அதீத வெப்பம்! 80 ஆண்டுகளுக்கு முன்னதாகவே உருகும் உலகின் தடிமனான பனிப்பாறை!

|

உலகின் அடர்த்தியான பனிப்பாறை காலநிலை மாற்றத்தின் விளைவுகளுக்கு அடிபணிந்துள்ளது.நாசாவின் பூமி ஆய்வகத்தால் வெளியிடப்பட்ட படங்களின் தொகுப்பு, அலாஸ்காவில் உள்ள டாகு பனிப்பாறை 70 ஆண்டுகளில் முதல் முறையாக உருகியிருப்பதை காட்டுகிறது.

 பனிப்பாறை

ஆல்பைன் பனிப்பாறை ஒரு நாள் பின்வாங்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ள நிலையில், ஆனால் ஏற்கனவே கணித்ததிற்கு 80 ஆண்டுகள் முன்னதாகவே நிறை குறைந்துள்ளது என்கின்றனர்.

கல்லூரியின் சுற்றுச்சூழல் அறிவியல்

நிக்கோல்ஸ் கல்லூரியின் சுற்றுச்சூழல் அறிவியல் பேராசிரியரும், வடக்கு அடுக்கு பனிப்பாறை காலநிலை திட்டத்தின் இயக்குநருமான டாக்டர் மவுரி பெல்டோ கடந்த 30 ஆண்டுகளாக டாகுவைப் ஆராய்ந்து வரும் நிலையில், இது நூற்றாண்டு முழுவதும் தொடர்ந்து விரிவடையும் என்று நம்புகிறார்.ஏனெனில் இது 1946 முதல் 1988 வரை ஆண்டுக்கு 1 அடி என நிறை பெற்றது குறிப்பிடத்தக்கது .

ஆன்க்கர் சவுண்ட்கோர் லிபர்ட்டி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்! விலை என்ன தெரியுமா?ஆன்க்கர் சவுண்ட்கோர் லிபர்ட்டி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்! விலை என்ன தெரியுமா?

தடிமனாகும்

இருப்பினும் அந்த தடிமனாகும் செயல்முறை 1989 ல் குறைந்து, 2013 முதல் 2018 வரை விரிவாக்கம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. கடந்த ஆண்டு இது பின்வாங்குவதற்கான தெளிவான அறிகுறிகளைக் காட்டத் தொடங்கியது. அலாஸ்காவின் அதிகபட்ச கோடைகால வெப்பநிலையுடன் இது தொடர்புடையது என பெல்டோ கூறினார்.

 போகிறது

"டாகுவில் நிறை சமநிலை மிகவும் நேர்மறையாக இருப்பதால் அது இந்நூற்றாண்டு முழுமைக்கு தொடர்ந்து முன்னேறும் என்று நாங்கள் நினைத்தோம். பெரும்பாலும் பின்வாங்கத் தொடங்குவதற்கு முன்பு, பனிப்பாறைகள் சில ஆண்டுகளாக முன்னேறுவதை நிறுத்திவிடும். டாகு இவ்வளவு விரைவாக பின்வாங்கப் போகிறது என்று நம்மில் பெரும்பாலோர் நினைத்ததாக நான் நினைக்கவில்லை" என்றார் பெல்டோ.

 மிகப்பெரிய விஷயம்.

கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக உலகெங்கிலும் உள்ள 250 மிகப்பெரிய பனிப்பாறைகளை பெல்டோ கவனித்து வருகிறார். பின்வாங்குவதற்கான அறிகுறிகளைக் காட்டாத ஒரே ஒரு பனிப்பாறை டாகு மட்டுமே.


"இது எனக்கு ஒரு மிகப்பெரிய விஷயம். ஏனென்றால் இந்த ஒரு பனிப்பாறை நான் விடாமல் கவனித்த ஒன்றாக இருந்தது.ஆனால் இனி இல்லை. இது காலநிலை மாற்றத்தை ஏற்படுத்தும் மதிப்பெண்: 250 மற்றும் ஆல்பைன் பனிப்பாறைகள்: 0 " என பெல்டோ கூறினார்.

நாசாவின்

நாசாவின் பூமி ஆய்வகத்திலிருந்து கிடைத்த படங்களைப் பயன்படுத்தி காலநிலை மாற்றத்தின் விளைவுகளை பெல்டோ கண்டுபிடித்தார். இது நிலையற்ற பனிப்பொழிவின் மாற்றங்களை பனிகோட்டின் மூலம் பகுப்பாய்வு செய்ய அனுமதித்தது.


கோடையின் முடிவில் பனிக்கோட்டின் உயரம், பனிப்பாறை சம அளவு உருகுவதையும் பனி திரட்டலையும் பெற்ற இடத்தைக் குறிக்கிறது.

பனிப்பாறை

பனிப்பாறை ஒரு பருவத்தில் பனி திரட்டப்படுவதை விட அதிகமாக உருகுவதை அனுபவித்தால், பனிப்பாறையின் பனிக்கோடு அதிக உயரத்திற்கு நகர்கிறது.

பனிக்கோட்டின் மாற்றத்தைக் கண்காணிப்பதன் மூலம் பனிப்பாறை நிறையின் நிகர மாற்றங்களை ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட முடியும். இதையே பெல்டோவால் படங்களில் காண முடிந்தது.


உலகின் மிக அடர்த்தியான பனிப்பாறை என்று கருதப்படும் டாகு மேலிருந்து கீழாக 4,860 அடி அளவைக் கொண்டுள்ளது. மேலும் இது ஜூனாவ் ஐஸ்ஃபீல்டில் மிகப்பெரியது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
The thickest glacier of the world that melted 80 years ago: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X