பயணிக்க முடியும் என்பது மட்டுமின்றி ஈர்ப்பு மையத்தை மாற்றுவதற்காக கேபிள்கள் மற்றும் சிறிய வகை மின்சார மோட்டார்கள் உந்துதலுக்கு பயன்படுத்தப்படுகிறது என்று அலைஸ் கூறியுள்ளார். இந்த ரோபோக்களின் செயல்பாடுகள் வேகமாக இருக்காது. ஆனால் அதனால் ஏற்படும் நன்மைகள். கடினமான நிலப்பரப்புக்கு மேல் பகுதியிலும் இந்த ரோபோக்களால் செல்ல முடியும். மேலும் கற்பாறைகளுக்கும் பாறைகளுக்கும் இடையில் செல்லும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளது.

மலிவான விலையில் கலக்கும் தாம்சன் 55இன்ச் 4கே ஆண்ட்ராய்டு டிவி.!மலிவான விலையில் கலக்கும் தாம்சன் 55இன்ச் 4கே ஆண்ட்ராய்டு டிவி.!

லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் டெக்சாஸ்

இந்த நவீன வகை ரோபோக்கள் தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் டெக்சாஸ் பகுதிகளில் ஏற்பட்ட தீவிபத்தின் போது தீயணைப்புத் துறையினரால் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. அகோஜினோ இந்த ஆண்டு இறுதிக்குள் இதனை வணிக ரீதியாக இயக்க உறுதி செய்துள்ளார். கலிபோர்னியாவின் மவுண்டன் வியூவில் உள்ள நாசாவின் அமெஸ் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து பணியாற்றும் போது, ​​இந்த ரோபோக்களை உருவாக்க ஊக்கமளித்ததாக அவர் தெரிவித்தார்.

இயக்குனர் கிரேக் பிரைஸ்

இயக்குனர் கிரேக் பிரைஸ்

வாஷிங்டனில் உள்ள உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் இயக்குனர் கிரேக் பிரைஸ் அவர்கள் இந்த நவீன ரக ரோபோ தொழில்நுட்பத்தை பாராட்டியுள்ளார். இந்த ரோபோக்கள் பேரழிவு பகுதிகளுக்கு செல்லும் போது அதன் பயன்பாடுகள் ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருக்கும் என்றும், இதில் உள்ள கேமிராக்கள், சென்சார்கள் ஆகியவை ஆபத்து குறித்த விழிப்புணர்வை தருவதில் வல்லமை கொண்டது என்றும் தெரிவித்துள்ளார்.

Best Mobiles in India

English summary
These Squishy Robots Can Survive A 600 Feet Fall : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X