உலகையே மிரட்டி எடுத்த டெஸ்லாவின் கண்டுபிடிப்புகள்-உடைத்த காரணம் இதுதான்.!

|

நிகோலா டெஸ்லா - எந்த ஒரு அறிமுகமும் தேவையில்லாத ஒரு பெயர் என்றே கூறலாம். பூமியில் இதுவரை வாழ்ந்த மிகப் பெரிய கண்டுபிடிப்பாளர்களில் ஒருவரான இவர், 27 நாடுகளில் 270 க்கும் மேற்பட்ட காப்புரிமைகளை கொண்டுள்ளார்.

  உலகையே  மிரட்டி எடுத்த டெஸ்லாவின் கண்டுபிடிப்புகள்

எனினும், இந்த வியத்தகு மேதையின் அத்தணை காப்புரிமைகளும் கண்டுபிடிப்பாகி விடவில்லை என்பதே கசப்பான உண்மை. சாத்தியமான சில டெஸ்லா கண்டுபிடிப்புகள், இன்றும் உலகை ஆச்சரியப்டுத்தி கொண்டிருக்க, மறுகையில் சாத்தியமாகாமல் போன சில டெஸ்லா கண்டுபிடிப்புகள் இந்த உலகின் இழப்பாகவே கருதப்படுகிறது. அவைகள் என்னென்ன என்பதை பற்றிய விரிவான தொகுப்பே இது!

வயர்லெஸ் எனர்ஜி டிரான்ஸ்மிஷன் :

வயர்லெஸ் எனர்ஜி டிரான்ஸ்மிஷன் :

(Wireless Energy Transmission) டெஸ்லாவின் பெரும்பான்மையான வேலை ஆனது மின்சார துறையில் தான் உள்ளது. அதனால் தான் பெரும்பாலான டெஸ்லா காப்புரிமைகள் மின்சக்தி துறையில் உள்ளன. உங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு மின்சாரம் வழங்குவதற்காக பயன்படுத்தப்படும் மாற்று மின்னோட்டத்திற்காக (Alternating Current) நீங்கள் டெஸ்லாவுக்கு நன்றி தெரிவிக்கலாம். ஆனால் அதே டெஸ்லா மின்சாரத்தை கம்பியில்லாமல் பரிமாறிக்கொள்ள முடிந்த ஒரு கோபுரத்தை கட்ட முயன்றதை நீங்கள் அறிவீர்களா? ஆம் லாங் தீவின் வட கரையில், ஒரு வர்டன்ஸ்கிஃப் டவர் கட்டமைப்பிற்கு நிதி திரட்ட அமெரிக்கன் ஃபைனான்சியர் ஜே.பீ. மோர்கனை அணுகினார். அவரால் நிதியை பெறமுடியாமல் போக, டெஸ்லா இந்த திட்டத்தை கைவிட வேண்டிய நிலை உருவானது.

 சூப்பர்சோனிக் ஏர்ஷிப்கள் :  (

சூப்பர்சோனிக் ஏர்ஷிப்கள் : (

Supersonic Airships Powered by Wireless Electrical Towers) நிகோலா டெஸ்லா தனது காலத்தைவிட பல தசாப்தங்கள் முந்திய சிந்தனையை கொண்டு இருந்தார். உதாரணமாக, சமீபத்தில் அறிமுகமான ஸ்மார்ட்போன்களுக்கான வயர்லெஸ் சார்ஜிங் திறனை,

ஒரு புரட்சிகரமான அம்சம் என்று நீங்கள் நினைத்திருக்கலாம். ஆனால், டெஸ்லா 1919 ஆம் ஆண்டிலேயே இந்த திறனை ஒரு சூப்பர்சோனிக் ஏர்ஷிப்பில் இணைக்க நினைத்தார், அதற்காக பணியும் ஆற்றினார். டெஸ்லா கூற்றுப்படி, இந்த திறன் ஆனது வானூர்திகளுக்காக அமைக்கப்பட்ட தரைமட்ட கோபுரங்களால் இயங்கும். விமானம் ஆனது தரையிலிருந்து சுமார் 40,000 அடி உயரத்தில், சுமார் மணிக்கு 1,000 மீட்டர் வேகத்திலும் பறக்க முடியும். இதுவும் இறுதிவரை சாத்தியமாகவில்லை.

தொலைதூர கட்டுப்பாட்டு கப்பல்கள்:

தொலைதூர கட்டுப்பாட்டு கப்பல்கள்:

(Remote Controlled Navies) இராணுவ தொழில்நுட்பத்திலும் டெஸ்லா தீவிரமாக ஈடுபட்டு வந்தார். ஆல்ஃபிரட் நோபலைப் போலவே, டெஸ்லாவும், யுத்தங்களில் மனித உயிர்கள் இழக்கப்படுவதை விரும்பவில்லை. அதனால் டெஸ்லா ஒரு படகை கண்டுபிடித்தார். அது ரேடியோ சிக்னல்கள் மூலமாக ஆரம்பிக்கும், இயங்கும் மற்றும் நிற்கும் திறனை கொண்டிருந்தது. இந்த திட்டமும் முடிவை எட்டவில்லை.

எண்ணத்தின் கேமரா:

எண்ணத்தின் கேமரா:

(The Thought Camera) ஒரு நபரின் எண்ணங்களை சித்தரித்து படமாக காட்சிப்படுத்தும் ஒரு யோசனை டெஸ்லாவுக்கு இருந்தது. அதை 1933 ஆம் ஆண்டில் டெஸ்லா வெளிப்படுத்தினார். 1893 ஆம் ஆண்டில் அது சார்ந்த சில விசாரணைகளை தான் செய்ததாகவும் கூறினார். விழித்திரை உடனான மறுபகிர்வு நடவடிக்கை மூல இது சாத்தியமாகும் என்று நம்பினார். அதாவது ஒரு நபரால் கற்பனை செய்யப்படும் பொருட்களை திரையில் காட்சிப்படுத்த முடியும் என்று நம்பினார். இந்த திட்டமும் இறுதி படியை தொடவில்லை.

பூகம்ப இயந்திரம்:

பூகம்ப இயந்திரம்:

(The Earthquake Machine) 1893 ஆம் ஆண்டில், டெஸ்லா நீராவி மூலம் இயங்கும் இயந்திர அலைவுக்கான காப்புரிமையை பெற்றார். மின்சாரத்தை உருவாக்குவதற்கு இந்த நுணுக்கத்தின் அதிர்வுகளை பயன்படுத்தலாம். இந்த கருவியின் சோதனையின் போது நியூ யார்க் நகர ஆய்வக கட்டிடத்தை கிட்டத்தட்ட இடிந்து விழ பார்த்தது என்பதும், பின் ஒரு சுத்தியின் மூலம் அந்த மெஷின் டெஸ்லா உடைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

செயற்கை டைடல் அலைகள்:

செயற்கை டைடல் அலைகள்:

(Artificial Tidal Waves) டெஸ்லாவின் பெரும்பாலான பேரழிவு சக்தி கொண்ட ஆயுத கருத்துகள் நிஜமாகவில்லை. அதில் ஒன்றுதான் செயற்கை டைடல் அலை. இது கடற்படை எதிரிகளுக்கு எதிராக செய்லபடும் ஒரு சிறந்த பாதுகாப்பு வளையமாக இருக்கும் என்றும், அதை நிரூபிக்க முடியும் என்றும் அவர் நம்பினார். இந்த திட்டத்தின் தீர்வான டெலிஆட்டோநமஸ் ஆனது, டன் கணக்கிலான வெடிமருந்துகளை எதிரி கடற்படை அருகில் வெடிக்க வைத்து, அதன் விளைவாக வெடிப்புத் தளத்திலிருந்து 100 அடி உயரத்திற்கான செயற்கை கடல் அலைகளை உருவாக்கி, அவர்களை அழிக்கும் என்கிறது.

டெத் ரே:

டெத் ரே:

(The Death Ray) ஒரு படையையே கொல்லும் திறன் கொண்ட இந்த கதிருக்கு டெஸ்லா அமைதி கதிர்கள் என்று பெயரிட்டார். பாதரச ஓரிடத்தான்களை ஒலியை விட 48 மடங்கு அதிக வேகத்தை செலுத்துவத்தின் மூலம், ஒரு சக்தி வாய்ந்த பீம் உற்பத்தி ஆகும் என்றும், அது ஒரு முழு சேனைகளையும் அழிக்கக்கூடிய போதுமான சக்தியை உருவாக்கும் என்றும் டெஸ்லா நம்பினார். சோவியத் ஒன்றியத்துடனான ஒத்துழைப்புடன் அதுசார்ந்த பல்வேறு யோசனையை சாதிக்க முயன்றார், ஆனால் எதுவுமே ஒரு பயனுள்ள முடிவுக்கு வரவில்லை.

Most Read Articles
Best Mobiles in India

English summary
These 7 Inventions Of Nikola Tesla Never Became A Reality : Read more at this tamil.gizbot.com

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more