Home
Scitech

தொடர்ந்து 16வது நாளாக சூரியனில் மாற்றம்! பூமிக்கு ஆபத்தா?

By Gizbot Bureau

நாசாவின் புகைப்படங்கள் மூலம் சூரியனின் முகம் எந்தவொரு சூரியப்புள்ளிகளும் இல்லாமல் முழுமையாக வெறுமையாக இருப்பது போல் தெரிகிறது. இதன் மூலம் சூரியனின் சுழற்சியில் சோலார் மினிமம் என்ற நிலையை அடைந்ததை குறிக்கிறது. சோலார் மினிமம் என்றழைக்கப்படும் காலகட்டமானது சூரியனின் செயல்பாடு குறைவதை குறிக்கும் மற்றும் ஒவ்வொரு பதினோரு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த நிகழ்வு நடக்கின்றன. இந்த நேரத்தில் சூரியப்புள்ளிகள் மற்றும் சூரிய எரிப்பு குறைவாகவே இருக்கும்.

மின் கோபுரங்களை கூட செயலிழக்கச்செய்யும்

மின் கோபுரங்களை கூட செயலிழக்கச்செய்யும்

சூரியனின் வேறொரு வன்முறை மேற்பரப்பிற்கு நேர்மாறாக ஒரு அமைதியான சூழ்நிலை நிலவும் மற்றும் கிட்டத்தட்ட செயல்படாத தோற்றத்தை எடுக்கும். ஆனால் இந்த அமைதியான சூழல் வித்திடும் காந்தப்புயல், செயற்கைக்கோள்களை குறுக்கிடும், விமான பயணத்தை பாதிக்கும் மற்றும் மின் கோபுரங்களை கூட செயலிழக்கச்செய்யும்.

சூரியப்புள்ளிகள் உருவாகும்

சூரியப்புள்ளிகள் உருவாகும்

இந்த சுழற்சியின் உச்சமான சோலார் மேக்ஸிமம் நிலையில்,சூரியனில் தொடர்ந்து சூரியப்புள்ளிகள் உருவாகும். அவற்றில் சில வியாழன் கிரகத்தை போன்று பெரியதாக இருக்கும். இது நமது கிரகத்திற்கு எந்தவொரு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்றாலும், இது வளிமண்டலத்திற்கு வெளியில் விண்வெளி வீரர்கள் மற்றும் செயற்கைக்கோள்களுக்கு ஆபத்துக்களை உருவாக்கும் காந்த புயல்கள் உருவாக காரணமாக இருக்கலாம்.

ஸ்பேஸ் வெதர்

ஸ்பேஸ் வெதர்

ஸ்பேஸ் வெதர் என்ற இணையதளம் இதுகுறித்து குறிப்பிடுகையில், 'சூரியன் தொடர்ச்சியாக 16 நாட்களாக சூரியப்புள்ளிகள் ஏதும் இல்லாமல் இருப்பது, சோலார் மினிமம் நிகழ்வு நடப்பதற்கான ஒரு அறிகுறி. பலர் சோலார் மினிமம் நிகழ்வு சுவாரஸ்யமில்லாதது என்று நினைக்கிறார்கள். ஆனால் அப்படி இல்லை. சூரிய சுழற்சியின் இந்த காலக்கட்டம் சூரியனின் வளிமண்டலத்தில் கூடுதல் காஸ்மிக் கதிர்கள் மற்றும் நீண்ட கால துளைகள் ஆகியவற்றிற்கு வழிவகுக்கிறது' என கூறுகிறது.

கடுமையான வெடிப்புகளைக் காண்கிறோம்

கடுமையான வெடிப்புகளைக் காண்கிறோம்

சூரியன் சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு சோலார் மினிமம் நிகழ்வில் இருந்து திரும்பும் போது, சூரியனில் அதிகமான கடுமையான வெடிப்புகளைக் காண்கிறோம். சூரியன் தற்போதைய சோலார் மினிமம் என்ற காலக்கட்டத்தை கடந்தபிறகு , அடுத்த சில ஆண்டுகளில் வெடிப்புப் புனரமைப்புகள் போன்ற சூரிய செயல்பாடுகள் மிகவும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.' என நாசா எச்சரித்துள்ளது.

