Subscribe to Gizbot

"இந்தியாடா.. கெத்துடா"னு இனிமே எவனாச்சும் சொல்லுங்க, அப்புறம் இருக்கு.!

Written By:

"ஆயுத வளர்ச்சி ஒன்று மட்டுமே, ஒரு நாட்டின் வளர்ச்சியை நிர்ணயம் செய்யாது; செய்யபோவதுமில்லை" - இந்த "ஒப்பெறாத" கோட்பாடானது, யுத்தமொன்று தொடங்கும் முன்தினம் வரை மட்டுமே செல்லுபடியாகும்.

தலைக்கு மேல் தொங்கும் கத்தியானது அறுந்து, நம்மை நோக்கிப்பாயும் போது - ஆயுத வளர்ச்சியானது எவ்வளவு முக்கியம்.? இந்தியாவே போற்றும் அப்துல் கலாம் ஐயா ஏன் ஆயுத வளர்ச்சி மீது இவ்வளவு ஆர்வம் காட்டினார் என்பதெல்லாம் - பிளாஷ்பேக் வேகத்தில் - நமக்கு புரிய வரும். ஆனால், புண்ணியமிருக்காது.!

40 ஆண்டுகளுக்கு முன்பு நாசா செய்த தவறு இன்று உலகின் மாபெரும் அச்சறுத்தல்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
எது நியாயம்.? எது நீதி.?

எது நியாயம்.? எது நீதி.?

உங்கள் வீட்டுக்குள் விஷப்பாம்பொன்று புகுந்த பின்னர், எது நியாயம்.? எது நீதி என்பதையெல்லாம் பார்த்துகொண்டிருக்க மாட்டீர்கள், அடித்து விரட்டுவீர்கள் என்பதை முதலில் ஏற்றுக்கொள்ளுங்கள். ஏதோவொரு தேசத்தில், ஏதோவொரு மூலையிலிருந்து ஏவுகணையொன்று 'ட்ரிக்கர்' செய்யப்படும் அந்த நொடியில், ஒரு நாட்டின் அரசியலமைப்பு சட்டங்கள் தொடங்கி ஐ.நா-வின் ஒப்பந்தங்கள் வரை எல்லாமே மறந்தும்; மறைந்தும் போகும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

"சீனாக்காரன் மட்டும் மறுபடியும் எல்லை தாண்ட்டடும்"

இரத்தச்சரித்திரமொன்று எழுதிட நினைக்கும் ஓநாய்களுக்கு நடுவே, வெள்ளைக்கவிதைகள் எழுத நினைப்பது எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம்.? நம்மை சுற்றியுள்ள நாடுகள் ஆயுத வளர்ச்சியில் உச்சம் தொட்ட பின்பும் கூட மேல்நோக்கி பயணித்து கொண்டிருக்க, நாம் இங்கு டிவி முன்னால் அமர்ந்து கொண்டு "சீனாக்காரன் மட்டும் மறுபடியும் எல்லை தாண்ட்டடும், இந்திய ராணுவம் துவம்சம் செய்திடும்" என்று மார்தட்டிக் கொண்டிருக்கிறோம். சீனாவை விடுங்கள், பாகிஸ்தான் நம்மை விட பலமானது என்பதை நாம் அறிவோமா.?

'தாக்குதல் எல்லை'க்குள் இந்தியாவும் உண்டு

'தாக்குதல் எல்லை'க்குள் இந்தியாவும் உண்டு

அணு ஆயுதங்கள் கொண்டிருக்கும் சர்வ்தேச நாடுகளின் பட்டியலில் கடைசி இடத்தில் (9-வைத்து இடம்) இருக்கும் வடகொரியாவானது, மதிப்பீடு செய்திருப்பத்தை விட மூன்று மடங்கு அதிக எண்ணிக்கையிலான அணு ஆயுதங்களை கொண்டிருக்கலாமென்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். வடகொரியாவின் 'ஏவுகணை தாக்குதல் எல்லை'க்குள் இந்தியாவும் உண்டு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. எங்கோ குறிவைத்து செலுத்தப்பட்ட வடகொரிய ஏவுகணை இந்தியாவின் மீது திரும்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் வடகொரியா அந்த அளவிலான பெல்லிஸ்டிக் (அதாவது கண்டம் விட்டு கண்டம் தாண்டி அழிக்கும் ஏவுகணை) சோதனை தோல்விகளை சந்தித்துள்ளது.

இந்தியாவிற்கு என்ன (பலம்) இடம்.?

இந்தியாவிற்கு என்ன (பலம்) இடம்.?

அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு ஏஜென்சி உருவாக்கிய (ஜூலை 2017) அறிக்கையின்படி, வடகொரியாவின் புதிய அணுவாயுத எண்ணிக்கை தெரிய வருகிறது. அதாவது கிம் ஜோங் யூன் தலைமையின் கீழ் சுமார் 60 அணு ஆயுதங்கள் வரை உள்ளனவாம். ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு நிறுவனத்தினால் (Stockholm International Peace Research Institute) மதிப்பீடு செய்யப்பட்டுள்ள 10 முதல் 20 என்ற எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது குறிப்பிடத்தக்க வேறுபாடு தான். அதெல்லாம் சரி - நமது இந்தியாவின் பலம் என்ன.? அணு ஆயுதங்கள் கொண்டிருக்கும் சர்வ்தேச நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு என்ன இடம்.? முதல் இடத்தில் உள்ள நாட்டிற்கும் இந்தியாவிற்கும் இடையிலுள்ள வேறுபாடு என்ன.?

