செவ்வாயில் பாம்பு போன்ற 'ப்ளூ டூன்ஸ்' உருவம்: என்ன அது? நாசா பரபரப்பு தகவல்.!

|

தி நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் என்று அழைக்கப்படும் நாசா செவ்வாய் கிரகத்தின் சமீபத்திய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படத்தில் சிவப்பு கிரகத்தின் மேற்பரப்பு உண்மையில் நீலமான நிறத்தில் சூழப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. செவ்வாய் கிரகத்தில் எப்படி இப்படி ஒரு நீல நிறம் சூழ்ந்தது என்று சந்தேகிக்கிறீர்களா? காரணம் இருக்கிறது, நாசா கூறிய உண்மையை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

மார்ஸ் ஒடிசி ஆர்பிட்டர் எடுத்த புதிய புகைப்படம்

மார்ஸ் ஒடிசி ஆர்பிட்டர் எடுத்த புதிய புகைப்படம்

செவ்வாய் கிரகத்தைச் சுற்றிவரும் மார்ஸ் ஒடிசி ஆர்பிட்டர் (Mars Odyssey) தான் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளது. இந்த புகைப்படத்தில் ஒடிஸி ஆர்பிட்டர் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நீலநிற குன்றுகளைக் காட்டுகிறது மற்றும் கிரகத்தின் துருவப் பகுதிகளுக்கு அருகில் இது காணப்பட்டுள்ளது. குன்றுகளின் தெளிவான மற்றும் உயர்-வரையறை படத்தைப் பெற ஒடிஸி ஆர்பிட்டரால் தெர்மல் எமிஷன் இமேஜிங் சிஸ்டம் (THEMIS) ஐப் பயன்படுத்தி படம் பிடித்துள்ளது.

'ரெட் பிளானட்டில் ப்ளூ டூன்ஸ்'

'ரெட் பிளானட்டில் ப்ளூ டூன்ஸ்'

நம்பமுடியாத விரிவான படத்தை அமெரிக்க விண்வெளி நிறுவனம் வியாழக்கிழமை 'ரெட் பிளானட்டில் ப்ளூ டூன்ஸ்' என்ற தலைப்பில் பகிர்ந்து வெளியிட்டுள்ளது. சிவப்பு நீலம் என்று இரண்டு வகையான வெவ்வேறு நிற குன்றுகள் படத்தில் காணப்படுகின்றது. இதில் வெப்பமான காலநிலையைக் குறிக்கும் வகையில் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிற குன்றுகள் படத்தில் காணப்படுகிறது. அதேபோல், செவ்வாய் கிரகத்தின் குளிர்ந்த காலநிலையைக் குறிக்கும் வகையில் நீல நிறம் அல்லது வெளிர் நிறத்தில் குளம் போன்ற குன்றுகள் படத்தில் காணப்படுகிறது.

முடிச்சுவிடுங்க: உச்சவிலை ஸ்மார்ட்போன் இப்போ இந்த விலையில்- ரூ.40,000 விலைக்குறைப்பு- இதுதான் கடைசி வாய்ப்பு!முடிச்சுவிடுங்க: உச்சவிலை ஸ்மார்ட்போன் இப்போ இந்த விலையில்- ரூ.40,000 விலைக்குறைப்பு- இதுதான் கடைசி வாய்ப்பு!

செவ்வாயில் பாம்பு உருவத்திலான வடிவங்கள்

செவ்வாயில் பாம்பு உருவத்திலான வடிவங்கள்

செவ்வாய் கிரகத்தில் உள்ள பள்ளங்களின் தளங்களில் இது போன்ற குன்றுகள் பெரும்பாலும் குவிகின்றது. ஆனால், ஏஜென்சியின் கூற்றுப்படி, இந்த குன்றுகள் காற்றினால் ஏற்பட்ட மாபெரும் சுழற்சியினால், இவை முறுக்கேறி பாம்பு உருவத்திலான வடிவத்தில் வடிவமைக்கப்பட்டு உருவெடுத்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சியூட்டும் படம் ஒடிஸி சுற்றுப்பாதையின் 20 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் ஒரு சிறப்புப் புகைப்படங்களின் ஒரு பகுதியாகும். இது வரலாற்றில் மிக நீண்ட காலமாகச் செவ்வாய்க் கிரகத்தைச் சுற்றி வரும் ஒரு விண்கலமாகும்.

