இனிமே Duracell எனும் அமெரிக்க கம்பெனிக்காரன் அதிகமா விளம்பரம் போடுவான்; ஏன்.?

அட இந்த காலத்தில் யாருப்பா லித்தியம் அயன் பேட்டரிலாம் யூஸ் பண்ணிக்கிட்டு இருக்கா.?

|

டூராசெல் இன்க் என்பது ஒரு அமெரிக்க உற்பத்தி நிறுவனமாகும். பேட்டரிகள் மற்றும் ஸ்மார்ட் ஆற்றல் அமைப்புகளை உருவாக்கும் இந்நிறுவனம் பேர்கர்ஷயர் ஹாத்வேவிற்கு சொந்தமானதாகும். நாளை முதல் டிவி விளம்பரங்களில் அதிக அளவிலான டூரச்செல் (Duracell) விளம்பரங்களை கண்டால், ஆச்சரியப்ப்படுவதற்கில்லை. ஏனெனில் ஒரு அசாத்தியமான விடயம் சாத்தியமாகிவிட்டது. அதென்னது.?

நாம் அன்றாடம் பயன்படுத்தும் கேஜெட்டுகள் ஆனது, ஒருவேளை சுவற்றின் 'ப்ளக்'குகளுக்குள் செருகப்பபட்டிருக்கவில்லை என்றால், அவைகள் அனைத்தும் லித்தியம்-அயன் பேட்டரிகள் மூலம் இயக்கப்படுகின்றன என்று அர்த்தம்.

கற்பனை கூட செய்து பார்த்திடாத பல இடங்களின் உள்ளே.!

கற்பனை கூட செய்து பார்த்திடாத பல இடங்களின் உள்ளே.!

அட இந்த காலத்தில் யாருப்பா லித்தியம் அயன் பேட்டரிலாம் யூஸ் பண்ணிக்கிட்டு இருக்கா.? என்று ஏளனமாக நினைத்து விட வேண்டாம். லித்தியம் அயன் பேட்டரிகள் எல்லா இடங்களிலும் இருக்கின்றன, நமது தொலைபேசிகள், மடிக்கணினிகள், மின்சார கார்கள், ஸ்மார்ட் பொம்மைகள் மற்றும் நீங்கள் கற்பனை கூட செய்து பார்த்திடாத பல இடங்களின் உள்ளேயும் அவைகள் நிறைந்துள்ளன.

100% ஆம் என்று கூறமுடியாது.!

100% ஆம் என்று கூறமுடியாது.!

ஆனால் அந்த பேட்டரிகள் (லித்தியம்-அயன்) ஒரு சிறந்த, திறமையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு-இணக்கமான ஒன்றா.? என்று கேட்டால் 100% ஆம் என்று கூறமுடியாது. சரி அதற்கு என்ன தான் மாற்று.? என்கிற கேள்விக்கான பதிலை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர், அதுதான் - புரோட்டான்.!

உலகின் முதல் ரிச்சார்ஜபிள் புரோட்டான் பேட்டரி.!

உலகின் முதல் ரிச்சார்ஜபிள் புரோட்டான் பேட்டரி.!

இதில் சுவாரசியம் என்னவெனில் இதுவொரு மாற்றுக்கருத்து மட்டும் அல்ல, இந்த கருத்தாக்கத்தின் முதல் முன்மாதிரியானது ஏற்கனேவே ரெடியாகிவிட்டது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் ஆர்.எம்.ஐ.டி பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தான் உலகின் முதல் ரிச்சார்ஜபிள் புரோட்டான் பேட்டரியை உருவாக்கியுள்ளனர்.

இன்னும் மலிவான மற்றும் சூழல் நட்பு எரிசக்தி ஆதாரம்.!

இன்னும் மலிவான மற்றும் சூழல் நட்பு எரிசக்தி ஆதாரம்.!

இந்த பேட்டரியானது முற்றிலும் புரோட்டான்களால் இயங்குகிறது, இவைகள் அதிக அளவிலான துணை-அணு துகள்களை கொண்டுள்ளதால், அதிக அளவு ஆற்றல் சேமிப்பதற்கான திறனை கொண்டுள்ளது. உருவாக்கம் பெற்றுள்ள இந்த முன்மாதிரியை விட இன்னும் மலிவான மற்றும் சூழல் நட்பு எரிசக்தி ஆதாரங்களை தங்களால் உருவாக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

இரண்டு எளிய காணரங்களின் அடிப்படையில்.!

இரண்டு எளிய காணரங்களின் அடிப்படையில்.!

ஆராய்ச்சியாளர்களின் கூற்றின்படி, இந்த புரோட்டான் பேட்டரிகள் ஆனது அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்குள் லித்தியம் அயன் பேட்டரிகளுடன் வர்த்தக ரீதியில் போட்டியிடும். ஆர்ஏஐடி (RMIT) பல்கலைக்கழகத்தின் வலைத்தளத்தில், முதன்மை ஆராய்ச்சியாளர் ஜான் ஆண்ட்ரூஸ் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில், இரண்டு எளிய காணரங்களின் அடிப்படையில் புரோட்டான் பேட்டரிகளானது லித்தியம் பேட்டரிகளுக்கான சரியான மாற்றாக இருக்கும் என்கிறார்.

பயன்படுத்தப்படும் முதன்மை ஆதாரம் கார்பன் தான்.!

பயன்படுத்தப்படும் முதன்மை ஆதாரம் கார்பன் தான்.!

ஒன்று இவைகள் மிகவும் மலிவானது, ஏனெனில் புரோட்டான் பேட்டரிகளில் பயன்படுத்தப்படும் முதன்மை ஆதாரம் கார்பன் தான். மற்றொன்று லித்தியம் அயனிகளைப் பயன்படுத்துவதை விட புரோட்டான்களின் பயன்பாடானது சக்தி வாய்ந்த பேட்டரிகளை உருவாக்க உதவும்.

How to Make a Video Intro for YouTube Video for FREE! - Tamil
லித்தியம் பேட்டரிகளை விட சூழல் நட்பு மிகுந்தது.!

லித்தியம் பேட்டரிகளை விட சூழல் நட்பு மிகுந்தது.!

புரோட்டான் பேட்டரி செயல்பாட்டில் கார்பன் ஒரு முக்கிய உறுப்பு என்பதால், அது (கார்பன்) தயாரிக்கப்படும் வழிமுறையானத்தில் எரிப்பது அல்லது எரிப்பினால் ஏற்படும் புகையை காற்றில் கலக்கவிடுவது போன்ற மாசுமிக்க பணிகளுக்கு இடமிருக்காது. அதாவது லித்தியம் பேட்டரிகளை விட, புரோட்டான் பேட்டரியானது சூழல் நட்பு மிகுந்தது என்று அர்த்தம்.

மேலும் இதுபோன்ற அறிவியல் கட்டுரைகளை படிக்க தமிழ் கிஸ்பாட் தளத்தின் அறிவியல் தமிழ் பிரிவுடன் இணைந்திருக்கவும்.!

Best Mobiles in India

English summary
The World's 1st Proton Battery Is Here, Cheaper & More Eco-Friendly Than Lithium-Ion Batteries. Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X