Just In
- 22 hrs ago
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- 1 day ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- 1 day ago
ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI வெளியிட்ட புது அறிவிப்பு.! என்ன தெரியுமா?
- 1 day ago
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
Don't Miss
- News
லவ் ஜிகாத்.. கட்டாய மதமாற்றம்..ஆர்எஸ்எஸ் பிரம்மாண்ட பேரணி - எதிர்ப்பு கோஷத்தால் பதற்றமான மும்பை
- Movies
பதான் பாக்ஸ் ஆபிஸ்: முதல் வாரத்தில் 400 கோடி வசூல்... ஷாருக்கானின் சீக்ரெட் ஆஃப் சக்சஸ் இதுதானா?
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் எப்போதும் வெற்றிபெறும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம்..உங்க ராசி இதுல இருக்கா
- Sports
இதெல்லாம் ஒரு பிட்ச்-ஆ? பிசிசிஐ மீது பாய்ந்த ஹர்திக் பாண்ட்யா.. 2வது டி20 வெற்றி குறித்து அதிருப்தி
- Automobiles
டொயோட்டா காரை அப்படியே காப்பி அடித்து புதிய காரை உருவாக்கும் மாருதி! பெரிய குடும்பங்களுக்காக சூப்பர் முயற்சி!
- Finance
பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
நாசாவின் செவ்வாய் புகைப்படத்தில் மனித எலும்புத்துண்டு! உண்மை இதோ..
இந்த மாதத்தில் டேப்லாய்டுகளில் விசித்திரமாக மீண்டும் தோன்றிய 2014ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட செவ்வாய் கிரக புகைப்படத்தில், அந்த சிவப்பு கிரகத்தின் இடிபாடுகளுக்கு மத்தியில் காணப்படுவது தொடை எலும்புத்துண்டு அல்ல என தற்போது தெரியவந்துள்ளது. இன்றுவரை இதுபோன்ற எல்லா புகைப்படங்களையும் போலவே, நீங்கள் காணும் பொருளும் பழைய வெற்று செவ்வாய் பாறை மட்டுமே. மேலும் ஆறு ஆண்டுகளுக்கு முன்பே நாசா அதை நீக்கியது.

14 ஆகஸ்ட் 2014 அன்று கியூரியாசிட்டி ரோவரின் மாஸ்ட்கேமைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட இந்த புகைப்படம், செவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் உயிரினங்கள் இருந்தற என்பதற்கான ஆதாரமாக சதி கோட்பாட்டாளர்களிடையே வேகமாக பரவியதால், இது விண்வெளி நிறுவனத்தை சாதனை படைக்க தூண்டியது.

"மார்ஸ் ரோவர் கியூரியாசிட்டி அதன் மாஸ்ட்கேமைப் பயன்படுத்தி பார்க்கும்போது, இந்த செவ்வாய் பாறை தொடை எலும்பு போல தோற்றமளிக்கும். மிஷன் சயின்ஸ் குழு உறுப்பினர்கள் அதன் வடிவமானது அரிப்பு, காற்று அல்லது நீர் போன்றவற்றால் செதுக்கப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறார்கள்" என்று நாசா செய்தித் தொடர்பாளர் தனது சுருக்கமான வலைப்பதிவு இடுகையில் குறிப்பிட்டுள்ளார்.

"செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் எப்போதாவது இருந்திருந்தால், அது நுண்ணுயிரிகள் எனப்படும் சிறிய எளிய உயிர் வடிவங்களாக தான் இருக்கும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்கள். செவ்வாய் கிரகத்தில் அதன் வளிமண்டலத்திலும் மற்ற இடங்களிலும் மிகவும் சிக்கலான உயிரினங்கள் வாழ போதுமான ஆக்ஸிஜன் இருந்திருக்க வாய்ப்பில்லை. இதனால் பெரிய புதைபடிவங்களுக்கு சாத்தியமில்லை." என்கிறார் அவர்.

சீரற்ற உள்ளமைவுகளில் வடிவங்களைப் பார்ப்பது ஒரு புதிய நிகழ்வு அல்ல. நீங்கள் உணராமல் ஒவ்வொரு நாளும் அதைச் செய்யலாம். இது உங்கள் மின் நிலையத்தில் முகம் அல்லது உங்கள் குளியலறை கதவில் சோப்பு கறையில் உங்கள் உள்ளங்கை வடிவம் போன்றது. பரேடோலியா என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வு, மூளையின் சில பகுதிகள் காட்சித் தகவல்களைச் செயலாக்கி உங்கள் மூளையின் மற்ற பகுதிகளைப் அடையும் முன்பு முடிவுப்பகுதிக்கு செல்லும்போது இது நிகழும் என்று கருதப்படுகிறது.

இங்கே பூமியில் பெரும்பாலான மக்கள் தங்கள் பரேடோலியாவை அது என்னவென்று அடையாளம் காண்கிறார்கள். ஆனால் சில காரணங்களால், ஒருவேளை நாம் அங்கு சென்று கேள்விக்குரிய பொருள்களைத் துளைக்க முடியாது என்பதால், செவ்வாய் கிரகத்தில் உள்ள பரிடோலியா என்பது சதி கோட்பாட்டாளர்களுக்கு வெறும் வாய்க்கு கிடைத்த அவல் போல .

பல பாறைகள் பண்டைய வாழ்க்கையின் அறிகுறிகளைப் பற்றியோ அல்லது செவ்வாய் கிரகத்தில் முழுக்க முழுக்க நாகரிகங்களைப் பற்றியோ ஆழமான சந்தேகங்களை தூண்டின. 1976 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட சிடோனியா என்ற பகுதியின் மிகவும் பிரபலமான ஒரு புகைப்படத்தில், ஒரு முகத்தின் பிரம்மாண்டமான சிற்பத்தை போல காண்பித்தது. (பின்னர் உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்கள் அதைக் வெறும் பாறை உருவாக்கம் என நிரூபித்தது).

செவ்வாய் பிக்ஃபுட், செவ்வாய் பீரங்கி, செவ்வாய் கரண்டி, செவ்வாய் பெண் போர்வீரர் மற்றும் செவ்வாய் "அசீரிய கடவுள்" ஆகியவையும் உள்ளன. கடந்த ஆண்டு ஒரு விஞ்ஞானி செவ்வாய் கிரகத்தில் புதைபடிவ பூச்சிகளை அடையாளம் கண்டதாகக் கூறினார். மற்றொருவர் காளான்களைக் கண்டுபிடித்ததாகக் கூறினார். ஆனால் இந்த படங்கள் வானிலையால் அரிக்கப்பட்ட பாறைகளைத் தவிர வேறு எதையும் காட்டுகின்றன என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

நான்கு வெற்றிகரமான ரோவர்கள் மற்றும் ஐந்து வெற்றிகரமான லேண்டர்கள் உட்பட 1960 களில் இருந்து நாம் செவ்வாய் கிரகத்திற்கு பல்வேறு விண்கலங்களை அனுப்பி வருகிறோம். அந்த தூசி நிறைந்த சிவப்பு பாறைப் பந்தில் உயிரிகளின் அறிகுறிகளைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சிகள் செய்கிறார்கள். வேற்று கிரக வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்வது கண்கவருதலுக்காக மட்டுமல்ல, நம் பூமி மட்டுமே இந்த பிரபஞ்சத்தில் தனித்துவமானது அல்ல என்பதற்கு நம்பமுடியாத சான்றாக இருக்கும்.

நம் முயற்சிகள் தற்போது நுண்ணுயிரிகளில் கவனம் செலுத்துகின்றன. நாசா ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, செவ்வாய் சூழல் அநேகமாக சிக்கலான உயிரிகளுக்கு ஒருபோதும் உகந்ததாக இருக்காது மற்றும் இருந்ததில்லை. கடந்த சில பில்லியன் ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்தில் மிகவும் சிக்கலான உயிரிகள் செழித்திருந்தால், நமது ரோவர்கள் மற்றும் சுற்றுப்பாதை விண்கலங்களுக்கும் அதற்கு எந்த ஆதாரமும் ஏன் கிடைக்கவில்லை.

இந்த கண்டறிதலை முதன்முதலாக யார் செய்தாலும் அது வரலாற்றில் நிலைத்திருப்பர் (மற்றும் நோபல் பரிசுக்கு மிகவும் வலுவான வேட்பாளராக இருக்க வேண்டும்); செவ்வாய் கிரகத்தின் உயிர் பற்றிய ஆதாரங்களை மறைப்பதில் விஞ்ஞானிகளுக்கு எந்த ஆர்வமும் இல்லை.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470