நீல செவ்வாய் குன்றுகளின் படங்கள்

நீல செவ்வாய் குன்றுகளின் படங்கள்

நாசா இதற்கு முன்னர் 2018 இல் நீல செவ்வாய் குன்றுகளின் படங்களை பகிர்ந்து கொண்டது. உண்மையில், நாசா அதன் வலைத்தளம் மற்றும் சமூக ஊடக தளங்களில், விண்வெளி மற்றும் செவ்வாய் கிரகத்தின் அதிர்ச்சியூட்டும் புகைப்படங்களை இடுகையிலாவது என்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், விண்வெளியில் இருந்து நீல கிரகம் எவ்வாறு தோற்றமளிக்கிறது என்பதற்கான சில அதிர்ச்சியடையக்கூடிய படங்களை அஹென்சி வெளியிட்டது.

 நாசாவின் சமூகவலைத்தள இடுகைகள்

நாசாவின் சமூகவலைத்தள இடுகைகள்

ஐ.எஸ்.எஸ் சுற்றிக் கொண்டிருக்கும் பிரம்மாண்டமான கிரகத்தை நோக்கிய வட்ட கண்ணாடி ஜன்னலிலிருந்து படங்கள் பிடிக்கப்பட்டது. இந்த இடுகையின் தலைப்பைக் கொண்டு, நாசா தனது பின்தொடர்பவர்களுக்கு ஒரு புதிய பார்வையை வழங்கியதுடன், ஒரு விண்வெளி வீரர் தங்கள் ஒரு நாள் விடுமுறையை விண்வெளியில் எப்படி அனுபவிக்கின்றனர் என்பதை உணர்த்துவது போல படங்களைப் பகிர்ந்தனர். இது ஒரு புறம் இருக்கச் சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில் வானவில் தெரிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இன்று விற்பனைக்கு வரும் சாம்சங் கேலக்ஸி எப்12.! என்ன விலை? என்னென்ன சலுகைகள்.!இன்று விற்பனைக்கு வரும் சாம்சங் கேலக்ஸி எப்12.! என்ன விலை? என்னென்ன சலுகைகள்.!

செவ்வாய் கிரகத்தில் தோன்றிய வானவில்

செவ்வாய் கிரகத்தில் தோன்றிய வானவில்

சில நாட்களுக்கு முன்பு நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பின் அடிவானத்தைப் படம்பிடித்து அனுப்பியது. இந்த புகைப்படம் சமூகவலைத் தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த விவாதமானது செவ்வாய் கிரகத்தையோ அல்லது அதன் உள்ளடக்கங்களைக் குறித்தோ இல்லை. அந்த புகைப்படத்தில் காணப்பட்ட வானவில் போன்ற காட்சியை மையமாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. செவ்வாய் கிரகத்தில் தெரிந்தது உண்மையில் வானவில் தானா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

செவ்வாய் கிரகத்தில் வானவில் என்பது சாத்தியமா?

செவ்வாய் கிரகத்தில் வானவில் என்பது சாத்தியமா?

பெர்சவரன்ஸ் ரோவர் மூலம் பகிரப்பட்ட இந்த புகைப்படம் குறித்து சமூகவலைத் தளங்களில் பெரும் விவாதம் நடந்தது. செவ்வாய் கிரகத்தில் வானவில் என்பது சாத்தியமற்றது என ரெட்டிட் மற்றும் டிவிட்டரில் பல்வேறு கோட்பாடுகள் குறித்து நெட்டிசன்கள் விவாதித்தனர். இருப்பினும் புகைப்படத்தில் வானவில் போன்ற உருவம் காணப்பட்டது. அது செவ்வாய் கிரகத்தின் வானவில்லா அல்லது சுற்றி இருக்கும் நீர் துளிகளால் பிரதிபலிக்கும் ஒளியால் தோன்றப்பட்டவையா எனப் பல விவாதங்கள் முன்வைக்கப்பட்டன.

