இதையெல்லாம் கண்டுபிடித்தது நாசா தான் என்று கூறினால் நம்புவீர்களா?

  விண்வெளியில் தங்கள் திட்டங்களை மேம்படுத்துவதற்காக நாசாவுக்கு நிறைய பொறியியல் மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகள் தேவைப்பட்டது, தேவைப்படுகிறது. அப்படியாக கண்டுபிடிக்கப்பட்ட சில பொருட்கள் மற்றும் செயல்முறைகள், ஆரம்பத்தில் விண்வெளி ஆராய்ச்சிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டது. பின்னர் அவைகள் வணிக ரீதியாகப் பயன்படுத்தப்படுகின்ற பல்வேறு தயாரிப்புகளின் அடித்தளங்களாக உருமாறின.

  எப்படி பார்த்தாலும், ஆரம்பத்திலயே கண்டு பிடிக்கப்பட்டதால், கீழ்வரும் தொழில்நுட்பங்களின் தந்தை - நாசா தான் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆச்சரியம் என்னவெனில், இதையெல்லாம் கண்டுபிடித்தது நாசாவா என்பதில் தான் உள்ளது.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  குழந்தை ஃபார்முலா

  நாசாவின் சிஇஎல்எஸ்எஸ் (CELSS - மூடப்பட்ட சுற்றுச்சூழல் ஆயுள் ஆதரவு அமைப்பு திட்டம்) என்று அழைக்கப்படும் பரிசோதனையின் ஒரு பகுதியாக குழந்தை சூத்திரம் (பேபி ஃபார்முலா) உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட ஆல்கே (பாசி) ஆனது நீண்ட கால இடைவெளிக்கு பயணிக்க அல்லது ஒரு மறுசுழற்சி முகவராக பயன்படுத்த முடிந்தது. இந்த ஃபார்முலா குழந்தை மனநல மற்றும் காட்சி வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது மற்றும் ஒரு சிறந்த உணவு துணையாகவும் உள்ளது.

  செயற்கை இதயங்கள்

  ஸ்பேஸ் ஷட்டில் எரிபொருள் குழாயின் உதவி உடன் நாசா மற்றும் புகழ்பெற்ற இதய அறுவை மருத்துவர் டாக்டர் மைக்கேல் டிபேக்கி ஆகியோரால் ஒரு மினியேட்சர் வென்ட்ரிக்குலார் அஸ்சிஸ்ட் பம்ப் உருவாக்கம் பெற்றது. சுமார் 13 கிராம் எடையுடை அந்த மைக்ரோமெட் டிபேக்கி விஏடி கருவியானது ஒரு இதய மாற்று சிகிச்சை கருவியாகும், இது உடலில் உள்ள இரத்தத்தை உறிஞ்சுவதன் மூலம், இதய மாற்று சிகிச்சைக்கு ஒரு பாலமாக செயல்படுகிறது.

  காற்று சுத்திகரிப்பு நிலையங்கள்

  வடிகட்டிகளைப் பயன்படுத்தாமல் விண்வெளியில் தாவர வளர்ச்சியை நீடிக்க இந்த தொழில்நுட்பத்தை நாசா உருவாக்கியது. பின்னர், கழிவுப்பொருட்களை அகற்றுவதன் மூலம் அழிந்துபோகக்கூடிய உணவுகளை பாதுகாப்பதற்காக ஒரு நிறுவனத்தால் இதே காற்று சுத்திகரிப்பு நிலையங்கள் வடிவமைக்கப்பட்டது

  ஆஸ்டியோபோரோசிஸ் சிகிச்சை

  விண்வெளி வீரர்களின் நலனை மனதிற்கொண்டு, எலும்பு முறிவு அல்லது இழப்பை சமாளிக்கும் நோக்கத்தின் கீழ் நாசா புதிய மருந்துகளை ஆராய தொடங்கியது. அந்த ஆய்வின் வளர்ச்சியில் வெளிப்பட்ட ஸ்க்லெரோஸ்டின் ஆன்டிபாடி ஆனது ஸ்பேஸ் ஷட்டில் மற்றும் ஸ்பேஸ் ஸ்டேஷன் பரிசோதனை செய்யப்பட்டு, அது 68% முதுகு எலும்பு முறிவுகள் மற்றும் 40% இடுப்பு எலும்பு முறிவுகளை குறைப்பது கண்டறியப்பட்டது. தற்போது மருத்துவ துறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

  சிறப்பு தோல் கிரீம்

  நாசாவினால் மனித நரம்பு மண்டலங்களில் இருந்து குறிப்பிட்ட 'ஏஜெண்டு'களை தயாரிக்க முடிந்தது. இந்த ஆய்வு ஆரம்பத்தில் ஒரு ஆய்வக நுண்ணுயிர் நிலைமைகளை நகலெடுக்கவே நடைபெற்று வந்தது. பின்னர் அது தோல் பராமரிப்பு மற்றும் புத்துணர்ச்சி துறைக்குள் நுழைக்கப்பட்டது. ரி-ஜூவேல் என்று அழைக்கப்படுகிறது நாசாவின் ஸ்பெஷல் ஸ்கின் க்ரீமை தற்போது ஆண்கள் மற்றும் பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