இஸ்ரேல்

இஸ்ரேல்

வடகொரியாவை தொடர்ந்து எட்டாவது இடத்தில் இஸ்ரேல் உள்ளது. சுமார் 80 அணு ஆயுதங்களை கொண்டுருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ள இஸ்ரேல், அதிகாரப்பூர்வமாக ஒரு அணு ஆயுதம் கூட வைத்திருக்கவில்லை மற்றும் ஒருமுறை கூட அணுவாயுத சோதனை நிகழ்த்தியதில்லை என்பது பெருங்கொடுமை.

இந்தியா

இந்தியா

இஸ்ரேலை தொடர்ந்து ஏழாவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவிடம் சுமார் 120 முதல் 130 அணு ஆயுதங்கள் வரை இருக்கலாமென மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் முக்கியமான விடயம் என்னவெனில், பெரும்பாலான அணு ஆயுதங்கள் இராணுவ நடவடிக்கைக்கான நிலைப்பாட்டிற்கு நகர்த்தபடாத ஆயுதங்களாகும். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னரே அதன் முதல் அணுவாயுத சோதனையை நிகழ்த்தியும் கூட, இதுதான் இந்தியாவின் நிலைப்பாடு என்பது வருத்தம்.

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

ஆறாவது இடத்தில் பாகிஸ்தான் உள்ளது. பாகிஸ்தானிடம் சுமார் 130 முதல் 140 அணு ஆயுதங்கள் வரை இருக்கலாமென மதிப்பிடப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமாக இந்தியாவை விட ஒருபடி மேலிருந்தாலும், ஆறுதலளிக்கக்கூடிய தகவல் என்னவென்றால் பாகிஸ்தானின் அணுவாயுதங்களும் கூட, இந்தியாவை போலவே இராணுவ நடவடிக்கைக்கான நிலைப்பாட்டிற்கு நகர்த்தபடாத ஆயுதங்களாகும்.

பிரிட்டிஷ்

பிரிட்டிஷ்

பட்டியலின் ஐந்தாவது இடத்தில் பிரிட்டிஷ் உள்ளது. இதனிடம் 215 அணு ஆயுதங்கள் இருக்கலாமென மதிப்பிடப்பட்டுள்ளது. ரஷ்யா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக அதிக அளவிலான அணுவாயுத சோதனைகளை பிரிட்டிஷ் நிகழ்த்தியுள்ளதென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சீனா மற்றும் பிரான்ஸ்

சீனா மற்றும் பிரான்ஸ்

நான்காவது இடத்தில் உள்ள சீனா சுமார் 270 அணு ஆயுதங்களையும், மூன்றாவது இடத்தில உள்ள பிரான்ஸ் சுமார் 300 அணு ஆயுதங்களை கொண்டுருக்கலாமென மதிப்பிடப்பட்டுள்ளது. முதல் அணுவாயுத சோதனையை 1960-ல் நிகழ்த்திய பிரான்ஸின் நிலைப்பாட்டையும், சற்றுபின்தள்ளி 1974-ல் முதல் அணுவாயுத (ஸ்மைலிங் புத்தா) சோதனையை நிகழ்த்திய இந்தியாவின் நிலைப்பாட்டையும் நீங்களே ஒப்பிட்டுக்கொள்ளுங்கள்.

அமெரிக்கா

அமெரிக்கா

இரண்டாவது இடத்தில் அமெரிக்கா உள்ளது. மதிப்பீட்டின்படி அமெரிக்காவின் கீழ் சுமார் 6800 அணு ஆயுதங்கள் இருக்கலாமென மதிப்பிடப்பட்டுள்ளது. 1990-களுக்கு பின்னர் இந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டே வருகிற காரணத்தினால் தான் அமெரிக்கா முதலிடத்தில் இல்லை.

ரஷ்யா

ரஷ்யா

அணு ஆயுதங்கள் கொண்டிருக்கும் சர்வ்தேச நாடுகளின் பட்டியலின் முதலிடத்தில் ரஷ்யா உள்ளது. கற்பனைக்கு எட்டாத வண்ணம் ரஷ்யாவிடம் சுமார் 7000 அணு ஆயுதங்கள் இருக்கலாமென மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் 2000-க்கும் குறைவானவைகள் இராணுவ நடவடிக்கைக்கான நிலைப்பாட்டிற்கு நகர்த்தப்பட்ட ஆயுதங்களாகும். ரஷ்யாவின் 7000 எங்கே.? இந்தியாவின் 130 எங்கே.? நாம் கூறிக்கொள்ளும் நிஜமான கெத்து யார்.? இந்த கேள்விகளுக்கான பதிலை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

"இதுவொரு ஆயுதப் பந்தயமாகவே இருக்கட்டும்" என்ன இப்போ.?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் அணுவாயுத வளர்ச்சியை நவீனமயமாக்க 1 டிரில்லியன் டாலர்கள் மதிப்புள்ள திட்டத்தை கொண்டுவந்துள்ளார். ரஷ்யாவும் தனது ஆயுத திட்டத்திற்கு அதே அளவிலான பட்ஜெட் ஒன்றை கையில் கொண்டுள்ளது. ரஷ்யாவின் அணுசக்தி நவீனமயமாக்குதல் தொடர்பாக கருத்து தெரிவித்த டிரம்ப் "இதுவொரு ஆயுதப் பந்தயமாகவே இருக்கட்டும்" என்று சொல்லியிருக்கிறார். இந்தியாவை பொறுத்தமட்டில், மக்களாகிய நாம் தான் "கெத்து டா.. சிங்கம் டா" என்று மார்தட்டிக்கொண்டிருக்கிறோமமே ஒழிய, பொறுப்பில் உள்ளவர்கள் போராடும் தன்மைமிக்க வார்த்தைகளை உமிழ்வதாய் தெரியவில்லை - ஆக, எம் இந்திய மக்களே கொஞ்சம் அடக்கி வாசிப்போமாக.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
These are the countries with nuclear weapons. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot