எகிப்து பிரமிடை விட உயரமான சுனாமி அலைகள், பூமியில் இல்லை..!

Written By:

விஞ்ஞானிகள் குழு ஒன்று, எக்ஸ்டிராடெரஸ்ட்ரியல் பிளானட்டில் (பூமி அல்லாத வேறு கிரகம்) ஏற்பட்டுள்ள சுனாமியின் முதல் கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது..!

ஒருவேளை அந்த நிலப்பரப்பின் பேரழிவிற்கு சுனாமி காரணமாக இருக்கலாம். எகிப்தின் மாபெரும் பிரமிட் ஆன கிசாவை விட உயரமான கடல் அலைகள் அங்கு எழுந்துள்ளது. அந்த சுனாமியை பூமி கிரகத்தில் ஏற்படும் சுனாமிகளுடன் விஞ்ஞானிகள் ஒப்பீடு செய்கின்றன..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
நிலப்பேரழிவு :

#1

மாபெரும் நிலப்பேரழிவை ஏற்படுத்திய அந்த மெகா சுனாமிகள் ஆனது, நம்ப முடியாத வண்ணம் செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்டுள்ளன.

ஆதாரம் :

#2

பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் பெரிய அளவிலான சுனாமி வெளிப்படுத்தப்பட்ட ஆதாரம் உள்ளதை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

வானியல் மற்றும் புவியியல் குழு :

#3

டஸ்கன் கிரக அறிவியல் நிறுவனத்தை சேர்ந்த ஜெ அலெக்சிஸ் ரோட்ரிக்ஸ் தலைமையில் கீழ் ஆய்வு மேற்கொண்ட வானியல் மற்றும் புவியியல் குழுவானது இந்த கண்டுப்பிடிப்பை நிகழ்த்தியுள்து.

மெகா சுனாமிகள் :

#4

சுமார் 3.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு தனித்தனி மெகா சுனாமிகள் சிவப்பு கிரகத்தின் நிலப்பகுதி முழுவதையும் கிழித்து எரிந்துள்ளது என்கிறார் ரோட்ரிக்ஸ்.

முதல் நுண்ணுயிர் ஜீவராசிகள் :

#5

செவ்வாய் கிரகம் 1.1 பில்லியன் ஆண்டுகள் பழமையானதாக இருந்துள்ளபோது இது நிகழ்ந்துள்ளது. அதாவது, பூமி கிரகத்தின் முதல் நுண்ணுயிர் ஜீவராசிகள் உருவாகிய அதே தருணம்.

உயரம் :

#6

இரண்டு சுனாமிகளின் அலைகளும் கரையில் சராசரியாக 150 அடி உயரதிற்கு உருவாக்கப்பட்டுள்ளது, மற்றும் சில அலைகள் முற்றிலும் அசுரத்தனமாக 400 அடி உயரம் வரை எழுந்துள்ளன.

தாக்கம் :

#7

இந்த சுனாமிகள் கிளம்ப செவ்வாயின் பண்டைய நீர் கடலில் விழுந்து நொறுங்கிய விண்கற்களின் தாக்கமாக இருக்கலாம் என்றும் அந்த விண்கற்கள் சுமார் 19 மைல் விட்டம் அளவிலான பெரும் பள்ளங்களை உருவாக்கியுள்ளது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

பூமி போலவே :

#8

பூமியில் சுனாமி ஏற்படுத்தும் பாதிப்பை போலவே, செவ்வாய் சுனாமிகள் வண்டல், கற்பாறைகள் மற்றும் நூற்றுக்கணக்கான நிலவியல் அம்சங்களை துவம்சம் செய்துள்ளது.

நிலவியல் கைரேகைகள் :

#9

சுமார் 3.4 பில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு செவ்வாயில் ஏற்பட்ட சுனாமிகளின் பாதிப்பு மற்றும் அத்தகைய நிலவியல் கைரேகைகள் தற்போது எளிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அரேபியா டெர்ரா :

#10

செவ்வாய் கிரகத்தின் குறிப்பிட்ட இரண்டு பகுதிகளில் (க்ரைச்ஸ் ப்ளானிஷியா மற்றும் அரேபியா டெர்ரா) அதிக அளவிலான தண்ணீர் தடங்கள் மற்றும் பண்டைய கடல் கடலோர பகுதிகள் இருந்துள்ளதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளன.

தடை :

#11

இரண்டாவாதாக ஏற்பட்டுள்ள சுனாமி யானது முதல் சுனாமியை போல செவ்வாய் முழுக்க படர்ந்து தாக்கி அழிக்கவில்லை என்றும் என்றும் செவ்வாய் கிரகத்தின் மிருதுவான மேற்பரப்பானது, முதல் சுனாமி அலைகளை தடைகளில்லாமல் செவ்வாய் முழுக்க பயணிக்க அனுமதித்துள்ளது என்றும் விஞ்ஞானிகள் விளக்கம் அளிக்கின்றனர்.

மதிப்பீடு :

#12

அங்கு சுனாமி மூலம் மூழ்கடிக்கப்பட்ட சில பகுதிகளில் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இதனை தொடர்ந்து செவ்வாய் நிலப்பகுதியின் குணாதிசயதத்தை ரோபோ அல்லது மனித ஆய்வு மூலம் வரும் காலங்களில் மதிப்பீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க :

#13

பல லட்சம் கிமீ தாண்டி பார்த்தோம், பக்கத்துல பார்த்தோமா.?!


யூரோப்பா கடல் மேற்பரப்பின் அடியில் உயிர்கள் பதுங்கி கிடக்கிறதா..??

தமிழ் கிஸ்பாட் :

#14

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
There Were Mega Tsunamis on Mars. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot