Home
Scitech

இந்தியாவில் இணைய இணைப்பு 50 கோடியை தாண்டியது.!

இந்தியா சூப்பர் ஹைவே எனப்படும் அதி விரைவு இணைய சாலையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது. மேலும், 4ஜியையும் தாண்டி தற்போது 5 ஜியில் சோதனை செய்து வருகின்றது.

இந்தியாவில் இணைய இணைப்புகளின் எண்ணிக்கை 50 கோடியை தாண்டியுள்ளது. இதற்கு இந்திய மக்கள் தொகையும் ஒரு பெரும் காரணமாகும். மேலும்,
இந்தியாவில் கற்போர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இணைய இணைப்பு 50 கோடியை தாண்டியது.!

இந்தியா சூப்பர் ஹைவே எனப்படும் அதி விரைவு இணைய சாலையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது. மேலும், 4ஜியையும் தாண்டி தற்போது 5 ஜியில் சோதனை செய்து வருகின்றது. தொழில் நுட்ப வளர்ச்சி மற்றும் பயன்பாடும் அதிகரித்துள்ளது.

 34 கோடி இணைப்புகள்:

34 கோடி இணைப்புகள்:

2018ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் இணைய இணைப்புகளின் எண்ணிக்கையை 50 கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக, மத்திய அரசு கடந்த 2015ஆம் ஆண்டில் கூறியிருந்தது. 2016ஆம் ஆண்டு மார்ச் நிலவரப்படி இந்தியாவில் 34 கோடி இணைய இணைப்புகள் இருந்தன.

 49 கோடி இணைய இணைப்புகள்:

49 கோடி இணைய இணைப்புகள்:

இது 2017 மார்ச் நிலவரப்படி 42 கோடி இணைய இணைப்புகளாக உயர்ந்தது. கடந்த மார்ச் நிலவரப்படி 49 கோடி இணைய இணைப்புகள் இருந்தன. இந்நிலையில், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அளித்துள்ள தகவலின்படி, கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி, இந்தியாவில் 56 கோடி இணைய இணைப்புகள் உள்ளன.

56  கோடி இணைப்பு:

56 கோடி இணைப்பு:

இந்த 56 கோடி இணைப்புகளில், 64 சதவீதம் அதாவது 36 கோடி இணைப்புகள் நகர்ப்புறங்களிலும், 36 சதவீத இணைப்புகள் ஊரகப் பகுதிகளிலும் உள்ளன.

20 கோடி இணைப்புகள்:

20 கோடி இணைப்புகள்:

இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த இணைய இணைப்புகளில், கர்நாடகம், தமிழகம், ஆந்திரம் மற்றும் தெலுங்கானா, குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் 20 கோடி இணைப்புகள் உள்ளன.

45% அதிகரிப்பு:

45% அதிகரிப்பு:

2016ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது தமிழகத்தில் இணைய இணைப்புகளின் எண்ணிக்கை 45 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
The Number Of Internet Connections In India Exceeded 50 Crores : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X