சோலார் மினிமம்

நாசா விண்வெளி நிறுவனம் 2011 ல் சோலார் டைனமிக் ஆய்வகத்தால் 'அசுரத்தனமான' சூரியனின் முக்கியத்துவ பதிவுகள் தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்களில் சோலார் மினிமம் அதன் முடிவை அடைந்தவுடன் நாம் என்ன எதிர்பார்க்க வேண்டும் என காண்பிக்கப்பட்டுள்ளது.

 வளிமண்டலத்தில் தற்காலிக குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது

வளிமண்டலத்தில் தற்காலிக குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது

இந்த சோலார் மினிமம் என்ற சூரிய மந்தநிலையின் போது பெரும்பாலும் பூமியின் வளிமண்டலத்தில் தற்காலிக குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சூரியன் 1650 மற்றும் 1710 க்கு இடையில் சோலார் மினிமம் நிலையில் நுழைந்த போது,பூமி ஒரு 'ஆழமான உறைநிலையை' அடைந்தது என்று நாசா கூறுகிறது.

சூரியப்புள்ளிகளே தோன்றின

சூரியப்புள்ளிகளே தோன்றின

சூரியனின் அமைதியான கட்டம் என்றழைக்கப்படும் மாண்டர் மினிமம் நிலையில் நுழைந்த போது, 1650 முதல் 1710 வரை, வடக்கு அரைக்கோளத்தின் பெரும்பகுதி முழுவதும் வெப்பநிலை சரிந்தது. இந்த காலகட்டத்தில், சூரியனின் மேற்பரப்பில் மிகக் குறைவான சூரியப்புள்ளிகளே தோன்றின. மேலும் சூரியனின் ஒட்டுமொத்த பிரகாசமும் சிறிதளவு குறைந்தது.

ஆல்பைன் பனிப்பாறைகள்

ஆல்பைன் பனிப்பாறைகள்

ஏற்கனவே லிட்டில் ஐஸ் ஏஜ் என்றழைக்கப்படும் சாதாரணத்தை விட குளிர்ச்சியான காலக்கட்டத்தில் உள்ள ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா ஆகியவை ஒரு ஆழமான உறைநிலைக்கு சென்றன. ஆல்பைன் பனிப்பாறைகள் வேலி பார்ம்லேண்ட் வரை விரிவடைந்தன; ஆர்க்டிக் இருந்து பனி தெற்கு வரை நீண்டது; மற்றும் நெதர்லாந்தில் பிரபலமான கால்வாய்கள் இன்றைக்கு அரிதான ஒரு நிகழ்வான உறைநிலைக்கு தொடர்ந்து சென்றன.

 'இயற்கையான வெப்ப நுட்பம்'

'இயற்கையான வெப்ப நுட்பம்'

சூரியன் சோலார் மினிமம் நிலையில் இருந்து சோலார் மேக்ஸிமம் நிலைக்கு ஒவ்வொரு பதினோரு ஆண்டுகளுக்கும் ஒருமுறை மாறுகிறது. சோலார் மேக்ஸிமம் நிகழ்வின் போது, சூரியப்புள்ளிகள் மற்றும் சூரிய கதிர்கள் தீவிரமாக அதிகரிக்கும், அதிகமான வெப்பநிலை மேலும் கீழுமாக உருவாக்கி கிரகத்தை வெப்பமாக்குகிறது.

2014 ல் சூரியன் ஒரு பெரிய எண்ணிக்கையிலான சூரியப்புள்ளிகளை சந்தித்தபோது, 2019 முதல் 2020 வரை சோலார் மினிமமை எதிர்கொள்வோம் என நாசா கூறியது.

சூரியன் மறையும் போது 'இயற்கையான வெப்ப நுட்பம்' காரணமாக சோலார் மினிமம் நிகழ்வில் குளிர்ந்த வெப்பநிலை நிலவும் என வானியலாளர்கள் கூறுகின்றனர் .

Best Mobiles in India

English summary
the sun has been without spots for 16 consecutive days : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X