Subscribe to Gizbot

உலகத்தை பொருத்தவரை ஒரே ஒரு சோதனை, ஆனால் உள்ளுக்குள்..?!!

Written By:

முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வெளியீட்டு வாகனம் (Reusable Launch Vehicle - RLV) கடந்த திங்களன்று வெற்றிகரமாக ஏவப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.

பலமுறை மீண்டும் பயன்படுத்தக்கூடிய இந்த வெளியீட்டு வாகன சோதனையானது இஸ்ரோவிற்கு முதல்முறை என்பதும், இது ஒரு குழந்தையின் முதல் காலடி போல
தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் இஸ்ரோ இன்னும் பல மைல்கல்களை குறிவைத்து விட்டது..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
770 நொடிகள் :

#1

விண்ணில் செலுத்தப்பட்டதும் காற்று மண்டலத்தில் கிட்டத்தட்ட ஒலியின் வேகத்தை விட ஐந்து முறை அதிக வேகத்தில் நுழைந்து, சுமார் 65 கிமீ உயரத்தில் அடைந்தது.
770 நொடிகள் நீடித்த அந்த சூப்பர்சோனிக் விண்கலத்தின் பயணமானது வங்காள விரிகுடாவில் விழுந்து ஸ்ப்ளாஷ்ஆப் ஆனது.

திட்டங்கள் :

#2

இஸ்ரோவின் செயற்கைகோள்களை ஆர்.எல்.வி-க்கள் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக செலுத்துவதற்கு முன்பு இது போன்ற இன்னும் பல வெற்றிகரமான ஆர்எல்.வி திட்டங்கள் அறிமுகமாக இருகின்றன.

ஏரோ-தெர்மோடைனமிக் திறன் :

#3

நிகழ்த்தப்பட்ட ஆர்.எல்.வி சோதனையானது, மறுபயன்பாட்டை மட்டும் கருத்தில் கொண்டு பரிசோதிக்கப்படவில்லை. அதிமீயொலி வேகத்தில் மீண்டும் நுழையும் போது அதன் இறக்கைகளின் ஏரோ-தெர்மோ டைனமிக் திறன் (aero-thermodynamic characterisation) பரிசோதிக்கப்பட்டது.

தரையிறக்கும் கட்டுப்பாட்டு :

#4

உடன் கட்டுப்பாடு மற்றும் வழிகாட்டல் அமைப்பு, ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாகனம் தரையிறக்கும் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் சூடான அமைப்பு , வெப்பம் பாதுகாக்கும் வாகன ஓடுகளின் அடிப்படை தாங்கும் பகுதி.

மேக் 25 :

#5

மேலும் சோதனையின் இறுதி நோக்கமாக கருதபப்டும் மேக் 25 (Mach 25) வேகபயணமும் சாத்தியப்படுத்தி பார்க்கப்பட்டது. அதாவது காற்று மூச்சு உந்துவிசை (air-breathing propulsion) பயன்படுத்தி வாகனத்தின் செயல்திறன் சோதிக்கப்பட்டது.

10 முதல் 15 ஆண்டுகள் :

#6

இஸ்ரோவின் இந்த ஆர்.எல்.வி-யானது வர்த்தக பயன்பாட்டிற்கு வர சுமார் 10 முதல் 15 ஆண்டுகள் ஆகும் என்பதும், ரீயுசபில் ராக்கெட் தொழில்நுட்பம் ஆனது பெரும்பாலான உலக நாடுகளில் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு திட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

செலவை குறைக்கும் :

#7

ஒரு முழுமையான மிகத்திறமையான மறுபயன்பாட்டு வெளியீட்டு வாகனமானது ஒரு செயற்கைகோளை செலுத்த எடுத்துக்கொள்ளப்படும் 80 சதவிகித செலவை குறைக்க வல்லது.

மலிவு :

#8

அதுமட்டுமின்றி இஸ்ரோ ஏற்கனவே மற்ற விண்வெளி முகவர்களை விட மிக மலிவான செலவில் தான் செயற்கைகோள்களை உருவாக்கி சாதிக்கிறது என்பது நன்கு அறியப்பட்ட ஒன்றே.

ராக்கெட்களுக்கு தான் :

#9

அதிலும் இஸ்ரோவின் அதிகப்படியான செலவானது செயற்கைகோள்களை உருவாக்குவதை விட அவைகளை விண்வெளிக்குள் செலுத்த உதவும். ஒரே ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் ராக்கெட்களுக்கு தான் அதிகம் செலவு செய்கிறது.

கற்றல் :

#10

அமெரிக்க தேசிய விமானவியல் மற்றும் விண்வெளி நிர்வாகத்தின் (நாசா) தவறுகளில் இருந்து கற்று தெளிந்து செயல்பட்ட இந்தியாவின் இஸ்ரோ ஆர்.எல்.வி-யை திறம்பட வடிவமைத்துள்ளது.

கட்டிங் எட்ஜ் தொழில்நுட்பம் :

#11

குறிப்பாக நாசா போல் இல்லாது இஸ்ரோவானது கட்டிங் எட்ஜ் தொழில்நுட்பம் (cutting-edge technology) பயன்படுத்தி வாகனத்திற்கு அதிகப்படியான பாதுகாப்பை வழங்கியது.

20 முதல் 25 செயற்கைகோள்கள் :

#12

இஸ்ரோ திட்டமிட்டபடி அனைத்தும் சரியாக நடந்தால் ஒரு மறுபயன்பாட்டு வெளியீட்டு வாகனத்தை பயன்படுத்தி சுமார் 20 முதல் 25 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த முடியும்.

மேலும் படிக்க :

#13

எல்லா பயலும் இஸ்ரோகிட்ட 'ட்யூஷனுக்கு' வாங்கப்பா..!!


இதோட நிறுத்திக்கோ அதான் நல்லது : முட்டிக்கொள்ளும் அமெரிக்கா-ரஷ்யா..!

தமிழ் கிஸ்பாட் :

#14

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
ISRO’s new frontiers. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot