ரஷ்யாவிடம் கையேந்துவதில் சீனாவை மிஞ்சிய இந்தியா; இதான் உங்க கெத்தா மேடம்.?

கடந்த 2017 ஆம் ஆண்டில் ரஷ்யாவிடம் இருந்து, அதன் மிக சக்தி வாய்ந்த, அதிநவீன ஆயுதங்களை, அதிக அளவில் வாங்கிய 10 நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது

|

கடந்த 2017 ஆம் ஆண்டு வரையிலாக ரஷ்யாவிடம் இருந்து, அதன் மிக சக்தி வாய்ந்த, அதிநவீன ஆயுதங்களை, அதிக அளவில் வாங்கிய 10 நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. அந்த பட்டியலில் இந்தியாவிற்கு கிடைத்துள்ள இடத்தை அறிந்த பின்னர், சமீபத்தில் சென்னையில் ராணுவ தளவாட கண்காட்சி என்று ஒன்று நடத்தப்பட்டதே, அதில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்ததெல்லாம் வெறும் தீபாவளி துப்பாக்கிகள் போலும், என்கிற வெறுப்பு மேலோங்குகிறது.

ரஷ்யாவிடம் கையேந்துவதில் சீனாவை மிஞ்சிய இந்தியா; இதான் கெத்தா மேடம்.?

ஏஎப்பி அறிக்கையின்படி, கடந்த 2017 வரையிலாக உலகம் முழுவதிலும், மொத்தம் 53 நாடுகளுக்கு, சுமார் 15 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஆயுதங்களை ரஷ்யா ஏற்றுமதி செய்துள்ளது. அந்த 15 பில்லியன் டாலர்களில், என்னென்ன நாடுகளுக்கு என்னென்ன இடம்.? அதில் சீனாவின் செலவு கணக்கு என்ன.? அதை மிஞ்சிய இந்தியாவின் செலவு கணக்கு என்ன.? என்னென்ன ஆயுதங்களை வாங்கியுள்ளது.? என்கிற பட்டியல் இதோ.!

10-வது இடத்தில் வங்காளதேசம்.!

10-வது இடத்தில் வங்காளதேசம்.!

ஆயுதங்கள் வாங்கிய மொத்த தொகை: 93 மில்லியன் டாலர்கள்.

சில பெரிய கொள்முதல் : ஆறு மி-8எம்டி / மி-17 டிரான்ஸ்போர்ட் ஹெலிகாப்டர்கள், இதே வகையில் கூடுதலாக மேலும் ஐந்து ஹெலிகாப்டர்களையும் ஆர்டர் செய்துள்ளது. அவைகள் இன்னும் டெலிவரி செய்யப்படவில்லை. தவிர 340 ரஷ்ய பிடிஆர்-80 ஏபிசிக்களையும் வங்காளதேசம் வாங்கியுள்ளது.

09-வது இடத்தில் அஜர்பைஜான்.!

09-வது இடத்தில் அஜர்பைஜான்.!

ஆயுதங்கள் வாங்கிய மொத்த தொகை: 128 மில்லியன் டாலர்கள்.

சில முக்கிய கொள்முதல்: 36 டோஸ் 1 செல்ப்-ப்ரொபெல்டு மல்டிபிள் ராக்கெட் லான்சர், 70 ரஷ்ய பிடிஆர்-82ஏ காலாட்படை சண்டை வாகனங்கள். அதில் 40 வாகனங்கள் ஆனது 2017-ல் தான் டெலிவரி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

08-வது இடத்தில் பெலாரஸ்.!

08-வது இடத்தில் பெலாரஸ்.!

ஆயுதங்கள் வாங்கிய மொத்த தொகை: 145 மில்லியன் டாலர்கள்.

சில முக்கிய கொள்முதல்: 12 மி-8எம்டி / மி-17 போக்குவரத்து ஹெலிகாப்டர்கள், 12 சு-30எம்கே போர் விமானங்கள், 100 ரஷியன் டார் ஏவுகணை அமைப்புகள், நான்கு டி 72பி3 டாங்கிகள். இதெல்லாம் தவிர பெலாரஸ், ரஷ்யா தலைமையிலான கூட்டு பாதுகாப்பு உடன்படிக்கை அமைப்பின் ஒரு பகுதியாக உள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

07-வது இடத்தில் கஜகஸ்தான்.!

07-வது இடத்தில் கஜகஸ்தான்.!

ஆயுதங்கள் வாங்கிய மொத்த தொகை: 163 மில்லியன் டாலர்கள்.

சில முக்கிய கொள்முதல்: 12 சு-30எம்கே போர் விமானங்கள், நான்கு ரஷ்ய மி-35எம் போர் ஹெலிகாப்டர்கள், 90 ரஷ்ய பிடிஆர-82ஏ காலாட்படை சண்டை வாகனங்கள் மற்றும் ஒரு ப்ராஜெக்ட் 10750 மைன்ஸ்சுவீப்பிங் கப்பல்.

06-வது இடத்தில் அங்கோலா.!

06-வது இடத்தில் அங்கோலா.!

ஆயுதங்கள் வாங்கிய மொத்த தொகை: 188 மில்லியன் டாலர்கள்.

சில முக்கிய கொள்முதல்: 12 சு-30கே போர் விமானங்கள், அதில் 6 விமானங்கள் 2017-ல் டெலிவரி ஆனது. இந்த விமானங்கள் செக்கென்ட-ஹேன்ட் விமானங்கள் ஆகும் என்பதும், இதற்கு ரஷ்யாவிடம் இருந்து நேரடியான கடன் கிடைக்கிறது என்பதும், இதே வகை விமானங்களை, இந்தியா வாங்கியதும், பின்னர் அதை திருப்பி கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

05-வது இடத்தில் வியட்நாம்.!

05-வது இடத்தில் வியட்நாம்.!

ஆயுதங்கள் வாங்கிய மொத்த தொகை: 461 மில்லியன் டாலர்கள்.

சில முக்கிய கொள்முதல்: ஆறு ரஷியன் கிலோ கிளாஸ் டைப் 636 நீர்மூழ்கிக் கப்பல்கள், 64 ரஷ்ய டி-90எஸ் டாங்கிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது, அவைகள் இன்னும் வழங்கப்படவில்லை.

04-வது இடத்தில் அல்ஜீரியா.!

04-வது இடத்தில் அல்ஜீரியா.!

ஆயுதங்கள் வாங்கிய மொத்த தொகை: 795 மில்லியன் டாலர்கள்.

சில முக்கிய கொள்முதல்: 42 ரஷியன் மி-28என் போர் ஹெலிகாப்டர்கள், அதில் 30 ஹெலிகாப்டர்கள், 2016 மற்றும் 2017-க்கு இடையில் வழங்கப்பட்டது. மேலும் 8 மி-26 போக்குவரத்து ஹெலிகாப்டர்களை வாங்கியுள்ளது. மேலும் இரண்டு ரஷ்ய கிலோ கிளாஸ் டைப் 636 நீர்மூழ்கிக் கப்பல்கள்களை ஆர்டர் செய்துள்ளது. அது 2018 ஆம் ஆண்டில் டெலிவரி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

03-வது இடத்தில் சீனா.!

03-வது இடத்தில் சீனா.!

ஆயுதங்கள் வாங்கிய மொத்த தொகை: 859 மில்லியன் டாலர்கள்.

சில முக்கிய கொள்முதல்: 24 ரஷ்ய சு-35 போர் விமானங்கள், அதில் 14 விமானங்கள் 2016 மற்றும் 2017 ஆகியவைகளுக்கு இடையில் வழங்கப்பட்டுள்ளது. தவிர சுமார் 3 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆறு ரஷ்ய எஸ்-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை ஆர்டர் செய்துள்ளது. அவைகள் அடுத்த 2018-ல் டெலிவரி செய்யப்படலாம். அதில் ஒன்று 2018-ன் ஜனவரி மாதம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Nuclear Weapons : எந்தெந்த நாடுகளிடம் எத்தனை அணுவாயுதங்கள் உள்ளன.? இந்தியாவின் நிலை என்ன.?
02-வது இடத்தில் எகிப்து.!

02-வது இடத்தில் எகிப்து.!

ஆயுதங்கள் வாங்கிய மொத்த தொகை: 1.111 பில்லியன் டாலர்கள்.

சில முக்கிய கொள்முதல்: 46 கா-52 போர் ஹெலிகாப்டர்கள் மற்றும் 50 மிஜி -29எம் போர் விமானங்கள், உடன் கடந்த 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில், ஏராளமான சாம்ஸ் ஏவுகணைகள் மற்றும் போர் ஹெலிகாப்டர்களுக்கான பல்வேறு வகையான ஏவுகணைகளையும் எகிப்து வாங்கியுள்ளது, அதில் பலவும் 2017-ல் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

01-வது இடத்தில் இந்தியா.!

01-வது இடத்தில் இந்தியா.!

ஆயுதங்கள் வாங்கிய மொத்த தொகை: 1.893 பில்லியன் டாலர்கள்.

சில முக்கிய கொள்முதல் : கடந்த 2012 ஆம் ஆண்டில், 42 ரஷ்யன் சு-30எம்கே பைட்டர் ஜெட் விமானங்களை, சுமார் 1.6 பில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கியது. இதில் 25 சதவீதம் 2016-2017-ல் வழங்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டில் இரண்டு ரஷ்ய ஏ50-எஹெல் வாங்கியுள்ளதுடன், மிக் -29எஸ்எம்டிகளையும், உடன் சில லைட் மாற்று ட்ரான்ஸ்போர்ட் ஹெலிகாப்டர்களையும் வாங்கியுள்ளது.

இந்தியா கடந்த சில ஆண்டுகளில் சுமார் 1,000 டி-90 டாங்கிகளை ரஷ்யாவிடம் இருந்து வாங்கியுள்ளது. அதில் 220 டாங்கிகள் டெலிவரியை சந்தித்துள்ளது. 2017 ஆம் ஆண்டில் 5 பில்லியன் டாலர் மதிப்பில், ஐந்து ரஷ்ய எஸ்-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை வாங்க முடிவு செய்துள்ளது. உடன் கடந்த 2016-ல் ஒரு அகுலா டைப் 971 நீர்மூழ்கிக் கப்பலையும் ஆர்ட்ர் செய்துள்ளது, அடு அடுத்த 2022-ல் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
The top 10 countries that bought Russia's hi-tech and most powerful weapons in 2017. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X