செவ்வாயின் வானவில் பின்னணியில் உள்ள உண்மை இது தானா?

செவ்வாயின் வானவில் பின்னணியில் உள்ள உண்மை இது தானா?

ஆனால் இங்கு போதுமான நீர் இல்லை எனவும் குளிர் நிலை காரணமாக வளிமண்டலத்தில் திரவ நீருக்கு மட்டுமே வாய்ப்புள்ளது எனவும் விவாதம் முன்வைக்கப்பட்டது. இந்தநிலையில், சமூகவலைதள விவாதத்திற்கு நாசா முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதில் செவ்வாய் கிரகத்தில் வானவில் என்பது சாத்தியமில்லை என நாசா தெளிவுபடுத்தியுள்ளது. பெர்சவரன்ஸ் பதிவு செய்யப்பட்ட இந்த புகைப்படத்தின் போது ஒளி சிதறல் லென்ஸ் எரிப்பு ஏற்பட்டு இது தோன்றியிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம்: தினசரி 2ஜிபி டேட்டா.! வியக்கவைக்கும் வேலிடிட்டி?பிஎஸ்என்எல் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம்: தினசரி 2ஜிபி டேட்டா.! வியக்கவைக்கும் வேலிடிட்டி?

செவ்வாய் கிரகத்தில் சத்தங்களைப் பதிவு செய்த பெர்சவரன்ஸ் ரோவர்

செவ்வாய் கிரகத்தில் சத்தங்களைப் பதிவு செய்த பெர்சவரன்ஸ் ரோவர்

ரோவர் பின்புற ஹஸ்காம்களில் சன்ஷேட்ஸ் அவசியம் எனக் கருதப்படவில்லை எனவே அதன்மூலம் பிடிக்கப்பட்ட காட்சிகளின் சிதறலால் இவை ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. புகைப்படங்களை கிளிக் செய்யும்போது கேமரா லென்ஸ் மூலம் ஏற்படும் "லென்ஸ் ஃபிலேர்" எனவும் இதைதவிர வேறு எதையும் படம் காட்டவில்லை என்று உண்மையைக் கூறி விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது நாசா. அதேபோல், அண்மையில் செவ்வாய் கிரகத்தில் கேட்கும் சத்தங்களைப் பதிவு செய்து அனுப்பியுள்ளது பெர்சவரன்ஸ் ரோவர். செவ்வாய் கிரகத்தின் சத்தம் எப்படி இருக்கும் என்று இப்போது நமக்கு தெரியும்.

செவ்வாய் கிரகத்தில் நாசாவின் மிகச்சிறிய ரக ஹெலிகாப்டர்

செவ்வாய் கிரகத்தில் நாசாவின் மிகச்சிறிய ரக ஹெலிகாப்டர்

மேலும் நாசா அமைப்பு தினசரி பெர்சவரன்ஸ் ரோவர் மூலம் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் அதன்மூலம் வரும் தகவல்களை அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்து வருகிறது. குறிப்பாக இந்த பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்துடன் மிகச்சிறிய ரக ஹெலிகாப்டரும் செவ்வாய்க் கிரகத்தில் தரை இறக்கப்பட்டுள்ளது. மேலும் இன்ஜெனூட்டி என்று அழைக்கப்படும் இந்த அதிநவீன சிறிய ஹெலிகாப்டர் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு ஆய்வுக்குப் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
The National Aeronautics and Space Administration NASA Shares Stunning Images of Electric Blue Dunes on Mars : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X