புதிய பிகாசோ? அய்-டா : ரோபோட் ஆர்டிஸ்ட்.!

ரோபோக்கள் படைப்பாக்கம் மிக்கதாக இருக்க முடியுமா? பிரிட்டிஷ் கேலரி உரிமையாளர் ஐடான் மெல்லர், தான் தயாரித்துள்ள அய்-டா மூலம் இந்த கேள்விக்கான பதிலை அளிக்க முயல்கிறார்.

|

ரோபோக்கள் படைப்பாக்கம் மிக்கதாக இருக்க முடியுமா? பிரிட்டிஷ் கேலரி உரிமையாளர் ஐடான் மெல்லர், தான் தயாரித்துள்ள அய்-டா மூலம் இந்த கேள்விக்கான பதிலை அளிக்க முயல்கிறார். அய்-டா எனும் இந்த ரோபோட் தான் கண்களால் பார்ப்பதை தனது பயோனிக் கையில் உள்ள பென்சில் மூலம் வரையும் ஆற்றல் கொண்டது.

கார்ன்வாலில் உள்ள இன்ஜினியர்டு ஆர்ட்ஸ்-ன் பொறியாளர்களால் இறுதிகட்ட வடிவமைப்பில் உள்ள அய்-டாவை எதிர்நோக்கியுள்ளார் மெல்லர்.

அய்-டா

அய்-டா

பிரிட்டிஷ் கணிதமேதை மற்றும் கணிணி முன்னோடியான அடா லவ்லேஸ் அவர்களின் நினைவாக இதனை அய்-டா என அழைக்கும் மெல்லர், உலகின் முதல் "செயற்கை நுண்ணறிவுடன் கூடிய அல்ட்ரா ரியலிஸ்டிக் ரோபோட் ஆர்டிஸ்ட்" ஆன இதை மனிதர்களுக்கு நிகராக செயல்பட வைப்பது தான் தனது குறிக்கோள் என்கிறார்.

புரோஸ்டெடிக் தலை

புரோஸ்டெடிக் தலை

"அய்டா உண்மையில் வரையப் போகிறாள், அவள் வர்ணம் செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்க நினைக்கிறோம்," என்று கூறும் மெல்லர், அய்-டாவின் புரோஸ்டெடிக் தலையை கவனமாக கவனித்து, அவளுடைய புருவங்களை உருவாக்குவதற்கு தனித்தனியாக முடிகளை இணைத்து சிறப்பு நிபுணர்களால் உயிரோட்டமாக கொண்டு வந்துள்ளார்.

 இயக்கங்கள் மிகவும் உயிருள்ளவையாக இருக்கும்

இயக்கங்கள் மிகவும் உயிருள்ளவையாக இருக்கும்

"ஆனால் ஒரு செயல்திறன் கொண்ட கலைஞராக அய்-டா, பார்வையாளர்களுடன் ஈடுபாட்டுடன் இருக்க முடியும் மற்றும் உண்மையில் அவர்களது செய்திகள் முழுவதையும்பெற முடியும்; இன்றைய தொழில்நுட்பத்தைப் பற்றி அந்த கேள்விகளை எழுப்பமுடியும்". அய்-டாவின் ரோபோடிக் தலையானது ஒன்றும் செய்யாமல் மேசையின் மீது நிற்கும், ஆனால் அதன் இயக்கங்கள் மிகவும் உயிருள்ளவையாக இருக்கும்.

 கருவிழி கேமராக்கள்

கருவிழி கேமராக்கள்

அதன் கருவிழிகளில் உள்ள கேமராக்கள் மனித அம்சங்களை அடையாளம் கண்டு, அதன் கண்களைத் தொடர்புபடுத்தி, அறையைச் சுற்றி உங்களைப் பின்தொடர்வதும், நீங்கள் செய்வது போலவே வாயை திறந்து மூடிவிடுவது என அனைத்தும் செய்யும். மிக நெருக்கமாக சென்றால், அதிர்ச்சியடைந்ததை போல கண்களை சிமிட்டிக்கொண்டு பின்நோக்கி செல்லும்.

ரோபோதெஸ்பியன்

ரோபோதெஸ்பியன்

பேசவும், கேள்விகளுக்கு பதிலளிக்கவும் கூடிய அய்டா, வெளிப்டையான இயக்கங்களுடன் கூடிய "ரோபோதெஸ்பியன்" உடலமைப்பை கொண்டது என்கின்றனர் வடிவமைப்பாளர்கள்.

கம்ப்யூட்டர் விஷன்

கம்ப்யூட்டர் விஷன்

"கம்ப்யூட்டர் விஷனில் இயங்கும் ஏஐ (செயற்கை நுண்ணறிவு) மூலம் முக அம்சங்களை அடையாளம் காணவும், உங்கள் முகபாவத்தை பிரதிபலிக்கவும் ரோபோவை அனுமதிக்கின்றது," என்கிறார் என்ஜினியரிங் ஆர்ட்ஸ் -ன் டிசைன் & புரொடெசனிங் பொறியாளர் மார்கஸ் ஹோல்ட்.

மெஸ்மெர்

மெஸ்மெர்

அய்-டா தயாரிப்பாளர்கள் "மெஸ்மெர்" லைப் போன்ற ரோபோட் தொழில்நுட்பத்தைப் அதன் தலையில் பயன்படுத்துகின்றனர். அதனால் ரோபோட் கட்டமைத்து முடிந்ததும் நீண்ட கருமையான முடி, சிலிகான் தோல் மற்றும் 3D அச்சிடப்பட்ட பற்கள் மற்றும் ஈறுகள் என 2.0 படத்தில் வரும் எமிஜாக்சன் ரோபோ போல தோற்றத்தைக் கொண்டிருக்கும்.

அன்செக்யூர்டு ப்யூட்சர்ஸ்

அன்செக்யூர்டு ப்யூட்சர்ஸ்

சாப்ட்வேர் மெக்கானிக்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மேம்பாட்டை ஒருங்கிணைக்கும் மெஸ்மர், உயிரோட்டமுள்ள முகம் மற்றும் பாவனைகள் கொண்ட சிறிய மனிதவடிவிலான ரோபோவை உருவாக்கும் என்கிறார் ஹோல்டு. ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் மே மாதம் தனது துவக்க கண்காட்சியான "அன்செக்யூர்டு ப்யூட்சர்ஸ்" நடத்தவுள்ளது அய்டா. மேலும் அதன் ஓவியங்கள் நவம்பர் மாதம் லண்டனில் கண்காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.

Best Mobiles in India

English summary
The new Picasso? Meet Ai-Da the robot artist : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X