  மூளை அறுவை சிகிச்சைக்கான பை போலார் ஃபோர்செப்ஸ்

  அறுவை சிகிச்சை என்று வந்து விட்டால் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மை மிகவும் முக்கியமாகும். அதிலும் மூளை சார்ந்த சிகிச்சை என்றால் சொல்லவே வேண்டாம். பை போலார் ஃபோர்செப்ஸ் என்று அழைக்கப்படும் இந்த கருவிகள், எச்சரிக்கையுடன் மின்சாரத்தை பயன்படுத்தி நோயாளியின் திசுக்களை வெட்டி எடுக்கின்றன. இருப்பினும், சிகிச்சையின் போது வெப்ப உற்பத்தியில் சிக்கல் ஏற்பட்டது. அங்குதான் நுழைகிறது நாசா. வெப்ப குழாய் ஒன்றை பயன்படுத்தி வெளிப்படும் அதிகப்படியான வெப்பத்தை இழுக்க ஒரு தீர்வை கண்டுபிடித்தது.

  கண்ணிவெடிகளை அகற்ற உதவும் ஸ்பேஸ் ஷட்டில் எரிபொருள்

  ஸ்பேஸ் ஷட்டில் பயன்படுத்தப்படும் ராக்கெட்டின் எரிபொருள் ஆனது கண்ணிவெடிகளை அகற்ற உதவுகிறது. ஆம், 1990 களில், மீதமுள்ள ஷட்டில் எரிபொருள் ஆனது எந்தவொரு வெடிமருந்துகளையும் பயன்படுத்தாமல் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளை அழிக்க பயன் படுத்தப்பட்டது.

  டஸ்ட்பஸ்டர்

  இதை வாக்குவம் கிளீனர் போல என்றும் கூறலாம். இதை முதன் முதலில் கண்டுபிடித்தது நாசா தான். அப்பல்லோ விண்வெளித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த புழுதி உறிஞ்சான் உருவாக்கப்பட்டது. பின்னர் இந்த தொழில்நுட்பம் பிளாக் அண்ட் டெக்கர் உதவியுடன் கருவியாக வடிவமைக்கப்பட்டது.

  மேக்னட்டிக் லிக்விட் ஸ்பீக்கர்ஸ்

  புவியீர்ப்பு இல்லாமல் என்ஜினுக்குள் இருக்கும் திரவ எரிபொருளை நகர்த்துவதில் நாசா சில சிக்கல்களை சந்தித்தது. பின்னர், எரிபொருள் திரவத்தில் இரும்புச் சேர்மை கொண்ட சிறிய துகள்களை சேர்த்து, அதை காந்தமாக்கி, பின்னர் காந்தப்புலங்களைப் பயன்படுத்தி அதை நகர்த்துவதில் இருந்த சிக்கலை தீர்த்தது. இதே தொழில்நுட்பத்தை, சோனி கார்பரேஷன் 2012 ஆம் ஆண்டில் பயன்படுத்தியது. இது மெலிதான ஸ்பீக்கர்களின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது.

  கீறல் எதிர்ப்பு லென்ஸ்கள்

  நாசாவும் ஃபாஸ்டர்-கிராண்ட் கார்ப்பரேஷனும் இந்த லென்ஸை உருவாக்கியது. இந்த லென்ஸ்கள் தயாரிக்கப்படுவதற்கு முன்பு, க்ரவுண்ட் மற்றும் பாலிஷ்டு கண்ணாடிகளால் தான் லென்ஸ்கள் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

  சூப்பர் சோக்கர் (நீர்பீச்சி)

  நாசா பொறியியலாளரான டாக்டர் லோன்னி ஜான்சன் தான் சூப்பர் சோக்கரை உருவாக்கினார். குளியலறையில் உள்ள குளிர்பதன அமைப்புகளை சோதனை செய்த போது அவருக்கு இந்த யோசனை கிடைத்தது. 1989 ஆம் ஆண்டில் லாரமி டாய் கம்பெனியிடம் இருந்து நிதியுதவி கிடைத்தது. பின் 1990 ஆம் ஆண்டில் பவர் டர்ச்சர் சாதனமாக விற்பனைக்கு வந்தது. கடைசியாக, அது 1991 இல் சூப்பர் சோக்கராக மாறியது.

  சிஎம்ஓஎஸ்

  நவீன டிஜிட்டல் கேமிராக்களில் பயன்படுத்தப்படும் சிஎம்ஓஎஸ் (சென்சார்) தொழில்நுட்பத்தை முதலில் கண்டுபிடித்தது நாசா தான். நாசாவின் விண்வெளி கேமராக்கள் மற்றும் அதன் ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப் போன்ற நவீன வளர்ச்சிக்குப் பின்னால் இந்த தொழில்நுட்பம் தான் உள்ளது.

  வயர்லெஸ் ஹெட்செட்

  வயர்லெஸ் கம்யூனிகேஷன் ஆனது பிரபல அப்பல்லோ திட்டத்தின் விண்வெளி வீரர்களுக்காக உருவாக்கப்பட்டது. நிலவில் காலடி எடுத்து வைத்த பின்னர் நீல் ஆம்ஸ்ட்ராங் பேசிய புகழ்பெற்ற வார்த்தைகளை நம்மிடம் கொண்டு வந்தது ஒரு வயர்லெஸ் ஹெட்செட் தான்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  These Mind Blowing Technologies Were Initially Developed By NASA: Read more about this in Tamil GizBot
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more