அமெரிக்காவின் மிக ரகசியமான, மோசமான டெல்டா 4. ஏன்.? எதற்கு.?!

|

ஸ்பேஸ் ரேஸ் (Space Race) - என்பது 4 அக்டோபர், 1957-ல் சோவியத் ஒன்றியத்தின் ஸ்புட்னிக் 1 செயற்கைக்கோள் ஏவுதலுடன் ஆரம்பித்து, ஜூலை 1975-ல் இருநாடுகளின் (அமெரிக்கா-சோவியத் ஒன்றியம்) கூட்டுத்திட்டமான அப்பல்லோ-சோயூஸ் சோதனைத் திட்டத்துடன் முடிவுக்கு வந்தது என்று வரலாறு கூறினால் அது முட்டாள்தனம் அல்ல, அதை நாம் நம்பினால் தான் முட்டாள்தனம்..!

தங்களது மேலாதிக்கத்தோடு சேர்த்து தேசிய பாதுகாப்பு, தொழில்நுட்ப மற்றும் கருத்தியல் மேன்மையை நிலைநாட்ட தொடங்கிய ஸ்பேஸ் ரேஸ் இப்போது ஆதிக்கம், ஆக்கிரமிப்பு, அட்டகாசம் என பல எல்லைகள் மீறிக் கொண்டே போகிறது. அதற்கு மேலுமொரு எடுத்துக்காட்டு தான் - இது..!

#1

#1

கடந்த 2011 ஆம் ஆண்டு ஓய்வுப்பெற்ற நாசாவின் விண்வெளி ஓடத்திற்கு அடுத்தப்படியாக விண்வெளிக்குள் செலுத்தப்பட்ட மிகப்பெரிய, அதுமட்டுமின்றி இயல்பாக உலகின் மிக சக்தி வாய்ந்த ராக்கெட் தான் டெல்டா - 4..!

#2

#2

71.6 மீட்டர் உயரம், விண்கலத்தின் ஸ்டேக்கை விட முழுமையாக 15 மீட்டர் உயரம், 28.4 டன் எடை வரையிலாக பூமியின் குறைதூர சுற்றுவட்டப் பாதைக்குள் பொருட்களை கொண்டு செல்ல உதவும் அளவிற்கு சக்தி கொண்டது - டெல்டா 4..!

#3

#3

டெல்டா 4 - ஐக்கிய வெளியீடு கூட்டணியால் (United Launch Alliance ) கட்டப்பட்ட மிக பிரம்மாண்டமான ஒரு ராக்கெட் என்பதும் குறிப்பிடத் தக்கது..!

#4

#4

அனைத்தையும் விட முக்கியமாக இது மிகவும் அரிதான கனரக லிப்ட் வாகனம் (heavy-lift vehicle) என்பதும், விண்வெளியில் ஒரு இரகசிய உளவு செயற்கைக்கோளை சுமந்து கொண்டு சென்றுள்ளது.

#5

#5

சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்ட உளவு செயற்கைகோள் ஆன என்ஆர்ஓஎல்-37 (NROL-37) ஆனது தேசிய புலனாய்வு அலுவலகத்தின் செயற்கைகோளாகும்.

#6

#6

செலுத்ப்பட்டது ஒரு உளவு செயற்கைகோள் என்பது தவிர்த்து வேறெந்த தகவலையும் தேசிய புலனாய்வு அலுவலகம் பகிர்ந்து கொள்ளவில்லை.

#7

#7

இருப்பினும், செயற்கை கோளை செலுத்த டெல்டா 4 பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதை வைத்து தேசிய புலனாய்வு அலுவலகத்தின் மேம்பட்ட ஓரியன் செயற்கைக்கோள் என்றும், அது இணைச்சுற்றுவட்டப் பாதையில் சாதகமான இடத்திலிருந்து ரேடியோ சிக்னல்களை அளவிடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

#8

#8

கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சுமார் 5,800 கிலோமீட்டர் என்ற உச்ச உயரத்தில் நாசாவின் ஓரியன் விண்கலத்தை செலுத்தியதற்கு பின்பு தற்போது தான் ஹெவி ராக்கெட் ஆன டெல்டா-4 விண்ணில் பறந்துள்ளது

#9

#9

டெல்டா 4 உருவாக்க செலவானது சுமார் 400 மில்லியன் டாலர்கள் வரை செல்வதால் தான் இந்த சக்திவாய்ந்தக ராக்கெட் ஆனது இதுவரை வெறும் 9 முறை மட்டுமே விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

#10

#10

டெல்டா 4 மற்றும் அட்லஸ் 5 வகை ராக்கெட்களின் நம்பகத்தன்மையானது, அமெரிக்க பாதுகாப்பு துறைக்கு செலவு பற்றிய சிந்தனையை தோற்கடித்து விடுகிறது. இவ்விரண்டு வகை ராக்கெட்களும் 107 'லான்ச்'களும் வெற்றியடைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

#11

#11

சமீபத்திய ஆண்டுகளாய் அதிக செலவுகள் மற்றும் பூகோள அரசியல் பதற்றம் போன்ற அழுத்தத்தின் காரணமாக டெல்டா நான்கை விட அட்லஸ் 5வகை ராக்கெட்கள் தான் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளன.

#12

#12

தற்போது வரைஇளக மிகவும் சக்தி வாய்ந்த ராக்கெட் ஆன பெரும்பாலும் பயன்படுத்த மறுக்கப்படுகிறது என்பதும், இன்னும் எவ்வளவு காலம் டெல்டா 4 ராக்கெட் பயன்பாட்டில் இருக்கும் என்பது தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

#13

#13

செவ்வாயில் இருக்கும் க்யூரியாசிட்டி ரோவரில் மனித உருவம்..?!


காலவெளியில் உள்ள சுரங்கப்பாதை : நம்மை எங்கு கொண்டு செல்லும்..?!

#14

#14

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
The world’s biggest, baddest rocket launched Saturday and it was stunning. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X