அமெரிக்க அதிபரின் அருகிலேயே இருக்கும் அந்த கருப்பு சூட்கேஸுக்குள் என்ன இருக்கிறது.?

|

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஹில்லாரி கிளின்டன், " டோனால்ட் டிரம்ப்பின் விரல்களின் அருகில் "புஃட்பால் பாக்ஸ்" என்றழைக்கப்டும் "கருப்புப்பெட்டி" இருக்க வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களா.? என்று மக்களை பார்த்து கேட்கிறார். மக்கள் குழப்பமான மனநிலையுடன் அந்த கேள்வியை எதிர்நோக்குகின்றனர்.

அமெரிக்க அதிபரின் அருகிலேயே இருக்கும் அந்த கருப்பு சூட்கேஸுக்குள்.??

அப்படி என்னதான் இருக்கிறது அந்த கருப்பு பெட்டிக்குள்.? அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ஒருவருடன் 'எப்போதுமே' உடன் இருக்கும், அவர் எங்கு சென்றாலும் பின்தொடரும் அந்த கருப்பு சூட்கேஸுக்குள் அபப்டி என்ன தான் இருக்கிறது.?

தி பட்டன்

தி பட்டன்

'ஃபுட்பால்' (Footbaal) என்று பொதுவாக அழைக்கப்படும் அந்த கருப்பு பெட்டிக்கு - அட்டாமிக் ஃபுட்பால் (Atomic Football), தி பட்டன் (the Button), தி பிளாக் பாக்ஸ் (The Black Box), அதிபரின் எம்ர்ஜென்சி தோள் பை (President's emergency satchel) என பல பெயர்கள் உண்டு.

போர் அபாயம் என்றாலோ

போர் அபாயம் என்றாலோ

அமெரிக்க அதிபர் எங்கு சென்றாலும் கூடவே எடுத்துச்செல்லப்படும் இந்த கருப்பு லெதர் சூட்கேஸூக்குள் தான் எதாவதொரு அவசர நிலை என்றாலோ அல்லது போர் அபாயம் என்றாலோ, எந்த இடத்தில் இருந்தபடியும் ஒரு அணு ஆயுத தாக்குதல் நிகழ்த்த அனுமதி வழங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கட்டளை அறை

கட்டளை அறை

வெள்ளை மாளிகையில் இருக்கும் கட்டளை அறையான "சுட்சுவேஷன் ரூம்" (Situation Room) போன்றவைகளுக்குள் அமெரிக்க அதிபர் இல்லாத நேரத்தில், அதாவது கட்டுப்பாடு முடிவுகளை எடுக்க அதிபர் வெள்ளை மாளிகையில் இல்லாத பட்சத்தில் தான் இது பயன்படுத்தப்படும்.

கருப்பு புத்தகம்

கருப்பு புத்தகம்

பெரும்பாலானோர்கள் இந்த கருப்பு பைக்குள், உலகையே அணு ஆயுத தாக்குதல் மூலம் அழிக்கும் சக்திகொண்ட ஒரு சிவப்பு பட்டன் இருக்கும், அதை அழுத்தினால் அவ்வளவு தான் என்று நம்புகிறார்கள். ஆனால் அதில் இருப்பதோ 4 சமாச்சாரங்கள் தானாம். அந்த பெட்டிக்குள், பதிலடி அணு ஆயுத தாக்குதல்கள் நிகழ்த்த உதவும் கருப்பு மற்றும் சிவப்பு மையினால் குறிப்புகள் உள்ளடங்கிய 75 பக்கங்கள் கொண்ட ஒரு கருப்பு புத்தகம் ஒன்று இருக்குமாம்.

எப்படி இயக்க வேண்டும்.?

எப்படி இயக்க வேண்டும்.?

உடன், அமெரிக்க அதிபர் வசிக்கக்கூடிய வகைப்படுத்தப்பட்ட இடங்களின் (classified sites to shelter) பட்டியலை கொண்ட கருப்பு புத்தகம் ஒன்றும் இருக்குமாம். மேலும் அவசரகால அலைபரப்பு அமைப்பு (Emergency Broadcast System) எப்படி இயக்க வேண்டும் என்ற 10 பக்கங்கள் கொண்ட விளக்க புத்தகம் ஒன்றும் அந்த கருப்பு பெட்டிக்குள் இருக்குமாம்.

தூக்கி சுமக்கும் இராணுவ உதவியாளர்கள்

தூக்கி சுமக்கும் இராணுவ உதவியாளர்கள்

இறுதியாக, அங்கீகார குறியீடுகள் (authentication codes) கொண்ட ஒரு குறியீட்டு அட்டையும் (an index card) அந்த பெட்டிக்குள் இருக்குமாம். இந்த கருப்பு பெட்டியை எப்போதும் தூக்கி சுமக்கும் இராணுவ உதவியாளர்கள், அவசர காலத்தில் உடனடியாக ஒரு அணு ஆயுத தாக்குதல் நிகழ்த்துவது எப்படி என்று அதிபர்களுக்கு கற்றுக்கொடுக்க கூடிய அளவு பயிற்சி பெற்றவர்களாகத்தான் இருப்பார்களாம்.

அணு ஆயுத யுத்தத்தை கட்டவிழ்த்துவிடுவார்

அணு ஆயுத யுத்தத்தை கட்டவிழ்த்துவிடுவார்

இந்த கருப்பு பெட்டியானது, அதிபரின் வீட்டை தவிர்த்து கார், ஹெலிகாப்டர், விமானம், எலிவேட்டர் என எப்போதும் அதிபர் உடன் தான் எடுத்து செல்லப்படுமாம். சுமார் 72 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த ஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுவாயுத தாக்குதலை விட ஆயிரம் மடங்கு அதிகமான அழிவை உண்டாகும் சக்தியாக உருமாறியுள்ள அமெரிக்கா நாடானது, ட்ரம்ப் கைகளில் சிக்கினால் அவர் நிச்சயம் ஒரு அணு ஆயுத யுத்தத்தை கட்டவிழ்த்துவிடுவார் என்ற சந்தேகம் ஹில்லாரி கிளின்டனுக்கு எப்போதோ எழுந்துவிட்டது.

பின்னர் எதற்கு நாம் அதை உருவாக்கி வைத்துள்ளோம்.?

பின்னர் எதற்கு நாம் அதை உருவாக்கி வைத்துள்ளோம்.?

"நாம் தாக்கப்படும் போது, நாம் ஏன் பதிலுக்கு அணு ஆயுதம் கொண்டு தாக்க கூடாது.?", "நம்மிடம் அது (அணு ஆயுதங்கள்) இருக்கும் போது நாம் ஏன் அதை பயன்படுத்த கூடாது.?" "பின்னர் எதற்கு நாம் அதை உருவாக்கி வைத்துள்ளோம்.? ஏன் உருவாக்குகிறோம்.?" போன்ற பல வெளிப்படையான அணு ஆயுத கருத்துக்களை டிரம்ப் பேட்டிகளின் போது வெளிப்படுத்தியுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
The ‘nuclear football’ - the deadly briefcase that never leaves the president’s side. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X